Archive

Archive for the ‘பெண்ணியம்’ Category

feminism – Selvanayaki

April 13, 2006 1 comment

என்ன தெளிவான, தீர்க்கமான சிந்தனை..

சமூகத்தாலும், குடும்பத்தாலும். படிக்கலாம், பட்டமும் வாங்கலாம்; காரியதரிசியாகலாம், கலைத்துறையிலும் சாதிக்கலாம்;எழுதலாம், இலக்கியமும் படைக்கலாம்; ஆனால் இத்தனையிலும் அவளின் மனைவி, மருமகள் பதவிகளுக்கென்று உள்ள வேலைகளிலிருந்து,அடக்கமாக நடந்துகொள்வது வரை நிறைவேற்றியேயாக வேண்டும். அதைப் பொறுத்துத்தான் அவளின் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. பெருகிவரும் விவாகரத்துகளின் பின்னணியில் ஒரு நுட்பமான காரணமாக இன்றைய பெண்களின் மேற்சொன்ன "அடக்கம்" மீறுதலும் உண்டு.

முழுதும் வாசிக்க…

Why Men Have it So Easy – Thusha Tarnalingam

April 12, 2006 5 comments

அமெரிக்காவில் வாழும் தெற்காசியரின் கலாச்சாரக் குழப்பத்திற்கு பெற்றோர்கள் காரணமா என்று அலசுகிறது 'டொரண்டோ தமிழ்'.

Mrs Sujatha Rengarajan Interview

April 7, 2006 Leave a comment

அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…

சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?

அவர் எழுதினதிலேயேகூட கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், மூளை பத்தி எழுதியது மாதிரி அறிவியல் கட்டுரைகள்தான் பிடிக்கும்.

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனின் பேட்டி. குமுதம் சிநேகிதியைக் கடன் வாங்கி படித்தவர்: சுரேஷ் கண்ணன்

Indian AND feminist = Unpatriotic – Deepali

April 7, 2006 Leave a comment

The Indian media has been very active in portraying feminists as illogical, unreasonable, and sometimes even ungrateful women. Notice how Bollywood loves to parody those cotton-saree clad, no nonsense tight bun and pursed lipped women as your average feminist?

Ultimately, what happens is, the average Indian man/woman, comes to look down upon feminism as it comes across as unworthy of anyone's time. A useless waste of time by those educated women who should be married and looking after their husband's children.

முழுவதும் படிக்க. (பரிந்துரை: பிரேமலதா)

Bloggers in Action

April 7, 2006 1 comment

இந்தக் கொடுமை நினைவில் இருக்கிறதா? வெறுமனே வலைப்பதிவில் புலம்புவதோடு நிறுத்திவிடாமல், செயலில் இறங்கியிருக்கிறார்கள் பிரேமலதாவும் இன்னும் சில வலைப்பதிவர்களும்…. அது குறித்த பதிவுகள் இங்கே…

பிரேமலதா | தருமி | டுபுக்கு

இன்னும் வேற யார் யார்?

36-28-36 : Jollupaandi

April 2, 2006 Leave a comment

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

Public Register of Menstrual Cycles – KV Raja

March 26, 2006 Leave a comment

Women’s Day

March 7, 2006 Leave a comment

மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம். விடுதலைப்புலிகளின் மகளிர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது, என்ன காரணம் என்று தெரியுமா? கே டி குமரனின் விரிவான பதிவு.

Europe Visit Experiences – Thilagabama

March 7, 2006 1 comment

14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க   சிந்திக்க  வைத்திருந்தது. சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத  சூழலை இங்கேயும் காண முடிகின்றது.

தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள்.

கவனித்ததை நுண்ணியமாக தமிழகச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

Kalyanamalai – Nithiya

March 3, 2006 4 comments

வைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.