Archive
Nanjil Nadan – Kaalachuvadu: காலச்சுவடு சஞ்சிகையில் நாஞ்சில் நாடன்
பதிவுகள்: அற்றைத் திங்கள்
மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல
அ. கார்த்திகேயன்
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கியதாகவும் திமுகவிற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அரசியல் தீவிரம் தனக்கு இருந்ததாகவும், நாளடைவில் அந்த ‘மயக்கம்’ அகன்றதையும் சுவாரசியமாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு தான் அடைந்த அவமானங்கள், காயங்கள், ஏமாற்றங்கள், ஆற்றாமைகளைச் சொற்கோலங்களாக தன் பேச்சில் வெளிப்படுத்த, ‘மிதவை’ நாவலின் காட்சியலைகள் பார்வையாளர்களின் மனத்திரையில் தெரிய ஆரம்பித்தன.
திராவிட மாயையினின்று தான் விடுபடப் பழந்தமிழ் வாசிப்புதான் மிகவும் உதவியாக இருந்தது என்றும் நிறைய வாசிக்கும்போதுதான் படைப்பாளிக்கு ஏராளமான சொற்கள் கிடைக்குமென்றும் காத்திரமான படைப்புக்கு அச்சொற்களே வழி வகுக்கும் என்றும் தெரிவித்த அவர், தான் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாவல்வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதாகப் பெருமைபடக் கூறினார். படிப்பதன் மூலம் படைப்பில் நல்ல சொல்லாட்சிகளைக் கொண்டு வர முடியுமெனத் திடமாக நம்புவதாகவும் தனது எழுத்தில் நாஞ்சில் நாட்டுச் சொற்களைக் கூடுமானவரைக் கொண்டுவரத் தான் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்க்கை பற்றிய புரிதல் வாழும் போதுதான் கிடைக்கும். தமது 25 வருட எழுத்து வாழ்க்கையில் அந்தப் புரிதலைப் பல்வேறு கோணங்களில் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன், இன்றைய அரசியல் நிலை குறித்து தனது படைப்புகள் கவலை மற்றும் கோபம் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். படைப்புகளில் அவை குறித்துக் கவன ஈர்ப்பு பெற வைப்பதையும், பண்பாட்டுக் கூறுகள் குறித்துத் தனக்கு ஏற்படும் அதிர்வுகளைப் படைப்பாக்கங்களில் பதிவு செய்வதையும் தனது கடமையென்றும் கூறினார்.
படைப்பு என்பது கதை சொல்வது மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூறுகளை, தகவல்களை அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் செல்வது எனக் கூறியவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
தங்களது நாவல் (தலைகீழ் விகிதங்கள்) திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டுமென்றும் தன்னுடைய அடையாளம் எது என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் விடையளித்தார்.
பாடப் புத்தகங்களை மீறி நமது குழந்தைகள் ஏராளமானவற்றை அறிந்து கொள்வதுடன் நவீன வாழ்வு தரும் அதிர்ச்சிகரமான அலைகளிலிருந்து மீள வாழ்வைப் புதிய கோணத்தில், புதிய வார்ப்பில் எதிர்கொள்ள வேண்டுமெனவும் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
o
பதிவு: கருத்தரங்கு – நாஞ்சில் நாடன் படைப்புகள்
வலி தரும் எழுத்து
அ.கா. பெருமாள்
நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரியும் நெய்தல் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நாஞ்சில் நாடன் படைப்புகள் கருத்தரங்கு 24.01.2007 புதன்கிழமை திருச்சிலுவைக் கல்லூரியிலுள்ள செசில் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கின் முதல் அமர்வில் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி தன் தலைமை உரையில், “தென்மாவட்டப் படைப்பாளிகளில் முக்கியமானவரான நாஞ்சில் நாடனைப் பற்றிய இந்தக் கருத்தரங்கை நாஞ்சில் நாடனின் பாராட்டு நிகழ்ச்சியாகவும் கருதலாம்” என்று குறிப்பிட்டார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் அருட்சகோ. சோபி முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோ. ஜெரார்டின் ஜெயம் வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வின் தொடக்கத்தில் நெய்தல் கிருஷ்ணன் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். “நாஞ்சில் நாடன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று நெய்தல் அமைப்பு முடிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மனதில் நெருடலை ஏற்படுத்தாத இடத்தில் நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விப் புலத்திற்கும் நவீன இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதும்தான் இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம்” என்றார்.
நாஞ்சில் நாடனின் நாவல்கள் பற்றி எம். வேதசகாயகுமார் பேசினார். “நாஞ்சில் நாடன் கவிதை, சிறுகதை போன்ற வடிவங்களின் மூலம் படைப்புலகுடனான தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இவரது நாவல்களின் மறு வாசிப்பு புதிய உணர்வைக் கொடுக்கிறது. நாஞ்சில் நாடனின் அனுபவ வாழ்வின் பரப்பு சுருங்கியது. ஆனால் பொய்ச் சாயம் கலவாதது. படைப்பிற்கென அனுபவ வாழ்வை வலிந்து பெறும் அவலம் இவருக்கு என்றுமே இருந்ததில்லை. நிகழ்வுகளை ஒரு மையத்தில் குவித்து உணர்வுகளை எழுப்பி வாழ்க்கைச் சிக்கல்களைத் தனக்குச் சாதகமான தளத்தில் இனங்கண்டு வாழ்வைப் படைப்பிற்கென்று எளிமைப்படுத்த நாஞ்சில் நாடன் முனையவில்லை. நாஞ்சில் நாடன் அவரது படைப்புகளிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்” என்றார்.
தொடர்ந்து, ‘நாஞ்சில் நாடனின் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் பேசிய சின்னசாமி, “நாஞ்சில் நாடனின் சிறுகதை, நாவல்களைவிடக் கட்டுரைகளை முக்கியமாகக் கருதலாம். இவர் கட்டுரைகளுக்காக எடுத்துக்கொண்ட விஷயங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. சாதாரண வாழ்க்கையுடன் உறவுடையவை. இவரிடம் மனிதாபிமானமும் ஆர்வமும் அதிகம். இவரது நூலின் தலைப்பு ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்பது. கம்பராமாயணப் பாடலில் வரும் வரி இது. எல்லாம் விதியின் மேல் காரணம் காட்டிப் பேசுவது இப்பாடல். இந்தத் தொனி நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் சற்று இடம்பெயர்ந்து வருகிறது. மனிதனின் பிழை எதுவும் இல்லை; எல்லாம் சமூகத்தின் பிழை என்ற கருத்து பொதுவாக இழையோடுகிறது. கட்டுரைகளில் வரும் எள்ளல் தொனி படிக்கும் வேகத்தைக் கூட்டுகிறது. இவரது படைப்புகளைப் போலவே கட்டுரைகளும் என்பதற்கு வட்டார வழக்குச் சொற்களை இவர் லாகவமாகக் கையாளும் திறன்தான் அடையாளம். கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நூல் பற்றி அ.கா. பெருமாள் பேசும்போது, “தமிழகத்தில் சாதி பற்றிய நூற்கள் நிறையவே வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தங்கள் சாதியின் புகழ்பாட எழுதப்பட்டவை. வெளிநாட்டு ஆய்வாளர்கள் சாதி பற்றி எழுத ஆரம்பித்தபோது திரட்டப்பட்ட தகவல்கள்கூட இன்றைய நிலையில் பரிசீலனை செய்ய வேண்டிய அளவில்தான் உள்ளன. நாஞ்சில் நாடனின் நூல் இந்த இடத்தில் வேறுபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள்வழி வேளாளர், மருமக்கள்வழி வேளாளர், சைவ வேளாளர், துளுவ வேளாளர், செட்டி வேளாளர் என்னும் ஐந்து வேளாளர் உட்பிரிவுகளில் மக்கள்வழி, மருமக்கள்வழி வேளாளரை மட்டுமே இவர் பதிவுசெய்திருக்கிறார். நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றி 1909இல் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, 1921இல் தாணம்மாள், 1986இல் பேரா. எல். சி. தாணு ஆகியோர் எழுதிய கட்டுரைகளை இன்று திரும்பிப் பார்க்கின்றபோது நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒத்துப் போவது தெரிகிறது. அவரது படைப்பைப் போலவே இந்த நூலும் யதார்த்தமான பதிவு” என்றார்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாவது அமர்வில் ஜெயமோகன் பேசினார். “உலகம் முழுக்க வானத்தைப் பார்ப்பது, மண்ணைப் பார்ப்பது என்ற பார்வை இருக்கிறது. மண்ணுக்கு அப்பால் வானத்தைப் பார்த்து உலகத்துத் துக்கத்தை வெளிப்படுத்திய பழைய பாடல்களை இன்று படித்தாலும் உணர முடியும். ஒட்டுமொத்த பார்வை வானத்தைப் பார்க்கும்போது புரியும். ஆனால் மண்ணைப் பார்ப்பது வித்தியாசமானது. இது யதார்த்தமானது. இந்த மண்ணிலேயே சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தேடிக் கண்டடைவதற்கான முயற்சிதான் யதார்த்தவாதம்.
