Archive
Dans le Noir – Manian
'சொக்கா சொக்கா சோறுண்டா' என்னும் பாட்டி காலத்துக் கதையில் மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் இருட்டில் உணவு உண்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். இவங்க இருட்டிலேயே சோறு போடறாங்களே…
Food Finds, Spain – Vidya
'புலால் உண்போருக்கு செல்லிடமெல்லாம் சோறு; உண்ணாதோருக்கு நோன்பு' என்பது பழமொழி. ஸ்பெயினுக்குப் போனால் வாய்பொழைப்புக்கு வழிகாட்டுகிறார். உணவை சுவைத்து சொல்லும்விதமே அலாதி 😛
Scarborough Saravana Bhawan – Mathy Kandasamy
மாண்ட்ரியாலில் இந்திய உணவு என்றால் பஃபேக்களும் பஃபே சார்ந்த இடங்களும் என்று நினைத்திருந்தேன். சரவண பவன் வந்திருக்கிறது…
Kids in the Kitchen – Devaki Shanmugam
சின்ன வயசிலேயே இவருக்கு சமையல் கலையில் ஆர்வம் வந்துவிட்டதாம்.. அதான், சிங்கைக்குப் போய், இந்தக் கலக்கு கலக்குகிறார்
South Indian Recipes
எப்போ சாப்பிடப் போறோம்னே தெரியாம, க்ளையண்ட் கூட உக்காந்து முட்டிகிட்டு இருக்கீங்களா? இல்லை, இந்திய உணவு வகைங்களே கிடைக்காத டிம்பக்டுவிலே ஆன்சைட் போட்டிருக்காங்களா? அப்படின்னா இந்த வலைத்தளத்தை பார்க்காதீங்க.. வாய் ஊறும், வயிறு எரியும் 🙂
[ பரிந்துரை: மொன்ரியாலில் இருந்து ஒரு நண்பர்]
Cooking Recipes
வெரைட்டியான சமையல்முறைகள்! பருப்புப் பொடியும் உண்டு; கொய்யா பர்ஃபி, நூக்கல் வடை, கசகசா ஆல்மண்ட் பூரி என்று புதுசுகளும் கிடைக்கிறது 😛
Nothing to be ashamed of?
‘கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் – ஒரு சர்ச்சை’ என்னும் தலைப்பில் இந்த மாத தென்றல் இதழில் மணி மு. மணிவண்ணன் எழுதியிருக்கிறார்:
பொதுவாக அமெரிக்கப் பாடங்களில் மேற்கத்திய வரலாறு, அதன் தொடர்புள்ள யூத, கிறித்தவ, இஸ்லாமிய வரலாறுகளின் ஆழம் இந்திய வரலாறு பற்றி இருப்பதில்லை. பெரும்பாலும் இதற்கு இந்தியா பற்றிப் பள்ளிப் பாட நூலாசிரியர்களின் அறியாமைதான் காரணம். மேம்போக்காக கர்மா, பசு, ஜாதி (karma, cows, caste) என்ற சூத்திரத்துக்குள் இந்திய வரலாற்றை அடக்கி, இந்தியாவின் ஏழைச் சேரிப்பகுதிகள், சினிமா போஸ்டரைத் தின்று கொண்டிருக்கும் நோஞ்சான் பசுமாடு, காசியில் நடக்கும் ஈமக்கடன் கிரியைகள் இவற்றின் படத்தை இட்டு, ஒரு மாபெரும் நாகரிகத்தின் வரலாற்றை கார்ட்டூன் போலச் சிறுமைப் படுத்திவிடுவார்கள்.
பள்ளி ஆசிரியர் ‘சாண்டா’ எல்லாம் உடான்ஸ் என்று சொன்னதற்காக, அவரை ‘பொது மன்னிப்பு’ கேட்க வைக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும் கான்சாஸிலும் ஆதாம், ஏவாளில் இருந்துதான் குரங்கு பிறந்ததாக ஏட்டு சுரைக்காய் சமைக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதுடன், இந்தியா குறித்த உண்மை உணர்வையும், மதச்சின்னங்கள் தாண்டிய ஆன்மிக மதிப்பையும் அமெரிக்கவாழ் இந்தியச் சிறுவர்களிடையே உருவாக்குவதற்கு ‘பிரம்மா’ பிரயத்தனம் செய்ய வேண்டும்.
South Indian Recipies
மாலாடு செய்யத் தெரியுமா? கோமதி மாமியாண்டே கேளுங்கோ..மாலாடு மட்டுமா? தயிர்வடை, ரவா இட்லி, தவலை அடை… நாக்கு ஊறுதே…படிக்கறப்பவே பசிக்குதுங்க அம்மணி…
Recent Comments