Archive

Archive for the ‘சினிமா விமர்சனம்’ Category

Kamal & K Viswanath’s Salangai Oli: சலங்கை ஒலி

August 6, 2011 2 comments

கமலின் ‘சலங்கை ஒலி’ – திரை விமர்சனம்

பொதுவாகவே ஒரு படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவதென்றால் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முன்னுரை சற்று நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து உற்சாகமாக முழு பதிவையும் படித்து முடிப்பார்கள். அதனால் இந்த முன்னுரைக்கு மட்டும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதிவிடுவேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்த படத்திற்கு மட்டும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி, இப்படியே யோசித்து கொண்டிருந்தால் எப்போது பதிவு போடுவது? அதனால் தான் ஒரு வழியாக இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன். இனி இந்த ‘சலங்கை ஒலியின்’ கதையை கேட்க ஆரம்பிப்போமா?

பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.


பாலுவாக கமல்ஹாசன். கமலின் அறிமுக காட்சி உண்மையிலேயே யாரும் எதிர்பாராரது. தான் பிரயாணம் செய்த ரிக்க்ஷாவை இவர் தள்ளிக்கொண்டு வரவார். அப்போதே இவரின் கதாபாத்திரத்தின் மீது ஒரு அழுத்தமான கவனம் பதிந்து விடுகிறது. இளமையில் அவ்வளவு துடிப்பாக இருந்த ஒருவன், முதுமையில் ஒரு குடிகாரனாக காட்டப்படும்போது அதற்கான காரணம் சற்று அழுத்தம் தான். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் கமல் நடிக்கும்போது அவரின் வயது 29. ஆனால் ஒரு குடிகார கிழவனாக அவரின் மேனரிசங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே தோற்ற ஒரு வயது முதிர்ந்தவரின் இயல்பை திரையில் அழகாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். தன் பத்திரிக்கை ஆபிசில் ஷைலஜாவிடம் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடி காண்பித்து ‘இது தான் சரியான அபிநயங்கள்’ என்று செய்து காட்டும் இடம், ஆஹா. அதே போல ‘தகிட ததிமி’ பாடல் காட்சியில் கிணற்றின் மீது நடனம் ஆடும் காட்சியை பார்க்கும்போது நமக்கே ‘கமல் கிணற்றில் விழுந்து விடபோகிறாரோ’ என்ற பயமாக இருக்கும். அது சினிமா ஷூட்டிங்காக இருந்தாலும், கொட்டும் மழையில் கிணற்றின் மேல் லாவகமாக நாட்டியமாடி அவர் ஒரு ‘விழா நாயகன்’ என்று நிருபித்திருப்பார். இந்த படத்தில் கதாநாயகனின் பங்கு சற்று பெரியது தான். ஆனால் அதை கமல் போன்ற சிறந்த நடிகனால் தான் தாங்கி பிடிக்க முடியும். அதை அவர் சரியாக செய்துள்ளார்.


மாதவியாக ஜெயப்ரதா. ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவுக்கும், ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவுக்கும் எவ்வளவு வித்யாசங்கள்? இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? ‘தேவதை’ கதாபாத்திரம். ஆம். பாலு என்ற ஒரு இளைஞனின் திறமையை எப்படியாவது இந்த உலகிற்கு கொண்டு போகவேண்டும் என்று அவனுக்கு உதவுகிறாள் மாதவி. அந்த பாலுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையை போலவே தென்படுகிறாள். ஜெயப்ரதாவின் நடிப்பிற்கு இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை சாம்பிளாக சொல்கிறேன். ‘நாத வினோதங்கள்’ பாடல் இறுதிகாட்சியில் கமல், ஜெயப்ரதா இருவரும் Audience மத்தியில் மாட்டிக்கொண்டு அல்லல்படும்படியான ஒரு காட்சியை இயக்குனர் எடுத்திருப்பார். ஆனால் அங்கு கமல், ஜெயப்ரதா இருவரை தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்த இருவரும் ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் ‘Mono Acting’ செய்திருப்பார்கள். அதில் கமல்ஹாசனுக்கு சரிசமமாக ஜெயப்ரதாவும் நடித்திருப்பார். அந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த படத்தில் இவர் ஒரு இளம்வயது பெண்ணாகவும், பின்னர் ஷைலஜாவின் அம்மாவாகவும் நடித்திருப்பார். எனக்கு ஜெயப்ரதாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கண்கள் தான். இவர் நடித்த பல காட்சிகளில் அழகாகவும், மிக ஆழமாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.