“தமிழ் யதார்த்தவாதத்தின் முதல் படைப்பு மாதவையாவிலிருந்து தொடங்குகிறது. மண்ணின் பிரச்சினையை விண்ணில் எதிர்நோக்காத பார்வையை இவர் தடம் பதித்த பின்னர் வந்த படைப்பாளிகளில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, ஆ. மாதவன் என்ற வரிசையில் வருபவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் நாஞ்சில் நாடனுக்குத் தனி இடம் உண்டு. இந்த வரிசையில் வருபவர்களில் நான்கு பேர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள். நாஞ்சில் நாடன் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்தவர், எவரையும் புண்படுத்தாதவர். இவரிடம் இழையோடும் சிரிப்பும் மண்ணின் மணமும் இவரை இனம் காட்டுகின்றன” என்றார்.
இறுதியாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார். “நான் எழுத ஆரம்பித்தபோது என்னைத் தட்டிக்கேட்டு உணர்த்தியவர் சுந்தர ராமசாமி. ‘நாஞ்சில், நம்மிடம் நிறைய எதிர்பார்க்க அதிகம் பேர் இல்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதே தொனியை இப்போது எனக்கு ஜெயமோகன் உணர்த்துகிறார்.
“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் உணர்வு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
டாக்டர் வ. ஜெயசீலி வரவேற்றுப் பேசினார். பேரா. ஜாக்குலின் நன்றி கூறினார். செல்வி மெர்லின்மேரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். முதல் அமர்விலும் மூன்றாம் அமர்விலும் கவிஞர் ராஜ்குமார் பாடிய பாட்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியது இக்கருத்தரங்கின் சிறப்பு. இன்னொரு சிறப்பு பேரா. அ. பெர்னார்டு, சந்திரா இருவரும் முறையே நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் அறிமுகப்படுத்தியது. சொற்புனைவு இல்லாமல் அறிமுகப்படுத்த முடியும் என்பதைச் சந்திரா இக்கருத்தரங்கில் நிரூபித்தார். நவீன இலக்கிய அரங்குகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இவரது அறிமுக உரைகளைக் கொள்ளலாம்.
தமிழர் பண்பாடு
குமரி மண்ணின் மரபு :: நாஞ்சில்நாடும் விளவங்கோடும்
குமாரசெல்வா
உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது”
(மத்தேயு 26 : 73)
விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான்.
“வணிகரே! பழங்கள் உள்ளனவா?”
“இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?”
“பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?”
“ஒரு ரூபாய்.”
“ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?”
“தருகிறேன்.”
“அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.”
“பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?”
“வேல மயிரு காட்டாத ரெண்டு பழம் இனிஞ்சி எடுவிலே இஞ்ச.”
தனது வட்டாரச் சுபாவத்தை ஒருவனால் ஒருபோதும் திரைபோட்டு மறைக்க முடியாது. மனத்தில் ஆழப்பதிந்த அது எந்த வகையிலாவது பேச்சில் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் விளவங்கோட்டுக்காரனால் இன்னொரு வட்டாரம் சார்ந்த மொழியில் தொடர்ந்து உரையாட முடியவில்லை.
தாய்த் தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்வி, “நீங்கள் தமிளும் மளையாளமும் களந்து பேசுகிறீர்களே?” என்பதாகும். அப்போதெல்லாம், நாங்கள் மலையாளிகள் அல்ல என்றும் தமிழன் இழந்த நிலப்பரப்பில் முதன்முதலாக அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவை மலையாளிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்கள் நாங்கள்தானென்றும் அதற்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் சுடப்பட்டு இறந்தும் வீட்டுக்கொருவர் ஊனம்பட்ட கதைகள் குறித்தும் நாங்கள் பேசும் தமிழ் சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் பட்டியலிட்டு மிகப் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்த நேரிடும்.
இதற்கு ஒரு படி மேலே போய் இலக்கியவாதிகள் என்னிடம், “ஒங்க நாஞ்சில் தமிழ் அருமை” என்று கூறுவதுண்டு. நாஞ்சில் நாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நான் அவர்களுக்கு விளக்குவது இருக்கட்டும், முதலில் ஒட்டுமொத்தக் குமரிமாவட்டத்தையும் ‘நாஞ்சில்நாடா’க மாற்றியவர்கள் யாரென்று தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.
குமரி மண்ணின் மேற்குக் கரையோரமாக இருக்கும் எங்கள் விளவங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்னும் அடைமொழியை ஏன், எதற்கென்று தெரியாமலேயே போட்டுக்கொள்கிறார்கள். மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொள்ளும் முயற்சி இது. தென்னைமரமேறும் சாதியைச் சேர்ந்த மனோகரனுக்குத் திராவிட அரசியலில் தன்னை வெள்ளாளராக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அடுத்தது இலக்கியவாதிகள். “ஹெப்சிபாவின் கதை மாந்தர்கள் தென்மாவட்டமான நாஞ்சில் பகுதியின் கிறிஸ்தவச் சமயத்திலிருந்து விளைந்தவர்கள்”- சிற்பி. பாலசுப்ரமணியன்.
“கன்னியாகுமரி மாவட்டமும் திருவனந்தபுரத்தின் தமிழ்ப் பகுதியும் இங்கு நாஞ்சில்நாடாகக் கருதப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த பகுதியாக உள்ள இதனை உழவுக்கருவியால் நாஞ்சில் என்று வழங்குகின்றனர்.” (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப:13)
“அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்கள் மட்டுமே நாஞ்சில்நாடு என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டபோதிலும் அகஸ்தீசுவரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்களுமே பொதுவாக நாஞ்சில்நாடு எனக் கருதப்படுகிறது என்பதைக் குமரிமாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களிலுள்ள வாசகர்களுக்கு விளக்குவது அவசியம் என்று கருதுகிறேன்” (என். ராமகிருஷ்ணன், ஜி.எஸ். மணி – குமரிக்கடலின் புயற்பறவை)
மேற்கூறியவற்றிலிருந்து இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் என்று நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தாராளவாதப் போக்கில் ஒலிப்பது வெள்ளாளக் கருத்தியல் புனைவாகும்.
