Archive

Posts Tagged ‘Events’

கவிஞர் ஜெயபாஸ்கரன்

August 21, 2009 Leave a comment

நன்றி:- கல்கி

ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாட்டில் நடத்திவிட வேண்டுமென்று ஒவ்வொரு நாடும்
போட்டியிட்டு களத்தில் குதிக்குமே.. அது போல இருந்தது. தமிழ் விழாவை நடத்த
தமிழ்ச்சங்கங்களிடையே நடந்த போட்டி. எங்கே என்கிறீர்களா?

தமிழ் நாட்டிலில்லை.

வட அமெரிக்காவில், வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் ஆதரவில் (FETNA) இந்த
ஆண்டு ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் நடைபெற்றது அவ்விழா என்கிறார். அதில்
கலந்து கொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன்.

[image:http://img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_72759646178.jpg%5D
வடஅமெரிக்காத் தமிழ்ச்சங்க பேரவை {Federation of Tamil Sangams of North
America – FETNA} சுருக்கமாகவும், செல்லமாகவும், சொல்கிறார்கள். அமெரிக்கத்
தமிழர்கள்.

– வாஷிங்டன்
– நியூ யார்க்
– நியூ ஜெர்சி
– அட்லாண்டா மற்றும்
– கனடாவில்

உள்ள தமிழ்ச் சங்கங்களையும் சேர்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பத்தொரு
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது தான் வட அமெரிக்கத்
தமிழ்ச்சங்க பேரவை.

விழாவுக்கு ஆண்களும், பெண்களும், குடும்பங்களும், குழந்தைகளுமாக ஆயிரத்து
ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களில் இருந்தும்
வந்து குழுமிவிட்டார்கள். அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. விழா நடந்த
ஜார்ஜியா டெக் என்கிற உயர்கல்வி வளாகத்தின் அரங்கம். கோலங்களாலும், வாழை
மரங்களாலும் களை கட்டியது.

ஒவ்வொரு ஆண்டும் அழைப்பதை போலவே இவ்வாண்டும்,

– சிலம்பொலி செல்லப்பன்
– தமிழருவி மணியன்
– வைரமுத்து
– கோபிநாத் (நீயா, நானா)
– அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
– தமிழ் இணையப் பல்கலைக்கழக துணைவேந்தர் நக்கீரன் போன்றோருடன்
– நானும் (கவிஞர் ஜெயபாஸ்கரன்)

அழைக்கப்பட்டிருந்தேன்.

– ஜீவா
– பசுபதி
– அனுராதா ஸ்ரீராம்

போன்ற திரைக் கலைஞர்களோடு,

– ஜோதிக்கண்ணன் எனும் அதியற்புதமான சிலம்பாட்ட கலைஞரும்
அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழறிஞர் இரா.திரு.முருகன் (புதுச்சேரி) அழைக்கப்பட்டிருந்தர்களில்
முதன்மையானவர். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்து விட்டதால், அவரை நினைத்து
அவ்வப்போது மனம் கலங்கி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். FETNA தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.

மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்காக தங்களுக்கு தாங்களே பயிற்சியளித்து கொண்டு,
பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை வழங்கி, பார்வையாளர்களை உண்மையிலேயே வியக்க செய்து
விட்டார்கள் அமெரிக்க தமிழர்கள்.

– வாஷிங்டன் சங்கர பாண்டியன், பீற்றர் இரோனிமூஸ் இருவரும் சேர்ந்து
திட்டமிட்டு அரங்கேற்றிய அறிவியல் வினாடி வினா நிகழ்ச்சிக்கும்,
– அட்லாண்டா செல்வக்குமார் எழுதி அரங்கேற்றிய “பிரதிமை” எனும்
நாடகத்துக்கும்,
– ஈழத்தமிழர்களின் துயரங்களை எதிரொலித்த பா.சுந்தர வடிவேல் எழுதி இயக்கிய
“என்ன செய்யப்போகிறார்?” எனும் நாடகத்துக்கும்

ஏகப்பட்ட வரவேற்பு.

