Archive

Posts Tagged ‘திரைப்படம்’

ஆடம் எகோயான் – மைத்ரேயன்

October 3, 2008 Leave a comment

The Walrus Magazine » The Unsettler » By Denis Seguin » Film: “Atom Egoyan’s Adoration renews a provocative intellectual vision”

உலக இயக்குநர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர். எனக்குப் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர்.

கனடியர். ஏதேதோ அதிசயமான பொருளை எல்லாம் கருவாகக் கொண்டு திரைப்படங்கள் எடுப்பவர்.

ஆர்மீனிய மூலம் இவரது குடும்பம் என்பதால் உலக அகதிகளின் அவல வாழ்வில் இவரது சிந்தனை ஆழமாக வேர் கொண்டது. மனிதத்தின் பல பரிமாணங்களை இரக்கமற்ற நேர்ப்பார்வையில் காட்டக் கூடிய அதே நேரம் இவரது பாத்திரங்களை இவர் சிறிதும் வெறுக்காது கதைகளை நகர்த்துகிறார்.

பல படங்களைப் பார்த்தால் இவரது உலகப் பார்வை வசப்படும். சாவி போட்டால் போல எல்லா படங்களுக்கும் கதவு உடனே திறக்கும்.