1684 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இன்றைய குமரிமாவட்டம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தையும் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையும் தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவையும் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. இதில் மூன்று முக்கிய இயற்கைப் பிரிவுகள் அடங்கியுள்ளன. வடகிழக்குப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டதாகும். விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் அதிகமாக இதன் பாதிப்பில் உள்ளன. ‘காணிகள்’ என்று சொல்லப்படும் ஆதிவாசிகள், ரப்பர் தொழிலில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள், பனையேறிகள், கேரளம் முழுக்கச் சென்று கட்டடம் கட்டும் உழைப்பாளர்கள், வாழை, மரிச்சினி கிழங்கு, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் இவ்விரு தாலுகாக்களையும் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய மூன்று புறங்களும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம்வரை 68 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இப்பகுதிகளில் மீனவர்களும் இசுலாமியர்களும் பிறசாதி மக்களும் வசிக்கிறார்கள். மலையின் ஆதிக்கத்தில் உள்ள சமவெளிப் பிரதேசமான தோவாளைப் பகுதியின் சில பாகங்களே நாஞ்சில்நாடாகும். அகஸ்தீசுவரம் தாலுகாவில் காற்றாடிமலை, மருத்துவா மலை, கல்மலை இருப்பதுபோலத் தோவாளை தாலுகாவிலும் தாடகை, மகேந்திரகிரி மலைகள் உள்ளன. மகேந்திரகிரி மலையின் வடக்குப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் பறளியாறு, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களின் வழியாக ஓடித் திருவெட்டாற்றில் கலந்து தேங்காய்ப்பட்டணம் கடலோடு சேர்கிறது. நாஞ்சில்நாட்டின் வேளாண்மைக்காகப் பறளியாற்றின் குறுக்கே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ‘பாண்டியன் அணை’ கல்குளம் தாலுகாவில் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு பண்பாட்டுத் தொடர்பை ஓரளவு வைத்திருப்பது தோவாளை தாலுகா என்பதால்தான் நாஞ்சில்நாட்டை மொத்தத்திற்கும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆரல்வாய் மொழிக் கணவாய் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கும் வகையில் அமைந்து, நெல்லையைத் தாய்த் தமிழகத்தின் எல்லையாகவும் குமரியைத் தொல்லையாகவும் ஆக்கிவிட்டது.
தமிழகத்தோடுள்ள தொடர்பு நிலவியல் எல்லை என்பதையும் தாண்டி வரலாற்றிலிருந்தே அதற்கான ஆதாரங்களை நாம் கண்டுகொள்ள முடியும். நாஞ்சில் நாட்டைப் பாண்டியர்களும் அதன் பின் சோழ மன்னர்களும் ஆண்டபோது, விளவங்கோடு பகுதிக் குறுநில மன்னர்களான ஆய் மற்றும் வேணாட்டரசர்களின் கீழ் இருந்துவந்தது. பாண்டிய மன்னர்கள் ஆய்க்குறுநில மன்னர்கள்மீது தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே ஆய் மன்னர்களின் ஆதிக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் மேற்குப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றனர். இந்தப் பேரரசு – சிற்றரசு மோதல்தான் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்களைக்கூட ‘நாஞ்சில் நாடு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கல்வெட்டுக் குறிப்புகள் அகஸ்தீசுவரம் தாலுகாவிலுள்ள பல பகுதிகள், அதாவது கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், வடசேரி இவையெல்லாம் ‘புறத்தாய நாடு’ என்பதன் கீழ் அடங்கியிருந்ததாகக் கூறுகிறது. இது தவிரக் கல்குளம் தாலுகாவில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருந்த தகவலையும் அறிகிறோம். உழக்கிலே கிழக்கு மேற்கு என்றாற்போல முஞ்சிறைச் செப்புப்பட்டயங்களைப் பார்க்கும்போது, முடாலநாடு, தெங்க நாடு, ஓமாயநாடு, குறும்பனைநாடு என்று பலநாடுகள் இருந்திருக்கும்போது பண்பாட்டுக்குள்ளே மாற்றங்களும் வித்தியாசங்களும் உருவாகாமலா இருக்கும்?
வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் மொழிசார்ந்தும் பண்பாடுசார்ந்தும் எத்தனையோ பிரிவுகள் இந்த இரண்டாயிரத்துக்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட, மொத்தத் தமிழ்நாட்டில் 1.29 சதவீதம் நிலமுடைய, இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. சேரநாட்டு அரசதிகாரத்தின் கீழாகவும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் சோழர்களின் அதிகாரத்திலும் மலையாள ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கையின் கீழும், பல்வேறு அரசியல் போராட்டங்களின் களமாகவும் இப்பகுதி திகழ்ந்துள்ளது. இயேசுவின் சீடரான தோமா, பிரான்சிஸ் சேவியர், வாஸ்கோடகாமா, இஸ்லாமியரான முகிலன், அய்யா வைகுண்டர், நாராயண குரு, டிலனாய், றிங்கல் தௌபே, புத்தசமயம், சமணசமயம், விவேகானந்தர் தவம், பீர்முகமது அப்பா ஞானி இன்னும் எத்தனையோ சிந்தனைகள் முட்டி மோதிநிற்கும் களம் இது. எழுத்தாளர்களிடம் இந்த வேறுபாடுகள் மிகப் பெரியதாக விளங்குகின்றன.
ஒரே சாதிசார்ந்த, ஒரே மதம்சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசனும் ஐசக் அருமைராசனும். ஆனால் எழுத்தில் வேறுபடுகிறார்கள். ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த ஐசக் அருமைராசனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள். இருவருமே புன்னைக் காடு பற்றி எழுதி இருந்தாலும் இரண்டுமே வேறுபட்டவை. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் சாதிசார்ந்தும் தோப்பில் மீரானின் சாய்வு நாற்காலி சமயம்சார்ந்தும் வெளிப்படுகின்றன. மீனவர் சமுதாயத்திலிருந்தும் ஆதிவாசிகள் சமூகத்திலிருந்தும் காத்திரமான படைப்புகள் இன்னும் வெளிப்படவில்லை. தமிழவன், லஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் எழுத்துக்களும் ஏனைய குமரிமாவட்ட எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பவை. புனைகதை எழுத்துக்களைவிடக் கவிதைகளில் இந்த வேறுபாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ‘நாஞ்சில் இலக்கியமாக’ எப்படிப் பொதுவாக்க முடியும்?
இந்த உண்மையை உணர்ந்த நாஞ்சில் நாடன் கூறுகிறார், “பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையையும் நீல. பத்மநாபனின் தலைமுறைகளையும் ஹெப்சிபா ஜேசுதானின் புத்தம் வீட்டையும் தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களையும் ஜெயமோகனின் ரப்பரையும் ஐசக் அருமைராசனின் கீறல்களையும் எனது நாவல்களையும் நாஞ்சில் வட்டார வழக்கு நாவல்கள் என்கிறார்கள். இது எவ்வளவு நகைப்புக்குரிய பகுப்பு. இவர்கள் எழுதுவது எல்லாம் ஒரு மொழியா? ஒரு வட்டாரமா? எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மொழி, வாழ்க்கை, பண்பாடுகள்” (‘எனது நாவல்களும் வட்டார வழக்கும்’ கட்டுரையிலிருந்து.)
ஒரு வட்டாரம் அதற்குள்ளேயே சுழலும்போது மதம் அல்லது சாதியின் மேட்டிமைப் பண்பால் இறுகிவிடக்கூடிய அபாயம் உண்டு. பிறசமூகங்களுடன் கலப்பை ஏற்படுத்தும்போது அந்த வட்டாரம் படைப்பிற்குள் விரிவடைந்து இன்னொரு பரிமாணம் பெறுகிறது. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவல் இதற்கு உதாரணம். அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்கள் நாவலில் வரும் நல்ல பெருமாள் உதாரணம். ஒரு வட்டாரம் எனப் பகுத்த எல்லைக்கு உள்ளேயும் நமக்குத் தெரியாத வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு வாஸவேச்வரம் கிருத்திகாவும் பா. விசாலமும் அழகிய நாயகி அம்மையாரும் சாட்சிகள்.
பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் குழந்தைக்குப் புலையர் சாதி தேவி பால்கொடுப்பது, இரவில் ஓலைச்சூட்டுப் பந்தம் கொடுக்க இஸ்லாமியரிடையே குடியமர்த்தப்பட்ட இந்து அப்பா, ஆங்கிலப் பள்ளியை சரஸ்வதி கோயில் என்று கூறிக் கொளுத்த மறுக்கும் தாழ்த்தப்பட்ட கறுப்பன், முன்சிறை சின்னான் ஆசான் போன்றவர் மாணிகளின் மருத்துவப் பணிகளை விதந்தோதுவது போன்ற சித்தரிப்புகள் மீரானைப் பெருந்தன்மை மிக்க படைப்பாளியாக்குகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பார்த்துப் படிக்க வேண்டிய மிகப் பெரிய முன்னுதாரணத்தை மிகப் பிந்தி இலக்கிய உலகில் வெளிப்பட்ட இந்த மூத்த எழுத்தாளர் தருகிறார்.
