Archive
http://gilli.in/
கில்லி வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அவ்ளோதாங்க.. கில்லி புது இடத்துக்கு குடி பெயர்ந்து விட்டது. கில்லியை அங்கே மட்டும் தான் படிக்க முடியும்.
உலாவியின் விருப்பப்பட்டியலில் கில்லி வலை முகவரியை சேமித்து வைத்துப் படிப்போரும், blog lines, feedreader போன்ற நிரலிகள் மூலம் தொடர்ந்து வாசிப்பவர்களும், தங்கள் வலைப்பதிவுகளில் சுட்டி கொடுத்திருக்கும் அன்பர்களும், புதிய வலைமுகவரியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Web Links – Ravi Srinivas
தமிழகத் தேர்தல் அரங்கு, இட ஒதுக்கீடு, மேதா பட்கர், உலகமயமாதல், அமெரிக்காவும், குடியேற்றமும், இணையத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடும் என்று படித்த உரல்களைத் தட்டலாம்.
Parisu – PK Sivakumar
அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.
பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை.
மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் – (இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது) – சிவக்குமாருடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற கதையை பகிர்ந்து கொள்கிறார்.
கவனம் சிதறாமல் பயணிக்கிறது; ஆங்காங்கே எண்பதுகளின் க்ளிஷேக்கள் எட்டிப் பார்த்தாலும் இதமான நடையில் விறுவிறுவென நகரும் படைப்பு.
Google's influence on Journalism, Good or Bad?
செய்திகளின் தலைப்புகள், வாசகர்களை, ஈர்க்கக் கூடியதாக இருக்கும் படி செய்தியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது கூகுள் தேடியந்திரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்..
….news organizations large and small have begun experimenting with tweaking their Web sites for better search engine results. But software bots are not your ordinary readers: They are blazingly fast yet numbingly literal-minded. There are no algorithms for wit, irony, humor or stylish writing. The software is a logical, sequential, left-brain reader, while humans are often right brain…
Bugs are worth $57 billion – Sowmya
நீங்க 'ஈ' ஓட்டுபவரா? கொசு அடிப்பவரா? முதலாவதற்கு ஆம் என்று சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் உங்களை வாழ்த்தும்.
Don't Scribble in Rupee Notes – Nagarajan, G.
வேலியே பயிரை மேய்கிறது; கிருமிநாசினியே வெருவி கொடுக்கிறது; காசாளுநர்களே ரூபாய் நோட்டின் மீது கிறுக்குகிறார்கள்.
Ellarumey Thirudangathaan?
1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.
Valainthu Pona Veeravaal – Sezhiyan
ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற செழியனின் 'வளைந்து போன வீரவாள்'.
Hyundai – PKP
ஹண்டே என்று சுகாதாரநலத்துறை அமைச்சர் இருந்ததுதான் அறிந்திருந்தேன். ஹூண்டாய் என்றாலும் ஹண்டே என்றாலும் ஒன்றுதான் போல!
Athmanaam – Ka Arulselvan
இந்திய அறிவியற் கூடம் தமிழ்ப் பேரவை 'மின்னல்' மாத இதழின் அக்டோபர் 1985ல் அருள்செல்வன் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறார் மு. சுந்தரமூர்த்தி.
Recent Comments