Archive

Archive for the ‘தேர்தல் 2006’ Category

Nepolian DMK Campaign – Lucky Look

April 12, 2006 2 comments

வைகோவை கலைஞரே போர்வாள் என்று சொல்லிவிட்டாரே என்று ஆதங்கப்பட்டவர் அந்த வாள் துருப்பிடித்து முனை மழுங்கி வரும்போது மறுபடியும் அறிவாலயத்தார் கூராக்கி அனுப்புகிறார் என்று குற்றம் சாட்டினார். 

மடிப்பாக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் மயிலாப்பூர் மீட்டிங்குக்கும் சென்று வருகிறார். திமுக பிரச்சார பொதுக்கூட்டம் குறித்த நேரடி ரிப்போர்ட்.

A day with Vijayakanth – Sudhish Kamath

April 9, 2006 Leave a comment

விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு

[Tip : Kaps

Alliance between Tamil Newspapers & Political Parties – Election News Watch

April 7, 2006 4 comments

அரசியல் கட்சிகளுடன் தமிழகப் பத்திரிகைகள் கூட்டணி சேர்ந்திருக்கிறது என்கிறார்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறை மாணவர்கள்.

Semma Hot Machchi…

April 7, 2006 Leave a comment

இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..

தேர்தல் நெருங்குது… வலைப்பதிவர்கள், news, views, analysis என்று புகுந்து புறப்படும் போது, இவர்களுக்கு நடுவில், வித்தியாசமாக கலக்குகிறார்கள் 'தூள்' பாலாஜி, மைக் செட் முனுசாமி & கோஷ்டி..

பாக்கறீங்களா?

Color TV Dreams – Mugamoodi

April 7, 2006 3 comments

'கனவு காணுங்கள்' என்றார் கலாம். 'கலர் கலராய் கனவுக்கன்னிகளைக் காணுங்கள்' என்கிறதா திமுக?

பிற்சேர்க்கை: சன் டீ.வி யின் சிறப்புப் பார்வை – மகேஸ்

Rajini Bashing

April 7, 2006 Leave a comment

'எனக்கு கட்சியும் வேணாம்; கொடியும் வேணாம்' என்று ஒதுங்கினாலும் விடாமல் துரத்துகிறார் நடிகர் தியாகு.

Ki Veeramani Interview with Haajaa Kani & Anees

April 6, 2006 Leave a comment

ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சிலர் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் என்ன சொல்கிறது என்பது குறித்தத் தன்னுடைய கருத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டியில் விவரிக்கிறார்.

Why Not Stalin? – Naga.Elangovan

April 5, 2006 7 comments

இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை.அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது

குடும்ப அரசியல்  என்று சொல்லி ஊடகங்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து, ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனம் செய்வதை, புள்ளி விவரங்களுடன் ஒரு பிடி பிடிக்கிறார் நாக.இளங்கோவன்.

Coalition Government in TN? – Maalan

April 3, 2006 Leave a comment

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சரிப்படுமா? அலசி ஆராய்கிறார் மாலன்.. தமிழ் சசியின் கோணம் இங்கே..

Why Should I Vote for Amma – Shyam

April 3, 2006 2 comments

அம்மாவுக்கு ஓட்டு கேக்கறார் 🙂 …. மறக்காம போட்ருங்க 🙂