படத்தின் சிறப்பான காட்சிகள்:
கமல், தான் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மொழி தெரியாத நாட்டிய பெண்ணிடம் அபிநயத்தில் சொல்லி புரியவைப்பது.

சினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.

ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.

அகில இந்தியா நடன போட்டியின் அழைப்பிதழில் தன் பெயர் இருப்பதை பார்த்து ஜெயப்ரதாவின் கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது.
சாகும் தருவாயில் இருக்கும் தன் அம்மாவிற்காக நாட்டிய விழாவில் ஆடப்போகும் நாட்டியத்தை தன் அம்மாவிடம் அழுதுகொண்டே ஆடிக்காட்டுவது.

கமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.

ஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.

படத்தின் கேமராமேன் நிவாஸ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கம் அருமை. இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிருபித்திருக்கிறார் இசை ஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்கிறது. எனக்கு ராஜாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரின் பின்னணி இசை. மனிதர் கலக்குவார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியது திரு K. விஸ்வநாத் அவர்கள். முக்கியமாக ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவரை பற்றி எழுதாமல் விட்டால் இந்த திரை விமர்சனமே முழுமை பெறாது. அந்த நபர் S.P. பாலசுப்ரமணியம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் (ஆண் குரல்) இவரே பாடியுள்ளார். மனிதருக்கு என்ன ஒரு குரல் வளம்.

இந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை – இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் – S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.


சலங்கை ஒலி – நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்

Image and video hosting by TinyPic

சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.

என்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்குக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.

படத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள்! அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே ‘பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்’ என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து – வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது – உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு – நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே – கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் – நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும்? இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.

அதைத் தொடர்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் – அருமையான காட்சிகள்.

இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!

பிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே!

சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!

வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்
வந்தே பார்வதீப ரமேஷ்வரம்.

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே

பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்!
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்!

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன திரனனன திரதிரதிரதிரதிரதிரதிரதிர

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே

சுல்தான் said…

இதெல்லாம் படமில்லை இயல்பான நடிப்பு எப்படி இருக்கும் என்ற பாடம்.

ஷைலஜாவின் முன்னே ரகம் ரகமா பிரித்து ஆடுவதென்ன?

அதிலே கடைசியிலே காப்பி டம்ளர் பறப்தென்ன?
‘ரெண்டு தப்பு’ காட்சியென்ன?

அம்மாவின் முன்னால் ஆடியபின் கோபக்கார மாமா லட்டு தருவதென்ன?

அந்த நாட்டியத்தில் மஞ்சு பார்கவியையும் இணையாகக் காட்டி அசத்துவதென்ன?

குடிகார டான்ஸ் மாஸ்டர் பீஸ்?

நடனம் கற்றுக்கொள்ள மொழி தெரியாமல் நடன கேள்வியும் பதிலும்,

சரத்பாபு மாமனாரை காலில் மிதித்து நாட்டியம்,

தாயை தவறாக நினைக்கும் ஷைலஜாவின் கோபம்,

திவசம் பார்த்து கமல் திடுக்கிடுவது,

ராமையா… நான் சிவய்யாய்யா என்பவரின் தீர்த்தம் கிடைக்குமிடம் சொல்லும் இயல்பு,

தக தக தா… தக தா… தக தக தக தா… என அழைத்து வரச் சொல்லுதல்,

அதையெல்லாம் விட கிணற்றில் ஒற்றைக்கால் நடனமும் அந்தப்பாட்டும்,

ஷைலுவின் கிளைமேக்ஸ் நடனத்தில் ஜெயப்பிரதாவிடம் கண்க்கு சரியா என்று கண்ணால் கேட்பதும்.

இன்னும் இன்னும் எவ்வளவு!!!

படமாய்யா அது. நடிப்புக்கு பாடம்.

நான் ஒரு நாற்பது தடவையாவது பார்த்திருப்பேன் இது வரை.

Thu Oct 19, 06:12:00 PM


சலங்கை ஒலி – காவிரி மங்கை வந்தாளம்மா

ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!!

எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது!

இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.

மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ “ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு” என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை.

சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் “காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி” என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் “சிதாரா”வில் இடம் பெற்றது.

தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி


salangaioli ஹிந்தோளம்சலங்கை ஒலி படத்தில் வரும் “ஓம் நமச்சிவாய” பாடலை சிவப்பெருமான் கேட்டிருப்பின் தனக்கு பிடித்த ராகம் இனி ஹிந்தோளமே எனக்கூறியிருப்பார். “nothing but wind” என்ற album-இல் “Composer’s breath” என்ற பகுதியில் ஹரிப்ரசாத் சௌராசியாவின் குழலில் ஹிந்தோள ராகத்தை மிக திறமையாக கையாண்டிருக்கிறார் ராஜா . அந்த பகுதி இறுதியில் ராகமாலிகையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது)

Comedy Bazaar II – V for Vendakka, Vic Vega

April 13, 2006 Leave a comment

சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?