விளவங்கோடு வட்டாரத்தில் ஜோசப்பிலிப், அசோகஜெயன், ஜெயடேவி, ஜே. ஆர். வி. எட்வர்ட், அதங்கோடு கலா போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் எழுத்துக்களில் கேரள எல்லைப் பகுதியில் அரிசி கடத்துபவர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், வயோதிகக் காலத்திலும் பனையேறிப் பிழைப்பவர்கள், கேரளா சென்று பிழைக்கும் கட்டடத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் போன்றவர்களின் அவலங்கள் வெளிப்படுகின்றன. குமரிமாவட்டத்தின் இதரப் பகுதி எழுத்தாளர்களிடமிருந்து தனித்தும் வித்தியாசப்பட்டும் எழுதும் இவர்கள் ஒவ்வொரு தொகுப்புடன் அடங்கிப்போனதால் தாய்த் தமிழகம் இவர்களை அறியும் வாய்ப்பு இல்லாமற்போய்விட்டது.
விளவங்கோடு வட்டாரத்தில் தற்போது குறும்பனை பெர்லின், புத்தன்துறை தாமஸ் போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களிடையே தோன்றி எழுதுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைச் சற்றுப் பொறுத்திருந்து மதிப்பிடலாம். அதுவரைக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி நிலைநிறுத்துவோம். ஆதிவாசிச் சமூகம் இவர்களைப் போல் தனக்குள்ளிருந்து ஒரு எழுத்தாளனை நாளை தரலாம். சுரேஷ்சாமியார் காணி என்ற பழங்குடி பாரதி போன்ற காணி மக்களின் முன்னேற்றத் தொண்டர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது. இந்த வித்தியாசங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ‘குமரி மண்ணின் எழுத்து மரபு’ எனக் கூறலாமே தவிர, ‘நாஞ்சில்’ என்பதன் கீழாகவோ அதற்கெதிராகத் தக்கலையில் சிலர் ‘வேணாடு’ என்று நிலைநிறுத்துவதுபோலவோ செயல்பட்டால் அவை எல்லாம் சாதியை நிலைநிறுத்தும் மரபுகளாக மாறிவிடும்.
விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, “வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி” என்றது நினைவுக்குவருகிறது.
‘ஆனந்த விகட’னில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளக்கமளிக்க பெருமாளைத் தொடர்புகொண்டதாகவும் அவர் அளித்த தமிழக வரலாற்று ஆவணங்களைக் கொண்டு, தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக நிற்க முடிந்தது எனவும் நாவலாசிரியர் நாஞ்சில் நாடன் நினைவுகூர்ந்ததோடு மண்டிகர் வாழ்க் கையை அற்புதமாக அவர் பதிவு செய்துள்ள விதத்தையும் பாராட்டினார்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார், இதழ் நடத்தியிருக்கிறார், பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன் “நான் சுமார் நாற்பது வருடங்களாகச் சுக்குப்பால் குடித்து வருகிறேன் குடிக்கும் ஒவ்வொரு முறையும் நாக்கு பொத்ததுண்டு. ஆனால் ராஜமார்த்தாண்டனோடு பலமுறை இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டபோது வார்த்தைகளில் சூடேறி நட்புறவு பொத்ததில்லை என்று கூறினார்.
பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருக்குக் குறிப்பறிந்து உதவி செய்ய ஒரு செட்டியார் நண்பர் எப்போதும் உடனிருப்பார் என்று வ.ரா. தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே சு.ரா.விற்கு நண்பராக எம்.எஸ். இருந்தார் என வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாள் கூறினார். சு.ரா. வீட்டில் நிகழும் இலக்கிய விவாதங்களில் எம்.எஸ். இருப்பார். ஆண்டுகள் குறித்தோ ஆசிரியர் பெயர் குறித்தோ சந்தேகம் வரும்போது எம்.எஸ். பக்கம் சு.ரா. திரும்புவார். அதற்குரிய பதிலை மட்டும் ஒரு சில சொற்களில் அவர் கூறுவார். அளவாகவே பேசுவார். உணவிலும் கட்டுப்பாடு உண்டு. தமது அடையாளம் சு.ரா.வின் நண்பர் என்றிருக்க வேண்டும் எனக் கருதுவார். காகங்கள் முதல் கூட்டத்தின் முடிவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நாஞ்சில் நாடன் நாவல் குறித்த தமது விமரிசனக் கட்டுரையைப் படித்தார். நாஞ்சில் நாடன் அவரைக் குறிப்பிடும்போது ‘நோய்களை அண்டவிடாதவர்’ என்பார். ‘காலச்சுவடு’ முதல் இதழின் உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘ஒரு மாதிரி இதழ்’ தயாரித்து அளித்தார். செயல் திறன் மிக்கவர் என்று அ.கா. பெருமாள் தமது பாராட்டுரையை நிறைவுசெய்தார்.
நாஞ்சில் நாடன் | நடுநிலைச் செம்மல் விருது |
சென்னை சங்கமம்
தமிழ் இயல் கருத்தரங்கம்
சொற்பந்தல்களைத் தாண்டி ஓர் அரங்கம்
பழ. அதியமான்
‘நாவலின் எதிர்காலம்’ நாஞ்சில் நாடனின் கையில் இருந்தது. தமிழ் நாவலின் வரலாற்றில் தமிழ் பேசும் மற்ற நாடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்கத் தமிழ் நாவல் வரலாற்றை மறுபடியும் பேசும்படியாயிற்று. ஒரு நாவல் எழுதிப் புகழ் பெற்றவர்கள் உள்பட சக நாவலாசிரியர்களை வஞ்சனையில்லாமல் புகழ்ந்தார். நாட்டில் நடைபெறும் சமூகச் செயல்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஓர் எழுத்தாளனால் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்டார். நொய்டாவில் நடந்த உடல் உறுப்புத் திருட்டு, பாலியல் வன்முறையாகத் திரிக்கப்படுவதாகப் பத்திரிகைகள்மீது குற்றம்சாட்டினார். இன்று நொய்டாவில் நடந்தது நாளை ஏன் சென்னை, திருப்பூரில் நடக்காது என்று கோபமும் வருத்தமும்கூடிய தாங்கொணாத் துயரத்தோடு வினவினார். வலி நிரம்பிய வாழ்க்கையின் வேதனையைப் பற்றிப் பேசாமல் நம் கதைகள் தொடர்ந்து காப்பி ஆற்றிக்கொண்டிருக்க இயலாது என்று முடித்தார் தீர்க்கமாக. பிரபஞ்சனின் தொனியிலிருந்து மாறுபடாததாகவே நாஞ்சில் நாடனின் குரல் அன்று ஒலித்தது.
வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
பெருமாள்முருகன்
சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளனுக்குப் பலவிதத் தடைகள் உள்ளன. சுதந்திரமாகப் படைப்பை உருவாக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்க எழுத்துக்கள்போல ஒரு ஊரில் ஒரு பண்ணையார், அவனிடம் ஒரு அடிமை என்பதாகச் சாதிப் பெயர்களை அடையாளப்படுத்தாமல் எழுதினால் பிரச்சினையில்லை சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும்போது மனம் தன்னை அறியாமலே சில எச்சரிக்கைகளுக்கு ஆளாகிவிடுகிறது. ஆகவே நிலவுடைமைகொண்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பற்றி எழுதப்பட்டவையான வட்டார இலக்கியங்கள் தமக்கெனச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டன என்று சொல்லலாம்.
