Archive

Archive for the ‘Announcements’ Category

http://gilli.in/

April 14, 2006 Leave a comment

கில்லி வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அவ்ளோதாங்க.. கில்லி புது இடத்துக்கு குடி பெயர்ந்து விட்டது. கில்லியை அங்கே மட்டும் தான் படிக்க முடியும்.

உலாவியின் விருப்பப்பட்டியலில் கில்லி வலை முகவரியை சேமித்து வைத்துப் படிப்போரும், blog lines, feedreader போன்ற நிரலிகள் மூலம் தொடர்ந்து வாசிப்பவர்களும், தங்கள் வலைப்பதிவுகளில் சுட்டி கொடுத்திருக்கும் அன்பர்களும், புதிய வலைமுகவரியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

'puthu' Gilli, An Announcement

April 10, 2006 22 comments

இங்கே வருகிற நண்பர்கள் அனைவரும், கில்லியில் எடுத்துப் போடப்படும் சுட்டிகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ க்ளிக்-கத்தகுந்தவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்களே தவிர, கில்லி கோஷ்டியின் சொந்தக் கதை சோகக்கதைகளைக் கேட்க அல்ல என்பது தெரியும். இருந்தாலும், சில முக்கியமான தருணங்களில், நின்று பேச வேண்டியதாகிறது..

தமிழ்ப் புத்தாண்டில் இருந்து புது கில்லி ( இருங்க, இருங்க..சுட்டியைச் சொடுக்க வேண்டாம்..இன்னும் வேலை முடியவில்லை).

வலைமுகவரியைத் தவிர வேற மாற்றங்கள் ஏதும் கிடையாது. சரி, புது இடத்துக்கு சென்ற பிறகாவது, கொஞ்சம் உருப்படியாக இருக்குமா? கிடையாது. உருப்படியான, சீரியஸான விஷயங்களைச் செய்வதற்கு அனேகம் பேர் இருக்கிறார்கள். கில்லி is for fun. இன்றைக்கு மாதிரியே, என்றைக்கும் இதே தரத்தில் தான் தொடர்ந்து இயங்கும்.

இறுதியாக,  சென்ட்டி-யாக சில விஷயங்கள்.   [ இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே வாசிக்கவும். ஒரு effect க்காக..]

கில்லியின் இற்றைப்படுத்தப் பட்ட தலைப்புக்களை, தன் முகப்புப் பக்கத்தில், இடம் பெறச் செய்து, அதன் மூலம், அதிகமான வாசகர்களை பெற்றுத் தருகின்றதோடு மட்டுமல்லாமல், புதிய கில்லிக்கு இலவசமாக இடம் தந்து உதவிய தேன்கூடு இணையத்தளத்துக்கு முதல் நன்றி.

ஒரு டிசம்பர் மாத இரவில், விளையாட்டாய் மனதில் தோன்றிய எண்ணம், பாலாஜியின் துணையுடன் செயல் வடிவம் பெற்று, சுமார் 600 சொச்சம் இடுகைகளுடன் இந்த இடத்தில் நிற்கிறது. இத்தனை நாள் இந்த கில்லி ஆட்டம் ஓரளவுக்காவது சிறப்பாக நடந்தது என்று யாராவது நினைத்தால், அதற்கு கில்லி கோஷ்டி மட்டும் பொறுப்பல்ல. பிறருக்கு அதிகமாகத் தெரியாமல் ஆதரவும் உதவியும் தரும் நண்பர்களும் காரணம். அவர்களுக்கு நன்றி.

தவிர, அவ்வப்போது கில்லி பற்றி, தத்தமது பதிவுகளில் நல்லவிதமாக எழுதி, இமேஜை உயர்த்தி விடும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைகளை அனுப்பிவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தங்கள் பதிவுகளின் சைட் பாரில் நிரந்தரமாக இடம் தந்திருக்கும் மூக்கு சுந்தர் , Kaps , பிரேமலதா , ராமானுஜம் , சித்தார்த் , சன்னாசி , செந்தில் (jackofall),  வித்யா ,  முகுந்தன் , ப்ரதிப் , ஷ்யாம் சுந்தர் , சந்துரு , ஆனந்த் ,  தமிழன் ,  ஸ்ரீகாந்த் மீனாக்ஷி போன்ற நண்பர்களுக்கும் நன்றி.

