Archive
TVC – Blogeswari
விளம்பரப் படங்கள், அதனோட script, storyboard எல்லாம் விலவரியா அலசப் போறாங்க..முதல் இடுகையிலே யாரே¡ட படங்கள் தெரியுமா? Abhinay Deo.. யாருன்னு தெரியலையா? அதாங்க, 'கறை நல்லது' சர்·ப் எக்ஸல் விளம்பரப் படம் வருதே, அதை எடுத்தவர் தான்..
"…உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் – கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க – அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்."ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா? ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே"ஸாரி சொல்லிடுச்சு" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது "கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே? சர்ஃப் எக்ஸல் – கறை நல்லது".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, "மறுபடியும் பண்ணாத"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம்,செம க்யூட்…"
சீரியஸான விஷயம்னாலும், தாய்க்குலம், ஜ்ஜ்ஜாலியான நடையிலே எழுதறாங்கோ.
தொடர்ந்து எழுதுங்கோ அம்மணீ
India in American Media – Sepia Mutiny
புஷ்ஷின் தெற்காசிய வருகைய முன்னிட்டு ஜான் ஸ்டூவர்ட் ‘இந்தியா ஸ்பெஷல்’ ஒளிபரப்பினார். ஏபிசி தொலைக்காட்சி ‘ஜொளிக்குது… ஜொலிஜொலிகுது’ என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்(பாலான)பணக்காரர்கள் எல்லாம் பம்பாயிலேயே இருக்கிறார்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.
India is the only South Asian country with billionaire private citizens (though a Sri Lankan Tamil émigré to Malaysia made the list), and Bombay has the most.
Pudhuppettai and Pattiyal
ஒருவர் ‘அறிந்தும் அறியாமலும்’; இன்னொருவர் ஹாட் ட்ரிக் போட்டவர். இருவருமே தாதா கதை.
யுவன் காட்டுல மழ பெய்யுது?
Thiruvasagam VaiKo speech
வைகோ-வின் திருவாசக வெளியிட்டு உரை. ஆரம்பத்தில் ரஜினி மற்றும் இளையராஜாவின் பேச்சுகளும் உள்ளது. (வழி: துக்ளக்)
Sivaaji Preview
Not really… ஆனால் ‘படம்’ நல்லாவே வந்திருக்கு 🙂
CBS programme on Dalits – Agathiyar
அமெரிக்காவின் ’60 மினிட்ஸ்’-இல் இடம்்பெற்ற தொலைக்காட்சி செய்தி இதழ். ஜனவரி 18 ஒளிபரப்பப் பட்டது. (வழி: அகத்தியர்/மனோ)
What's up Da? – David
பல்பொருள் அங்காடியில் இளைஞர்கள். சுரேஷ் கண்ணனுக்கு ரத்தக்கொதிப்பை ஏற்றும் ஆடைகளுடன் இளைஞிகள். அனுசரனையாக விசாரிக்கும் பாட்டி. பெருசுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்களா? பாக்கியராஜ் சமாச்சாரம் எல்லாம் எப்படி உள்ளே நுழைக்கிறார்கள் என்பதை கூகிள் திரையில் காண அழைக்கிறார்.
Recent Comments