சாதிக்கு மேன்மைதரும் வகையாக எழுதுவது அல்லது கீழ்மைதரும் விசயங்களைத் தவிர்த்துவிடுவது என்னும் வரையறை இவற்றிற்குள் செயல்பட்டுள்ளது. ஒரு சாதியின் ஒரு குடும்பத்துப் பிரச்சினைகளை எழுதிவிட்டால் போதும். ஒரு சாதிக்குள்ளேயே நிகழும் பங்காளித் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றை எழுதுவது என்பதான வரையறைகள் காணப்படுகின்றன. ஆர். சண்முகசுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பலரது நாவல்களை அவ்வாறு காணலாம்.
சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கனல் – 4
4.1.97 சனிக்கிழமை
நேர் நிரை – சிறுகதை. நாஞ்சில் நாடன். ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர் 96.
கூழைக் கொம்புப் பசு. காளையங்கன்றுகள். கடைசி ஈத்து. (பிரசவம். மிருகங்கள் சம்பந்தப்பட்டு). கிடாரியா கிடேரியா? ஆனை அறுகம் புல். பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. தொழுப்பிறப்பு. பின் ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குப் பூறி லாடம் அடிக்க வேண்டும். காலால் பசு ஒற்ற ஆரம்பித்தது.
நல்ல தமிழ். பின்னணியையும் வாழ்க்கை முறையையும் கண் முன்னே நிறுத்த உதவும் மொழி.
பால்ராஜ் தன் சகோதரி பேரின்பத்திற்குத் தன் வீட்டுப் பசுங்கன்றைத் தர விரும்பி அவள் வீட்டுக்குச் செல்கிறான். கதையின் முக்கால் பங்கு இந்த விஷயத்தை நுட்பத்துடன் சொல்கிறது. அடுத்தது கங்காதரனைப் பற்றியது. சுகவாசி, மண்ணோடு சம்பந்தமில்லாமல், உழைப்பில் ஈடுபடாமல் இருக்கிறான். கங்காதரன் ஓட்டலில் உணவருந்தும்போது பால்ராஜ் வந்து அவன் மேஜைமீது உட்கார்ந்து கொள்கிறான். கங்காதரன் இடம் மாறுகிறான். கங்காதரனிடம் உழைப்பும் இல்லை; காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. பால்ராஜின் வாழ்க்கை, பேரின்பத்தின் வாழ்க்கை விரும்பும்படி இருக்கிறது.
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
குமாரசெல்வாவின் கட்டுரை (காலச்சுவடு, மார்ச் 2011) தொடர்பான எனது கருத்துகள்:
ஒட்டுமொத்த குமரிமாவட்டத்தையும் நாஞ்சில்நாடாகக் கருதும் மயக்கம் பெரும்பான்மையான குமரி மக்களிடமும் இருக்கிறது. ‘நாஞ்சில் நாடு’ என்பது ஒட்டுமொத்த குமரி மண்ணையும் குறிப்பதல்ல என்பது அநேகருக்குத் தெரியாது. நாகர்கோவில் – கோவை ரயிலுக்கு ‘நாஞ்சில் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென எழுந்த கோரிக்கை இந்த அறியாமையின் விளைவே.
குமரி மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள கிழக்கு x மேற்கு என்ற எதிர்வு, நாஞ்சில் நாடு x விளவங்கோடு எதிர்வின் நீட்சியாகவே தெரிகிறது. இது இப்போது மறைந்துவருகிறது என்றாலும் அதன் சுவடுகள் பலரது மனங்களிலும் இன்னும் அழியாமல் உள்ளன.
‘விளவங்கோட்டான்’ என்னும் பதத்தைப் ‘பண்பாடற்றவன்’ என்னும் பொருளில் பிரயோகிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பிரயோகிப்பவர்களில் பெரும்பாலோரும் கற்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். பிடிவாதம், மனஉறுதி, பின்வாங்காமை இவை விளவங் கோட்டுச் சுபாவங்களாம். குமரி மாவட்ட விடுதலைப் போரில் விளவங்கோட்டுப் பிற்பட்ட வகுப்பினர்கள் காட்டிய தீவிரமும் உறுதியும் அவர்களுக்கு இந்த நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அது கிண்டல் கேலியாக எதிர்மறைப் பொருளில் மாறிய கதையின் பின்னணி தெரியவில்லை. ‘விளவங்கோட்டான்’ என்பது ஒட்டுமொத்த விளவங்கோட்டு மக்களையும் குறிப்பதில்லை. விளவங்கோட்டு உயர்சாதியினர் இதற்குள் அடங்கமாட்டார்கள்.
நாஞ்சில்நாட்டு மக்கள் நெல்லையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள். விளவங்கோட்டு மக்களோ திருவனந்தபுரம் மாவட்டத்துடன் தொடர்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவர்கள். கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணையப் போராடினாலும் கேரளத்து மக்களுடன் தொடர்ந்து பரிமாற்றமும் மணஉறவும் செய்துவருபவர்கள் விளவங்கோட்டு மக்கள்.
குமாரசெல்வா கட்டுரை ஒரு ஆழமான ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி மட்டுமே. நுட்பமாய் ஆய்ந்து பட்டியலிட எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.
எதிர்வினை
தமிழர் பண்பாடு என்னும் கற்பிதம்
மதிகண்ணன்
குமரி மரபு, நாஞ்சில் மரபாக மாறிப்போனதாகக் கூறவரும் கட்டுரையில் ‘உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது’ (மத்தேயு 26:73) என்னும் விவிலியத்தின் வரிகளை முன்னொட்டாகக்கொண்டு தொடங்குகிறார் குமார செல்வா. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் லயோலோ கல்லூரியின் தொடர்பு மற்றும் பண்பாட்டியல் துறையால் சு. சமுத்திரத்தின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பின் நவீனத்துவக் கருத்தரங்கில் மலையாளம் கலந்த தன் பேச்சுமொழியில் அற்புதமாகப் படைப்பாளராகத் தான் பரிணாமப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார் குமார செல்வா. அந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கவனிக்கவைத்த மிகச் சிறந்த பேச்சுகளில் குமார செல்வாவினுடையதும் ஒன்று. அந்த உரையினூடே தான் பள்ளிக் கல்வி முடிக்கும்வரை பாடத்திட்டத்திற்கு வெளியே தனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே நூல் பைபிள் மட்டுமே எனக் குறிப்பிட்டார் அவர். இளமைக் காலந்தொட்டு தொடர்ந்த பாதிப்பின் வழிப்பட்டதாகவே இந்தக் கட்டுரையின் முன்னொட்டை என்னால் பார்க்க முடிகிறது. அது அவரது நம்பிக்கை / உள்ளுணர்வு / ஊறிப்போன அகம் சார்ந்த விஷயமன்றி வேறல்ல. பழையதொரு (புனித / பாவ) நூலின் வரிகள் அதற்கு எதிர்மறைப் பொருள் தரும் படைப்பிற்கோ கட்டுரைக்கோ முன்னொட்டாக இருக்குமாயின் அதுவும்கூட எழுத்தாளரின் அகம் சார்ந்த விஷயம்தான். இதுவும் பண்பாட்டின் அங்கம்தான் எனில் பண்பாடென்பது மொழி சார்ந்ததா? மதம் சார்ந்ததா?
வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதக்கூடிய பலரையும் நாஞ்சில் இலக்கியவாதிகள் என்பது தவறு. சிறு பகுதியிலேயே இத்தனை மொழி, வாழ்க்கை, பண்பாடுகள் எனில் ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை, ஒரே பண்பாடு என்பது சாத்தியமா?
a
Kaalachuvadu Kannan Interview: Uyir Ezhuthu
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
1
ஆண்டிலேயே என்னுடைய வருங்காலத் திட்டங்கள் பற்றித்
தெளிவாக அவரிடம் சொன்னேன் என்றார். எனக்கு ஞாபகம்
இல்லை. பெங்களூர்ல இருக்கிறப்ப முக்கியமாக உலக
ஆங்கிலப் பத்திரிகைகளை நிறையப் படிச்சேன். உலக
இதழியல் பற்றிய ஒரு வரைபடம் மனதில் ஏற்பட்டது.
