Archive

Archive for the ‘படைப்பு’ Category

Parisu – PK Sivakumar

April 13, 2006 Leave a comment

அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.

பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை.

மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் – (இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது) – சிவக்குமாருடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற கதையை பகிர்ந்து கொள்கிறார்.

கவனம் சிதறாமல் பயணிக்கிறது; ஆங்காங்கே எண்பதுகளின் க்ளிஷேக்கள் எட்டிப் பார்த்தாலும் இதமான நடையில் விறுவிறுவென நகரும் படைப்பு.

Valainthu Pona Veeravaal – Sezhiyan

April 11, 2006 Leave a comment

ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற செழியனின் 'வளைந்து போன வீரவாள்'.

A poem – Sannasi

April 9, 2006 Leave a comment

மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்

முழுக்கவிதையும் இங்கே…

இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?

Mahabharath – Selvan

April 7, 2006 Leave a comment

தீக்குளிக்கத் தொண்டனை அனுப்பும் தலைவன் போல் கண்ணன் செயல்பட்டானா?

Veiled tears – Chameleon

April 5, 2006 Leave a comment

ஒரு தேவதையின் நகல் பனியில் உருகுவதைப் போன்ற
உணவிற்குப் பின் விரும்பிக் கேட்கப்படும் இசை போன்ற
விரும்பிய செயல்களைச் சாதனையாக எண்ணுவது போன்ற
யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு உண்மையைப் போன்ற

நான் மறைக்கும் கண்ணீர்த் துளிகள்

36-28-36 : Jollupaandi

April 2, 2006 Leave a comment

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

Universal Truth

March 30, 2006 5 comments

எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்

குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..

Four Girls – Premalatha

March 30, 2006 2 comments

தமிங்கிலர்கள், தமிழில் வலைப்பதிவதில்லையே என்னும் ஐகாரஸின் அங்கலாய்ப்பை நிவர்த்திக்க பிரேமலதா தமிழில் மீனாக்ஷி, ப்ரீத்தி, ரீட்டா, அனுஷ்கா என்று நான்கு தலைமுறைப் பெண்களை பிறக்க வைத்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

Tamil Kavithai on NRT – JS Njaanasekar

March 30, 2006 2 comments

பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?
….
பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்

பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்

வைரமுத்துவின் 'காதலித்துப் பார்' பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'. தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும் என்கிறார். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)

Snegithi – Anupama

March 28, 2006 5 comments

ஆடிப் பாடி, விளையாடி,
கை கோர்த்து நடந்து, முத்தமிட்டு,
முத்தாய் சிரித்து, சிறு பூவாய் மலர்ந்து,
பூரித்து இருக்கயில் ஒரு நாள்..

மனம் குமுற, கண்ணீர் பெறுக,
முதல் முறையாய் தனிமை அதனை
உணர்ந்து நின்றேன், என்
உயிர் சினேகிதி அவளது மரணத்தில்..

இதை கவிதைன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை… இருந்தாலும் நல்லா இருக்கு…

Categories: படைப்பு