நியாயமாக, இவர்கள் அனைவருக்கும், backlink கொடுப்பதுதான் இணையமரபு, இருந்தாலும், கில்லியின் 'கொளுகை' அதற்கு இடம் தராது என்பதால், இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்.

கடந்த சில நாட்களாக ஒழைச்சு ஒழைச்சு, ரொம்ப அசதி.. ஆகவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு no updates. நாளை வழக்கமான நிகழ்ச்சிகள், வழக்கம் போலவே தொடரும், தமிழ் புத்தாண்டு வரை இங்கே,  அதற்குப் பிறகு அங்கே

பிரகாஷ்

Categories: Announcements

Ilakkiya Peedam Vizha – RaayarKaapiKlub

April 6, 2006 Leave a comment

'இலக்கியப்பீடம்' மாத இதழ் வரும் ஞாயிறு (9 ஏப்ரல்.2006) அன்று காலை 9-30 மணிக்கு (கவனிக்க,காலை நேர நிகழ்ச்சி!) 2005 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்துகிறது.

இடம்: தேவநேயப் பாவாணர் நூலகக் கருத்தரங்குக் கூடம் (எல்.எல்.ஏ பில்டிங்க்ஸ், டி.வி.எஸ் அலுவலகம் எதிர்) அண்ணா சாலை, சென்னை .

தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளைப் பற்றி ஆறு விமர்சகர்கள் பேசுகிறார்கள். எம்.ஆர். ரெங்கராஜனின் சிறுகதை 'முரண்' முதல் பரிசு பெறுகிறது.

பப்பரபப்பரப்பாய்ங்க்ங்க்ங்க்….

March 30, 2006 Leave a comment

ஏப்ரல் மாத கில்லி விருந்தினர் யார் தெரியுமா? போன மாசம் போலவே, இந்த மாசமும் ஒரு 'வெயிட்டான' கை..

தெரியலையா?

அப்ப ஏப்ரல் ஒண்ணாந்தேதி வரை காத்திருங்க…

Categories: Announcements

Indira Parthasarathy Drama Workshop – April 3-8

March 30, 2006 2 comments

எழுத்தாளர் இ.பா.-வின் நாடகப் பட்டறை அமெரிக்காவின் 'பே ஏரியா'-வில் நடைபெறப் போகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக பயிற்சி நேரங்களை அமைத்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு…

Gilli 500

March 19, 2006 3 comments

இது ஐநூறாவது இடுகை.

ஒரு மாறுதலுக்கு, இந்த இடுகையில் இணைப்பு ஏதும் இல்லை. விடாமல் வாசித்து, ஹிட்ரேட்டை எகிறச் செய்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து படிக்கவும்.

அன்புடன்
பாலாஜி & பிரகாஷ்

Categories: Announcements

Tamil Bloggers Meet

February 7, 2006 Leave a comment

துளசி அவர்கள் சென்னை வந்ததை முன்னிட்டு, சென்னையிலே வலைப்பதிவாளர் சந்திப்பு ஏற்பாடு ஆகியிருக்கிறது. ஏற்பாடு செய்பவர் ஜெ.ரஜினி ராம்கி.

நாள் : 12-02-2006, ஞாயிற்றுக் கிழமை
இடம் : லைட் ஹவுஸ் உச்சியில் உட்லண்ட்ஸ் டிரைவ்.இன்
நேரம் : அதிகாலை மாலை ஐந்து மணி

மேல் விவரத்துக்கு ரஜினிகாந்தை ராம்கியை அணுகவும்.