. உங்கள் வீட்டிற்குப் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் வந்து சுந்தர ராமசாமியுடன்
பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். மாணவப் பருவத்தில் உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
பொறியியல் பட்டதாரியான நீங்கள் ‘காலச்சுவடு’ இதழுக்கு ஆசிரியராக மாறிய சூழல் எப்படி
உருவானது?
என்னைப் பொறியாளர் என்று சொல்ல முடியாது. வெளியூர்ல போளிணிப் படிக்க விரும்பினேன். அதனால் பெங்களூர் போனேன். அப்ப மீடியா படிப்புக் கிடையாது; இருந்திருந்தால் அதுதான் படிச்சிருப்பேன். ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து என் அக்கா தைலா வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது 1986 – 87ஆம் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் 1994ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாகக் கண்ணனால் தொடங்கப்பெற்ற ‘காலச்சுவடு’ தனித்த அடையாளத்துடன் விளங்குகின்றது; பல்வேறு புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் ‘அதிகார
மையம்’, ‘வணிகக் குழுமம்’, ‘அதிகார பீடம்’ போன்ற சொற்கள் மூலம் ‘காலச்சுவடு’ பற்றிய ‘பேச்சுகள்’ வெளியெங்கும் மிதக்கின்றன. சிறுபத்திரிகை என்றால் மட்டமான அச்சமைப்பில் 300 பிரதிகளுடன் அவ்வப்போது வெளிவந்து, அற்ப ஆயுளில் மடிந்திட்ட சூழலில், ‘காலச்சுவடு’ புதிய போக்கினை உருவாக்கியுள்ளது. இன்று ‘உயிர் எழுத்து’, ‘தீராநதி’, ‘உயிர்மை’, ‘அம்ருதா’, ‘வார்த்தை’ போன்ற இதழ்கள் ஆழமான விஷயங்களுடன் வண்ணமயமாக, அழகிய அச்சமைப்பில் வெளிவந்துகொண்டிருப்பது தற்செயலானது அல்ல. இதனால் தமிழில் தீவிரமான வாசகத்தளம் விரிவடைந்து, உலகெங்கும்
பரவியுள்ளது. சுந்தர ராமசாமி என்ற இலக்கிய ஆளுமையினை அடையாளமாகக்கொண்டு தொண்ணூறுகளில் தமிழ் அறிவுலகிற்கு அறிமுகமான, ‘காலச்சுவடு’ ஆசிரியரான கண்ணன் பற்றியும் அவருடைய செயற்பாடுகள் பற்றியும் ஆன உரையாடல் இது. நாகர்கோவிலில் பதிவு செளிணியப்பட்ட நேர்காணலின் பிரதியில், சிலவற்றைச் சேர்த்தும் திருத்தியும் சீரமைத்துள்ள கண்ணன், இரண்டாம் கட்டமாக அனுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதிலையும் எழுத்துபூர்வமாக அனுப்பியிருந்தார். அவையும் உரிய இடங்களில் நேர்காணலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ந. முருகேசபாண்டியன்
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
பொதுவாக அப்பாவோட நண்பர்கள் பலர் எங்க வீட்டிற்கு வந்து போளிணிக்கொண்டிருப்பார்கள். பல நாட்கள் தங்கியிருப்பார்கள். பல மாதங்கள் தங்கியிருந்ததும் உண்டு. எங்க அம்மா அதைத் தொந்தரவாக
எடுத்துக்கொள்ளமாட்டாங்க. அதனால, நாங்களும் அப்படித்தான் இருந்தோம். எனக்குப் பலதரப்பட்ட
அனுபவம் கிடைச்சுது. புத்தகங்கள், எழுத்தாளர்கள், பிறதுறைக் கலைஞர்கள் புழங்கிய சூழல், பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியது. பொதுவாக எங்கள் வீட்டில் எல்லோருக்குமே வாசிக்கிற பழக்கம் உண்டு.
எழுத்தாளர்களின் குழந்தைகளுக்குப் பொதுவாக இலக்கிய ஆர்வம் இருப்பதில்லை. . . நீங்கள் எப்படி
விதிவிலக்கானீர்கள்? சு.ரா.வின் வழிகாட்டுதலின் பேரில் உங்களுக்குள் இலக்கியத் தேடல்
ஏற்பட்டதா?
நான் என்னை இலக்கியவாதியாகப் பார்க்கவில்லை; பத்திரிகையாளனாகப் பார்க்கிறேன். பதிப்பாளராகப்
பார்க்கிறேன். அப்பா பண்பாட்டுத் தளத்தில் என் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எதாவது வலுக்கட்டாயமாகப் பண்ணியிருந்தால் எனக்கு முரண்பாடு வந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் கல்யாணமான புதிதில் மனைவிக்கு ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ புத்தகம்
கொடுப்பார்கள். அப்புறம் இன்னும் சில இலக்கியப் புத்தகம் தருவார்கள். மனைவி அதைப் படிக்கவில்லை என்றால் ‘மக்கு’ என்ற எண்ணம் உருவாகும். வாசிப்பைப் பொறுத்தவரை யாரும் விரும்பினால் படிக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். ஒருவரை வாசிப்பின் அடிப்படையில் மட்டும்
எடைபோடுவது அபத்தமானது. அப்பா மறைமுகமாக என்னைத் தூண்டியிருக்கலாம், நேரடியாக
வலியுறுத்தியதில்லை.
அவர் எழுத்திலும், அவர் எழுத வேண்டும், தொடர்ந்து உற்சாகமாக இயங்க வேண்டும் என்பதிலும் அதற்குத் தேவையான காரியங்களைச் செளிணிவதிலும் எனக்கு மட்டுமல்ல மறைந்த என் அக்கா சௌந்திராவுக்கும், சகோதரிகள் தைலா, தங்குவிற்கும் அவர்களின் கணவர்களுக்கும் என் மனைவிக்கும், முக்கியமாக என் தாயாருக்கும் முழு விருப்பம் உண்டு. அவர் மரணமடையும்போது தனக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் இருப்பதான மனநிறைவுடனேயே இருந்தார் (என் சகோதரிகளின் கணவர்களையும் என் மனைவியையும் சேர்த்து). தமிழக இலக்கியச் சூழலுக்கு நேர்மாறானதாக
இருந்தது அவருக்கு அமைந்த குடும்பச் சூழல்.
அந்த விதத்தில் அவர் கொடுத்து வைத்தவர். தமிழக இலக்கியச் சூழலில் பிரமிள், ஜெயமோகன் போன்றவர்களின் வெறித்
தாக்குதல்களைப் புறந்தள்ளி இறுதிவரை வேகத்தோடு
இயங்க, சு.ரா.வின் இயல்பான மன வலிமையோடு
குடும்பத்தின் ஆதரவும் முக்கியக் காரணம்.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை, சாஸ்திர
சம்பிராதயங்களில் நம்பிக்கை உண்டா?
இல்லை. சுமார் 14 – 15 வயதில் இன்று சென்னையில்
மனோதத்துவ நிபுணராக இருக்கும் டாக்டர் மோகனும்
நானும் பல ‘உலகளாவிய’ விஷயங்களை விவாதிப்பது
வழக்கம். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வயதுக்கு
மீறி யோசித்தோமோ என்று தோன்றுகிறது. சாதி
சம்பிரதாயங்கள் தேவையில்லை என்பது அதில் ஒன்று.
ஜெயேந்திரர் நாகர்கோவில் வரும்போது எங்கள் வீட்டிற்கு
அருகில்தான் தங்குவார். அவருடைய நடவடிக்கைகளைக்
கடுமையாக விமர்சித்துப் பேசி, மோகன் வீட்டில் நாங்கள்
திட்டுவாங்கியது நினைவிருக்கிறது. மாமிச உணவை
உண்பதில்லை என்றும் – வன்முறை தவிர்த்தல் கருதி – முடிவு
செளிணிதோம். மோகனின் வைராக்கியம் இரண்டு வாரம்
நீடித்தது. நான் இன்றும் மரக்கறி உணவுதான். போதைப்
பொருட்களையும் இன்ன பிற புசிக்கக்கூடாத கனிகளையும்
தீண்டிப் பார்த்துவிடுவது, ஆனால் எதற்கும்
அடிமையாவதில்லை என்பது என் முடிவாக இருந்தது.