Memoirs of Geisha -Dubukku

April 11, 2006 4 comments

இவரை நான் வெளையாட்டுப் புள்ளேன்னு நெனைச்சுட்டு இருந்தேன். இவர் பார்த்த படமும், அதை அனுபவித்த விதமும், அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுகிற விதமும் வேறு மாதிரி இருக்கின்றன.

Kurosawa & Ray

April 9, 2006 Leave a comment

அகிரோ குரோசோவா வின் இகுரு (Ikuru) வையும் , சத்யஜித்§ரயின் 'பதேர் பஞ்சலி' யையும் ஒரே தட்டில் வைத்து அலசுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன். கலக்கறீங்கோ கிருஷ்ணன்.

Movie Review for Dummies – Kusumban

April 7, 2006 Leave a comment

குசும்பு செய்கிற நடையில் எழுதினாலும், நிஜமாகவே சினிமா விமர்சனம் எழுத விரும்புவோருக்குப் பயனுள்ள (கடைபிடிக்கும்?) குறிப்புகள் 🙂

Four Films – Sam

April 6, 2006 Leave a comment

கல்லூரியில் மூன்றாவது வருடம் படிக்கும் போது குரொசோவா பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவரது படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின் சினிமா பார்க்கும் ப்ழக்கம், தொட்டில் ப்ழக்கம் சுடுகாடு மட்டும் போல தொடர்ந்தது. சர்வதேச அளவில் பேசப்படும் திரைப்படங்களுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. நம் கோலிவுட்காரர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற வகையில் இதைப் பேசுகிறார்கள். இது எனக்குப் புரியவில்லை.இந்த முறை எனக்குப் பிடித்த நான்கு சர்வதேசப் படங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். 

My Mothers Castle, Mrs. Brown , White baloon , Waking Ned Devine ஆகிய நான்கு திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான, அழகான குறிப்புகள்.

Brokeback Mountain – Blogeswari

April 6, 2006 Leave a comment

ப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?நம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு? ஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கெடக்குல ன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக! அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா? அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்

இந்தப் படம் இவங்களுக்குப் புடிக்கலையாம்..அதனால, யாராவது, படத்தைப் பத்தி பேசினா, முதுகை ஒடைச்சுருவாங்களாம்.. எந்த ஊர் நியாயம் இது? 🙂

Thambi, a dissection by Shoba Shakti

April 5, 2006 1 comment

அடேங்கப்பா…

தம்பி படத்தை, இத்தனை ஆழமாக, அகலமாக அறுத்துக் கூறு போட முடியுமா?

போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ?

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?

இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன?

சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ?

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்….

பொறி பறக்கிறது..  அப்பப்ப மூச்சு விட்டுப் படிங்க..

[சுப.வீர பாண்டியன் எழுதிய விமர்சனம்]

Being Cyrus – Voice on Wings

March 31, 2006 Leave a comment

நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே.

Can't agree more… திரை விமர்சகர்களுக்கு மட்டுமல்ல; இன்னும் பலவற்றிற்கு extrapolate செய்தாலும் பொருந்தக்கூடிய அவதானிப்பு.

Pattiyal, again…

March 26, 2006 2 comments

பட்டியல் படத்துக்கு இதை விடவும் சிறப்பாக விமர்சனம் எழுதமுடியாது.

At the end, what Pattiyal represented to me was not just a good story affectingly told, but a pointer that Tamil cinema has come a long way in its representation of real people. Kosi and Selva are from the slums, and when Kosi faints, Selva sees a pot of water nearby. In an earlier film, he’d have cupped some water in his palm and sprinkled it on Kosi to revive him. Here, he just drops the pot on Kosi’s head. The gesture gets laughs, all right, but it also gets it right. The people here look and feel real. They’re rowdies, yes, but not one person has a scarf knotted around his neck or a big, fake mole on his cheek or wears a lungi propped up by a studded belt or speaks in that exaggerated Madras-thamizh lingo that Kamal Haasan uses in every other comedy of his. You’ll also be happy to know that not one person answers to the name of Jambu.

சத்தியமான வார்த்தைகள்.

ஆசாத் அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. படம் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், காட்சிகளின், களங்களின், பின்புலத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் வைக்கிறார் இங்கே..