மனித உரிமைப்போராளியும், அமெரிக்கப் பெண்மணியுமான ஹெலன் ஷாண்டர் நிகழ்த்திய
இலங்கை இனப்படுகொலை பற்றிய ஆய்வுரையை சர்வதேச மனசாட்சி என்றே குறிப்பிடலாம்.
“வென்றாக வேண்டும்” தமிழ் எனும் தலைப்பில் என் தலைமையில் நடந்த
கவியரங்கத்துக்கு ஒன்றரை மணிநேரம் ஒதுக்கியிருந்தார்கள். பங்கேற்ற எட்டுக்
கவிஞர்களும் அமெரிக்காவில் இருப்பவர்கள். சும்மா சொல்லக்கூடாது. .. கவிதைகள்
மட்டுமல்ல, அவர்களின் நேர உணர்வும் வரவேற்கப்படக் கூடியதாகவே இருந்தது.

தமிழ் அன்னை என்னை பார்த்து பல கேள்விகள் கேட்பதை போல என் கவிதையை
எழுதியிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் அரங்கேறிய அக்கவிதையின் முடிவில்
அரங்கில் இருந்த அவ்வளவு பேரும் எழுந்து நின்று தொடர்ந்து கரவொலி எழுப்பியது.
எனக்கொரு புதிய நெகிழ்வுட்டக்கூடிய அனுபவம்.

வெற்றிலைக்குன்று எனும் வியத்தகு தமிழ் பெயரை, பத்தலக்குண்டு என்கிறாயே! பாவி
நீ விளங்குவாயா?

திருவள்ளுவர் தெருவை TV Street என்கிறாரே உன் TV மோகத்துக்கு ஒரு தீர்வே
கிடையாதா.

அடையாறு என்பதை அடையார் என்கிறாயே அடைய வேண்டியதை அடையவே மாட்டாய் நீ.

என்று நீண்ட என் வசன கவிதையின் பெரும்பான்மையான வரிகளுக்கு கிடைத்த வரவேற்பும்,
கரவொலியும் அமெரிக்கத் தமிழர்களின் தமிழுணர்வையே எதிரொலித்தது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் ஒரு பிரகடனத்தை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை
நடத்துகிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவாக அரங்கேறிய இவ்வாண்டு தமிழ் விழா,

“உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்” எனும் முழக்கத்தை அடிப்படையாக
கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் வெளியிடப்படுகிற மலரில் மிகவும் ஆய்வு
பூர்வமான, செழுமையான படைப்புகளை உலக அளவில் படைப்பாளிகளிடமிருந்து திரட்டி
வெளியிடுதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு மலரை விழா மேடையில்
தமிழருவி மணியன் வெளியிட, அதை பெற்றுக்கொள்கிற வாய்ப்பு எனக்கு கிட்டியது.
மிகவும் பொருட்செலவில் உயர்ரக தாளில் சொந்த செலவில் அச்சடித்து, அனுப்பி
வைக்கிறார் மதுரை மீனாட்சி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ந.சேதுராமன்.
அடுத்த ஆண்டு தமிழ் விழா – 2010 ஜூலை முதல் வாரத்தில் கனெக்டிக் நகரில் நடைபெற
இருப்பதால் அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். பேரவையின் தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.

அட்லாண்டா விமான நிலையத்தில் வாஷிங்டனுக்கு என்னை வழி அனுப்பும்போது, இது
மாதிரி நாங்க சந்தோஷமா இருந்து கூட்டம், கூட்டமாக நம்ம ஜனங்களை பார்க்க இன்னும்
ஒரு வருஷம் காத்து இருக்கணும் என இரவிக்குமார் (விழா பொறுப்பாளர்) சொன்ன போது
அவரது குரல் உடைந்திருந்தது.

