Archive
'Nammal Thammil' ebbing down? – Sreejith Kumar
It was nothing more than a promotion of the recently released Malayalam film "Madhuchandralekha". The director of the movie Rajasenan, producer Samad Mankada, hero Jayaram and heroine Urvasi all took part in the show.
'சன் டிவி'யில் பட்டியல் திரைப்படம் இருட்டடிப்பு ஆவது போல் ஆசியாநெட்டிலும் பாரபட்சம் ஒளிர்கிறது போல?
TVC – Blogeswari
விளம்பரப் படங்கள், அதனோட script, storyboard எல்லாம் விலவரியா அலசப் போறாங்க..முதல் இடுகையிலே யாரே¡ட படங்கள் தெரியுமா? Abhinay Deo.. யாருன்னு தெரியலையா? அதாங்க, 'கறை நல்லது' சர்·ப் எக்ஸல் விளம்பரப் படம் வருதே, அதை எடுத்தவர் தான்..
"…உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் – கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க – அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்."ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா? ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே"ஸாரி சொல்லிடுச்சு" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது "கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே? சர்ஃப் எக்ஸல் – கறை நல்லது".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, "மறுபடியும் பண்ணாத"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம்,செம க்யூட்…"
சீரியஸான விஷயம்னாலும், தாய்க்குலம், ஜ்ஜ்ஜாலியான நடையிலே எழுதறாங்கோ.
தொடர்ந்து எழுதுங்கோ அம்மணீ
Sex and The City – Uthayakumar
மெட்டி ஒலி, கோலங்கள் என்ற மெகா ரோதனைகள், தமிழ்நாட்டில் மட்டுமில்லை.. சீமையிலும் உண்டாம். 'Sex and The City என்ற தொலைக்காட்சி சீரியல் குறித்து உதயகுமார் எழுதுகிறார்..
இந்த 'Sex and The City' சீரியல் முழுக்க முழுக்க நியுயார்க் சிட்டியில்ல, தனியா வாழ்ந்துக்கிட்டிருக்கிற, இந்த 'Single women' நாலு பேரை பத்தி தான். அவெங்க போடற கும்மாளம், சனி ஞாயித்துக்கிழமையில போற 'dating', ஸ்டைலா வாழ்ற வாழ்க்கையை பத்தி தான். அந்த நாலு பேரு, 'Carrie Bradshaw', 'Samantha Jones', 'Charlotte York', 'Miranda Hobbes' தான். அதில 'Carrie' யா நடிச்சிருக்கிறது 'Sarah Jessica Parker' ங்கிற நடிகை. ரொம்ப கேஷுவல். இதில அம்மணி நியூஸ் பேப்பர் காலமணிஸ்ட், கதை, கட்டுரை எழுதுவாங்க. அவங்க எழுதின நாவல் தான் இந்த 'Sex and The City'. மத்த மூணு பேருக்கும் தனி தனி கிளைக் கதை இருக்கும். எல்லாமே செக்ஸ், அந்தரங்க வாழ்க்கை, பாய் ஃபிரண்டு, ரிலேஷன்சிப், இத்யாதி, இத்யாதி.. சீரியல் முழுசும் செக்ஸ் மற்றும் காமடி!
ரொம்ப காமெடி இருக்குமாமில்லை..
Breaking News-o-mania – Ferrari Prabhu
முன்னணித் தொலைக்காட்சிகள், 'breaking news' பித்துப் பிடித்து அலைவதை, பகிடி செய்கிறார், பிரபு.. Hilarious..
சொல்ல முடியாது.. இது நிஜமாகவே நடந்தாலும் நடக்கலாம்..
Can you sing? – Vijay TV
இந்தியாவில் இருந்தால் ‘வானுயர்ந்த சோலையிலே‘ என்று ஃபீலிங்காய் பாடி முயற்சித்திருக்கலாம். நீங்களாவது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிற வழியப் பாருங்க…
Mahanadhi
ஆரம்பத்தில் காவேரி, சென்னை கூவத்தில் முடிவு என்று நதியின் மூலம் கதாபத்திரத்தின் எண்ணவோட்டத்தை சொல்கிறார் ரேவா. எல்லாரும் கமலை கவன்னிக்கிறப்ப சதிஷ் துணை நடிகர்களுடன் தொடங்குகிறார்.
இப்போ இருக்கற உலகத்தில எல்லாம் மாறிப்போச்சு கிருஷ்ணா. ‘நேர்மை’ங்கற வார்த்தை கெட்ட வார்த்தை ஆயிருச்சு. நீ ஆத்திரப்படறதில அர்த்தமே இல்ல. பொறுமையா இருக்கக் கத்துக்க. இந்தா ‘பாரதியார் கவிதைகள்’.
‘அன்பே சிவம்‘ இப்பொழுதுதான் கவனிக்கப்பட்டது. சன் டிவியில் இன்று ‘மஹாநதி’ வருகிறது.
Selvi Serial – Selvakkumar
செல்வி சீரியலில் ராதிகாவுக்கு இது வரை மூன்று கணவர்கள். இப்படியே போனால் இன்னும் எத்தனை பேர் செல்விக்கு கணவனாக வருவார்கள்? வாக்கெடுப்பு நடத்துகிறார் செல்வக்குமார்.
Your Autograph Please…
உங்க வீட்டுல எல்லாரும் மெகா சீரியல் பார்த்துட்டு மூக்கை சிந்திகிட்டே இருக்காங்களா?
மெட்டி ஒலி வர சமயத்திலே பவர் கட் ஆனா, வீட்டு அம்மணிங்களோட ரத்தக் கொதிப்பு அதிகமாகுதா?
தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் எல்லாம் இப்படி அழுது வடிஞ்சுகிட்டேதான் இருப்பாங்களான்னு மத்தவங்க கிண்டல் பண்றாங்களா?
அப்படின்னா இதைப் படிங்க… பிறகு மறக்காம இங்கே போய் உங்க ஆட்டோகிரா·ப் போடுங்க…உங்களுக்கு கோடி புண்ணியம்
Sony TV, Sun TV Web telecast
இணையம் மூலமாக இலவசமாக சன் டிவியும் ஹிந்தி ரசிகர் என்றால் சோனி டிவியும் பார்க்கும் வழியையும் சொல்கிறார் ஜான் பாஸ்கோ.
VaiKo – Chameleon
சன் டிவி மட்டுமே கண்டு களிக்கும் பலரும், காலை வேளைகளில் அலுவலுக்கு ஓடும் துரிதகதியில் ஓடுவோரும், பிற கன்னல்களில் பல நல்ல நிகழ்ச்சிகளை விட்டுவிடுகிறோம். அப்படித் தவறவிடாமல் ரசித்த வைகோ பேட்டியை ரசிக்கிறார் ‘பச்சோந்தி’.
Recent Comments