Archive

Archive for the ‘புத்தகங்கள்’ Category

Epic Book on DMK Luminary – Rajni Ramki

April 5, 2006 3 comments

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை ஒரே புத்தகத்தில் அடக்கி, பின்னணியில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் கொணர்ந்திருக்கிறாரேமே! கலக்குறாரு…

Naanjil Naadan's Sathuranga Kuthiraigal

April 5, 2006 4 comments

கல்யாணமாகிவிட்ட கல்யாணியுடன் அவன் கொண்ட மிருதுவான காமம் நயமாகச் சொல்லியிருப்பார். "ஈரத் துணி கிடந்த தணுப்பும், இலேசான முதல் வியர்வையும், மிருதுவும் மெல்லிய வாசமும் குழைவும் கொண்டதாக இருக்கும் இந்தப் பெண்ணுடம்பு."

"குளித்துவிட்டு வந்தவள் கைகளை உயர்த்தி ஈரத் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். ஈரத்துணி மாற்ற உள்ளே போனாள். ஆம்பல் தண்டுபோல் பெண் உடம்பின் குளிர்ச்சி. தழுவலின் குழைவு. சந்தன சோப்பும் மஞ்சள் பொடியும் மூக்கில் ஏற்றிய வாசனையின் போதை. பேறுகளின் வெள்வரியோடிய அடிவயிறு. கருமை பரந்திருந்த காம்புகள். முதல் அடுக்குச்சதை மடியும் இடுப்பு."

மரத்தடியில் ரெகாவின் பதிவு.

Buying Books Online – Kaps

April 3, 2006 Leave a comment

பயனுள்ள பதிவு

இணையத்தில் புத்தகம் வாங்குவதற்கு என்று இருக்கும் பல்வேறு இணையத்தளங்களை ஒப்பிட்டு அலசுகிறார்.. எதில் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். இது தவிர, இணையத்தில் புத்தகங்கள் வாங்க வேறு வழி/இணையத்தளம் இருந்தால், பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஜெயமோகனின் கொற்றவை

March 30, 2006 Leave a comment

ஜெயமோகனின்ப்  புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி

"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்". 

Top Ten Books – P K Sivakumar

March 28, 2006 Leave a comment

தனக்குப் பிடித்த பத்து புத்தகங்களை பட்டியலிடுகிறார் பி.கே.சிவகுமார்.. புத்தகங்கள் பற்றி சிலவரிகளாவது எழுதியிருக்கலாமே என்று நினைக்கும் பொழுது, தான் ஏன் அப்படிச் செய்யவில்லை என்றும் சொல்கிறார்..

Locus Magazine Recommended Reading List

March 13, 2006 Leave a comment

அறிவியல் புனைவு, முதல் படைப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதை, கலை, சிறுகதை என்று பலவற்றிலும் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள். (வழி: Aaman Lamba)

Tamil Ilakkiya Kavithaigal

March 12, 2006 5 comments

Primitive Oneness of the English and the Tamils

March 10, 2006 Leave a comment

ஆங்கிலமும் தமிழும் எங்கு கை கோர்க்கிறது? எவ்வாறு ஒன்றோடன்று உறவாடுகிறது? Key Words of a Kinship என்னும் நூலின் மூலம் வரலாற்றாசிரியர் + மொழி ஆய்வாளரின் பார்வை. (வழி: தமிழ் ஆராய்ச்சி)

Simply Southern Facts & Freakonomics

March 9, 2006 Leave a comment

‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ பாட்டில் ஆரம்பித்து மனக்குமுறலை எங்கெங்கோ கொண்டு செல்கிறார் தீபக் கிருஷ்ணன். இவரும் Freakonomics-ஐ முன்வைக்க, Blink எழுதிய Gladwell-ம் இன்று வாசக/சக-எழுத்தாளனின் பார்வையை விரிவாக எழுதியிருக்கிறார். (எச்சரிக்கை: முன்னதில் சுடுசொற்கள் உள்ளன; பின்னதைப் படிக்க நிதானமான நேரம் தேவை.)

Singapore Tamil Book Readers' Club

March 7, 2006 Leave a comment

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.