Chennai Meet – Symposium on Movies, Impact of Cinema on Society

October 3, 2008 Leave a comment

காட்சிப் பிழை – ஊடக அய்வுகளுக்கான இதழ் நடத்தும்
‘வேட்கையின் தாகம்’
வெகுமக்கள் திரைப்படம் குறித்த கருத்தரங்கம்

நாள்: 04.10.2008 & 05.10.2008 / சனி, ஞாயிறு
நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை

இடம்: பவள விழா அரங்கு, தமிழ்ப் புலம்.
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005

தொடக்கவிழா

04.10.2008, காலை 10.00 மணி

தலைமை: திருமிகு எம்.எஸ்.எஸ். பாண்டியன்

சிறப்புரை: திருமிகு தியடோர் பாஸ்கரன்
திரைப்பட வரலாற்று ஆய்வாளர்

அமர்வு 1
04.10.2008, நண்பகல் 12.00 மணி
தலைமை: திருமிகு சுந்தர் காளி
‘ஏ.வி.எம். – ஒரு சரித்திர வாசிப்பு’

கட்டுரையாளர்கள்:
திருமிகு ப்ரித்தம் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் சக்கரவர்த்தி
திரைப்பட ஆய்வாளர்கள்

‘பேசும்படங்கள் பேசாத தளங்கள்’

கட்டுரையாளர்:
திருமிகு பிரேமானந்தன்
விரிவுரையாளர், தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை, தில்லி
பல்கலைக்கழகம்

அமர்வு 2

04.10.08, நண்பகல் 2.30 மணி

தலைமை: பேரா. ஜான் பெர்னார்டு பேட்
மானுடவியல் துறை, யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா

‘ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும்’

கட்டுரையாளர்:
திருமிகு கவிஞர் மாலதி மைத்ரி

‘சின்னத் திரையும் பெரிய திரையும்’

கட்டுரையாளர்:
திருமிகு சுரேஷ்பால்
விரிவுரையாளர், காட்சித் தகவலியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை

அமர்வு 3

04.10.08, மாலை 4.00 மணி

தலைமை: திருமிகு சஃபி
மனநல ஆலோசகர்

‘நினைவு அழிக்கும் வரலாறுகளும் மறுகாட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக் குட்டைகள்’

கட்டுரையாளர்:
வளர்மதி
எழுத்தாளர்

‘உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும்’

கட்டுரையாளர்:
‘எதிர்வு’ சிவகுமார்

அமர்வு 4

05.10.08, காலை 10.00 மணி

இயக்குநர்கள் களம்

திருமிகு பாலாஜி சக்திவேல்
திருமிகு வெற்றிமாறன்
திருமிகு ஐந்து கோவிலான்

அமர்வு 5

05.10.08, நண்பகல் 12.00 மணி

தலைமை: பேரா. திருமிகு வீ. அரசு
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழிலக்கியத் துறை, சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை

‘வீதியில் வெள்ளித்திரை: சினிமா பேனர்கள் குறித்த சில குறிப்புகள்’

கட்டுரையாளர்:
திருமிகு வ. கீதா

‘வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித் தன்மையின் பன்முகம்’

கட்டுரையாளர்:
திருமிகு அமுதன்
ஆவணப்பட இயக்குநர்

”இசையுரு’ ஆகிய இசை – இளையராஜா’

கட்டுரையாளர்:திருமிகு கவிஞர் வேணு மணி
கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை

அமர்வு 6

05.10.08, பிற்பகல் 2.00 மணி

தலைமை: திருமிகு சுபகுணராஜன்

‘கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை’

கட்டுரையாளர்:
திருமிகு சுந்தர் காளி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்

‘When a women called shots’

கட்டுரையாளர்:
திருமிகு லீனா மணிமேகலை
ஆவணப்பட இயக்குநர்

காட்சிப் பிழை
16/25 ஆனந்த குடிர்
2அவது சீ வார்ட் தெரு
வால்மீகி நகர்
திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி: 94439 87166

subagunarajan@gmail.com