Archive

Posts Tagged ‘வைஷ்ணவ நூல்கள்’

ஸ்ரீ மந் நாராயணீயம்

July 3, 2009 Leave a comment
Narayaneeyam.Narayaneeyam.

உரை ஆசிரியர்: ஆர் பொன்னம்மாள்.

கிடைகுமிடம்: திருவரசு புத்தக நிலையம்

23, தீன தயாளு தெரு,

தியாக ராய நகர், சென்னை 6000017.

ஸ்ரீ நாராயாணபட்டத்ரி என்ற கிருஷ்ணபக்தர் பாடிய நூல் இக்காவியம். குரு அச்சுதப்பிஷாரோடியின் வாதநோயைத் தனக்கு வரும்படி பிரார்த்தித்து, ஏற்று தன் வியாதி குணமடையப் பாடிய காவியம் இது. ஒவ்வொரு பாடலையும் குருவாயூரப்பன் சன்னதியிலிருந்து பாடி, குருவாயூரப்பன் ”ஆம்” என்று ஒப்புக் கொண்ட பிற்கே அடுத்த கவிதைக்கு செல்வார். அவரது வரலாறும் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளது.

மொத்தம் 1034 ஸ்லோகங்களுக்கும் நீண்ட காலமாக ஆன்மீகப் பணி புரியும் ஆர் பொன்னம்மாள் அற்புதமாக விளக்கம் தந்திருக்கிறார். முகப்பு அட்டையும் பிரமாதமாக உள்ளது. இந்நூலின் ஸ்லோகங்கள் வாயில் நுழையாதவர் அர்த்தங்களைப் படிதாலும் அதே பலன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஐஸ்வர்யம், கொடிய ரோகமும் நிவர்த்தியடைதல்,   சிறையிலிருந்து விடுதலை, சொத்து வாங்குதல், வழக்குத் தீருதல், பகையிலிருந்து மீளுதல், விபத்துக்கள், தீ இவற்றிலிருந்து தப்புதல், கிரக பீடை நீங்குதல், உத்யோக உயர்வு, கீர்த்தி, சந்தான பாக்கியம்,ஆயுள் விருத்தி, பயிர் செழிக்க, படிப்பில் சாதனை படைக்க,தொழிலில் லாபம்காண, ஏவல், பில்லி, சுனியம் அகல, பாக்கிகள் வசூலாக, பயம் தொலைய இப்படி எத்தனையோ பலன்களை தினமும் முடிந்த அளவு பாராயணம் செய்வதால் அடையலாம்.

காலசர்ப்ப தோஷமும் ஒன்றும் செய்யாது என்கிறது பலஸ்ருதி. அக்னி,வெள்ள அபாயங்கள் தொடாது.

பாகவதம் சுருக்கமாக, ஆனால் சுவாரஸ்யம்மாக சொல்லப்பட்டிருக்கிறது. ராஸக்ரீடை, கண்ணன் திருமணத்தைப் படிததால் ஆண்-பெண் இருபாலருக்கும் விவாகம் கூடிவரும்.

எந்தெந்த தசகம் என்னென்ன பலன் என்றும் விபரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேன் இனிகும் என்பதை ருசித்தவரே உணரமுடியும்.

இந்நூல் ஒரு பொக்கிஷம். ருசியில் தேன். நோயில் அல்லாடு பவர்களுக்கு ஒளடதம்.

நாலாயிர திவ்யப்பிரபந்தம்

July 3, 2009 Leave a comment
Nalayira Divya prabandhamNalayira Divya prabandham

நாலாயிர திவ்யப்பிரபந்தம்:

1ம் பாகம்: முதலாயிரம்.

விலை: Rs 150.00.

உரை ஆசிரியர்: ஆர்.பொன்னம்மாள்.

கிடைக்கும் இடம்: கங்கை புத்தக நிலையம்

23, தீன தயாளு தெரு,

தீயாக ராய நகர்,

சென்னை 6000017.

மணியம் செல்வனின் முகப்பு அட்டைப்படத்தில் ஸ்ரீ மந் நாராயாணர் கொஞ்ச்சும் அழகுடன் ஆசியளிக்கிறார். ஆன்மீக எழுத்தாளர், ஜோதிடர் திருமதி ஆர்.பொன்னம்மாள் தெளிவாக உரை எழுதியிருகிறார். பெரியாழ்வாரின் திருபல்லாண்டு, ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி, திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம், தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை, திருபள்ளியெழுச்சி, திருபாணாழ்வார் அமலனாதிபிரான் மதுரகவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகிய வற்றைத் தன்னுள் அடக்கி கொண்ட புதையலான நூல் இது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றுப்பருக்கை பதம் பார்ப்பது போல் ஒரு செய்யுள் பதம் பார்ப்போம். எதை விடுவது, எதை எடுப்பது என்ற குழப்பத்தில் கண்ணை மூடிக் கொண்டு எடுத்தது இது! ஸ்ரீ இராம் பிரான் புகழையும், கண்ண பரமாத்மா லீலையையும் இரு மங்கையர் பாடியபடி பந்தெறிதல் கவிதைகள் மகா அற்புதம்! அர்த்தம் தெரிந்தால் தானே ரசிக்கமுடியும்!

”எண் வில் வலிகண்டு போவென் றெதிர்வந்தான் தாசரதிதன்மையைப் பாடிப்பற!” என்ற பெரியாழ்வாரின்   திருமொழியில் “சீதாமணாளனை” பரசுராமர் வழிமறித்தார். அவனது வில்லோடு  தவத்தையும்  வாங்கி என்று கோதண்டத்தின் மகிமை சொல்லி பந்து வீசுகிறாள் நங்கை. தேவகி சிங்கத்தின் பெருமையை எதிர்பாட்டக்கி பந்தைத் திருப்பி வீசுகிறாள் தோழி.

108 திவ்ய தேசங்களின் அட்டவணையும், பெறுமாள், தாயார் திருநாமமும் அட்டவணையில் காணலாம்.

கண்ணனின் லீலைகளைப் பாராயணம் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். (பெரியாழ்வார் திருமொழி) கண்ணன் தாலாட்டும் பெருமாள் திருமொழியில் இராமர் தாலாட்டும்

பாடுவதும் மகப்பேற்றை அளிக்கும். தாய்ப்பாலுண்ண யசோதை அழைத்தல், காதுகுத்துதல், நீராட அழைத்தல், கொண்டை போட காக்கையை அழைத்தல், உப்பு மூட்டை தூக்கல், திருஷ்டி கழித்தல், இப்படி கண்ணன் லீலைகளோடு நாச்சியார் திருமொழியில் மன்மதனை வழிபடலைப் பாராயணம் செய்தால் திருமணம் கூடி வரும்.

கஜேந்திர மோட்சம் படிப்பது கஷ்டங்களிலிருந்து விடுவிக்கும். சத்ருபீடையைப் போக்கக் கூடியது நரசிம்மாவதாரம். எமபயம் நீங்க நான்காம் பத்தில் பத்தாம் திருமொழியைப் படிக்க வேண்டும். வராக அவதாரம் இழந்த பொருளை மீட்டுத்தரும்.

எல்லாப் பாடல்களிலும், தசாவதாரங்களும் விரவிக் கிடக்கின்றன. மொத்தத்தில் இரவல் கொடுத்தால் திரும்பக் கிடைக்காத பொக்கிஷ நூலிது.