வாழ்க்கை ஏகதேசமாக இந்த வரைகோட்டில்தான்
ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளைப் பற்றி நான்
சிந்திப்பதில்லையே தவிர நான் நாஸ்திகவாதி அல்ல. வாழ்வின்
தாக்கமும் அனுபவமும் பரம்பொருளின் இருப்பை எனக்கு
உணர்த்தினால், தமிழக முற்போக்காளர்களின் குட்டையில்
என் பிம்பம் சிதறிவிடுமோ என்ற கவலை எதுவும் இன்றி
அந்தப் பாதையிலும் பயணிப்பேன்.
உங்கள் எழுத்தில் சு.ரா.வின் செல்வாக்கு எந்த அளவு
உள்ளது?
சு.ரா.வின் மதிப்பீடுகள்மீது எனக்கு மரியாதை உண்டு.
நான் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து சு.ரா.வின் மொழியின்
தாக்கம் என் எழுத்தில் இல்லை. ஆனால், என்னோடு
சமகாலத்தில் இயங்கிய பலருக்கும் அவருடைய
மொழிநடையின் தாக்கமிருந்தது. இன்றும் இருக்கிறது.
அவருடைய எதிர்நிலைக்குச் சென்ற பின்னரும் அவரைச்
சிறுமைப்படுத்தும் கருத்துக்களை அவருடைய
மொழியிலேயே முன்வைக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும்
புதிய விக்ரகங்களின் பாதிப்புகள் எதுவும் அவர்கள்
மொழியில் இல்லை.
சு.ரா.வுடன் ஒருமுறை நான் பேசிக்
கொண்டிருந்தபோது, அவர், “எனக்கு எந்த
விஷயமும் ஜீமீக்ஷீயீமீநீt ஆக இருக்க வேண்டும்.
கண்ணனுக்கு அது பிரச்சினை இல்லை” என்றார்.
அது சரிதானா?
அப்பாவுக்கு நேர்த்தி சார்ந்த அழுத்தம் அதிகமாக
இருந்தது. அளவுக்கு மீறித் தன்னை வருத்திக்கொண்டு அப்பா
செளிணியிற வேலையைப் பார்த்து, எனக்கு அது வேண்டாம்னு
தோன்றியது. பொதுவாக நேர்த்தியை விரும்புறது நடைமுறை
சார்ந்து இருக்க வேண்டும். ‘காலச்சுவடு’ பத்திரிகை உள்பட,
செளிணியுற எந்த வேலையையும் சிறப்பாக, ஒழுங்காகச்
செளிணியμம்னு நினைப்பேன்; மேலோட்டமாகச் செளிணிவது
கிடையாது.
‘காலச்சுவடு’ இதழைச் சு.ரா.வினால் தொடர்ந்து
கொண்டுவர இயலாத நிலையில், நீங்கள்
ஆசிரியரான சூழல் எப்படி ஏற்பட்டது?
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
3
சு.ரா. நடத்திய ‘காலச்சுவடு’ காரணமாக எனக்குப்
பத்திரிகை நடத்தμம்னு ஆசை வரவில்லை. அதனால நான்
வீஸீsஜீவீக்ஷீமீ ஆகவில்லை. சு.ரா. நடத்திய ‘காலச்சுவ’டைத் திரும்ப
நான் நடத்தவில்லை. 1987இல் கணினி படிக்கச் சென்னைக்குப்
போயிருந்தபோது, ‘புதுயுகம் பிறக்கிறது’ ஆசிரியர்
குழுவினரோடு இருந்த காலகட்டத்தில், பத்திரிகை நடத்தும்
ஆசை ஏற்பட்டது. ‘புதுயுகம்’ குழுவின் செயல்பாடு எப்படிப்
பத்திரிகை நடத்தக் கூடாது என்பதற்கான ஆழமான
கல்வியாகவும் அமைந்தது. நான் பத்திரிகை ஆரம்பிக்க
முயலும்போது, வீட்டில் ஏற்கனவே பதிவுசெளிணியப்பட்டிருந்த
‘காலச்சுவடு’ பெயரைப் பயன்படுத்திக்கொண்டேன்.
ஏற்கனவே இருந்த சிறுபத்திரிகைகளின் தாக்கம் எந்த
அளவுக்குப் புதிய ‘காலச்சுவ’டில் இருந்ததோ, அந்த
அளவுதான் பழைய ‘காலச்சுவ’டின் தாக்கமும் புதிய
‘காலச்சுவ’டில் இருந்தது.
உங்கள் ஆசிரியர் பொறுப்பில் ‘காலச்சுவடு’
கொண்டுவர முயன்றபோது, சு.ரா.வின் செயற்பாடு
எவ்வாறு இருந்தது?
அப்பாவுக்கு நான் பத்திரிகை தொடங்கி நடத்துவதில்
இஷ்டம் இல்லை. வேண்டாம் என்றுதான் நினைத்தார்.
நான்தான் அப்ப வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;
என் நிர்வாகத்தில் வியாபாரம் நன்றாக நடந்தது. அது
பாதிக்கப்படும் என்று அவர் நினைத்தார். பின்னாட்களில்
அவ்வாறே நடந்தது. பத்திரிகை ஆரம்பித்தால்
நண்பர்களுடன் உறவு பாதிக்கப்படும் என்றும்
தீர்க்கதரிசனமாகக் கூறினார். நான் தீவிரமாக இருந்தபோது,
அதைத் தடுக்கவும் இல்லை. பத்திரிகை ஆரம்பித்த பிறகு அது
அவருக்குப் பிடிச்சிருந்தது. பத்திரிகையில் வெளிவந்த
படைப்புகளைப் படிச்சுப் பார்த்து அபிப்ராயம் சொல்வார்.
எதைப் போடுவது, போடக் கூடாது என்று எதுவும்
சொன்னது இல்லை. ‘காலச்சுவ’டின் வளர்ச்சி அவருக்கு
உற்சாகம் தருவதாக இருந்தது. ‘காலச்சுவடு’ செயல்படத்
துவங்கிய பின்னர் சுமார் 15 புதிய நூல்களை அவர்
எழுதியுள்ளார் என்பதை நண்பர் சலபதி ஒருமுறை
கவனப்படுத்தியபோது மனநிறைவாக இருந்தது.
‘காலச்சுவடு’ இதழை எப்படிக் கொண்டுவர
வேண்டும் எனக் கருதினீர்கள்?
தமிழில் வெளியான முக்கியமான இலக்கியப்
பத்திரிகைகளின் பைண்டு வால்யூம்களை ஏற்கனவே
படித்திருக்கிறேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின்
தொடர்ச்சியாகக் ‘காலச்சுவடு’ வருவதில் எனக்கு விருப்பம்
இல்லை. பல இலக்கியப் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தரமான
படைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டன. இது அவர்கள்
உருவாக்கிக்கொண்ட வரையறை சார்ந்த பிரச்சினையாக
எனக்குத் தோன்றியது. அதை மாற்றμம்னு நினைத்தேன்.
உதாரணத்திற்கு முத்தம்மாவின் பேட்டியைச்
சிறுபத்திரிகையில் வெளியிட மாட்டார்கள். அது
‘காலச்சுவ’டில் வெளியானவுடன் நல்ல வரவேற்பு இருந்தது.
‘காலச்சுவ’டைத் தீவிரமான இதழாக நடத்த விரும்பினேன்;
சிறுபத்திரிகையாக அல்ல.
‘காலச்சுவடு’ ஆசிரியர் குழு எப்படி உருவானது?
மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் இருவருமே
‘காலச்சுவ’டைத் துவக்கியதற்கு ஓராண்டு இடைவெளியில்
எனக்கு அறிமுகமானவர்கள். சிறுபத்திரிகைச் சூழலுக்கு
வெளியே இருந்து வந்தவர்கள்தான் என் கூட வேலை
செளிணியμம்னு நினைச்சேன். மணிவண்ணனுடன் பேசினேன்.
அவருக்கு ஆர்வம் இருந்தது. உற்சாகமாகப் பேசிய அளவிற்கு
அவரால் செயலாற்ற முடியவில்லை என்றாலும்கூட
அவருடைய தோழமை அன்று எனக்கு முக்கியமானதாகவே
இருந்தது. பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சூழலில்
கொண்டாடப்பட்ட குடிவெறி, வன்மம், வக்கிரம் எல்லாம்
இல்லாத வோறொரு மனிதராக அன்று எனக்குத் தெரிந்தார்.
மனுஷ்யபுத்திரனை முதல்முறையாக வீட்டிற்கு
அப்பாவைப் பார்க்க வந்திருந்தபோது சந்தித்தேன் என்று
நினைவு. இன்னொரு முறை மதுரையில் ஒரு குட்டிச்
சந்திப்பில் அவர் பேசியதைக் கேட்டேன். இரண்டு முறையும்
அவருடன் பேசிய நினைவில்லை. ஆசிரியர் குழுவில்
மூன்றாவதாக இணைய அவரை அழைத்தேன். என் முடிவுகள்
பல சமயம் உள்ளுணர்வின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படுபவை. இந்த உறவு பத்தாண்டுகாலம்
நீடித்தது. அந்தப் பத்தாண்டுகளில் ‘காலச்சுவடு’க்கு அவரது
உழைப்பும் பங்களிப்பும் கணிசமானது.
2000க்குப் பிறகு சங்கடம் தருவதாக அந்த உறவு மாறத்
துவங்கியது. சென்னை அவரிடம் நிலை குலைவை
ஏற்படுத்தியது. 2002இல் உயிர்மை
பதிப்பகத்தை என்னைக்
கலந்தாலோசிக்காமல் நான்
வெளிநாட்டுப் பயணத்தில்
இ ரு ந் த « ப £ து ,
ர க சி ய ம £ க த்
து வ ங் கி ன £ ர் .
சு ஜ £ த £ ¬ வ
முன்னிறுத்திச்
செயல்பட்டபடியே
‘காலச்சுவடு’
ஆசிரியராக
வும் இயங்
கத் திட்ட
மிட்டார்.
அ தி ல்
அவருக்குக்
கூ ச் ச ம்
இ ரு க் க
வி ல் ¬ ல .
ந £ ன்
வி ல கி « ய
நி ன் « ற ன் .
ª ச ன் ¬ ன
அ லு வ ல க
நண்பர்களாலும்
பணியாளர்களாலும்
நான் என்னை
இலக்கியவாதியாகப்
பார்க்கவில்லை;
பத்திரிகையாளனாகப்
பார்க்கிறேன். பதிப்பாளராகப்
பார்க்கிறேன். அப்பா
பண்பாட்டுத் தளத்தில் என்
ஆர்வத்தைத் தூண்டும்
விதமாக எதாவது
வலுக்கட்டாயமாகப்
பண்ணியிருந்தால் எனக்கு
முரண்பாடு வந்திருக்கலாம்.
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
4
அவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சென்னை புத்தகச்
சந்தையில் ‘உயிர்மை’ வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள்
நன்றாக விற்பனை யானதும் ‘காலச்சுவடு’க்கு ராஜினாமா
கடிதம் அனுப்பினார். அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று
அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய மனப் பிரமையில்
‘காலச்சுவடு’ அவர் இல்லாமல் இயங்க முடியாது.
ராஜினாமா கடிதத்தைப் பார்த்ததும் மிகப்பெரிய விடுதலை
உணர்வு எனக்கு ஏற்பட்டது. உடனடியாக
ஏற்றுக்கொண்டேன். வாழ்வில் முதல்முறையாகத்
தன்னிச்சையாகச் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சில
மணிநேரம் இருந்தேன். ஓரிரு நாட்களில் ராஜினாமா
கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு இன்னொரு
மின்னஞ்சல் வந்தது! இக்காலகட்டத்தில் அவருக்கு
ஏற்பட்டதாகச் சொல்லப்படும் கடும் மன நெருக்கடியின்
பின்னணி இதுதான் – மனப் பிரமைகளின் உடைவு. அவர்
விலகிய பின்னர் ‘காலச்சுவடு’ எந்தச் சிறு இடையூறும் இன்றி
இயங்கியது மட்டுமல்ல, குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியும்
கண்டது.
சிலருக்கு, ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழுவில் அவர்களை
அழைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. சு.ரா. கூட்டிய
பாம்பன்விளைக் கூட்டத்தில் ‘காலச்சுவ’டை மீண்டும்
ஆரம்பிக்கப் போறோம் என்று அறிவித்தபோது,
ஜெயமோகன் கடுமையாகவும் பதற்றமாகவும்
எதிர்வினையாற்றினார்; பத்திரிக்கை தொடர்ந்து வராது
என்றார். இப்படிப் பல சாபங்களை மீறித்தான் ‘காலச்சுவடு’
இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது.
பளபளக்கும் அட்டைப்படத்துடன் நகைக்கடை
விளம்பரத்துடன் ‘காலச்சுவடு’ வெளியானவுடன்,
“அது சிறுபத்திரிகை மரபினைத் தூளாக்கிவிட்டது,
நாம் ‘மணிக்கொடி’யின் வாரிசுகள்” என்ற இலக்கிய
ஆளுமைகளின் தீவிரமான பேச்சை எப்படி
எதிர்கொள்கிறீர்கள்?
அப்படிச் சொல்கிறவர்கள் ‘மணிக்கொடி’யை படித்துப்
பார்க்காதவர்கள். ‘மணிக்கொடி’ பத்திரிகையில் எந்த
விளம்பரம்தான் வெளியாகவில்லை? ‘எழுத்து’ பத்திரிகையின்
முதல் இதழில் சி.சு. செல்லப்பா எழுதிய புகழ் பெற்றத்
தலையங்கம் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்தத்
தாளைத் திருப்பினால் சினிமா விளம்பரம் வந்திருக்கு. ஒரு
படைப்புக்கு இடையில் விளம்பரம் போடுவதை
இன்றுவரைக்கும் ‘காலச்சுவ’டில் செளிணியமாட்டோம்.
சிறுபத்திரிகை மரபைத் தூளாக்கும் ஆசை எப்போதும்
எனக்கு இருந்ததில்லை. ‘காலச்சுவடு’ ‘எழுத்’தின் மரபை
மீட்டிருக்கிறது. சூழலை எதிர்கொண்டு போராடுவதுதான்
‘எழுத்’தின் மரபு. அதுதான் சி.சு செல்லப்பாவின் பாணி.
அவலம், அவலம் என்று புலம்பிக்கொண்டிருப்பதல்ல.
‘காலச்சுவடு’ தொடர்ந்து வெளியானபோது,
சு.ரா.வுக்கு நெருக்கமான நண்பர்கள் விலகிப்
போனதற்குக் காரணம் என்ன?
பொதுவான காரணம் சொல்ல முடியமா என்று
தெரியலை. சிலர் விலகிப்போளிணி என் மேலுள்ள கசப்பைச்
சூழலில் பரவ விட்டனர். ‘காலச்சுவ’டில் இருந்தபோது
வெளிப்பட்ட படைப்பூக்கத்தை இவர்கள் யாராலும் விலகிய
பின்னர் வெளிப்படுத்த முடியவில்லை. ‘காலச்சுவடு’
பரவலானதும் புத்தகங்கள் வெற்றிகரமாகப் போனதும் ஒரு
சிலருக்கு வருத்தமாகப் போச்சு. சு.ரா. அதுவரை தமிழ்ச்
சூழல் பற்றி வைத்த எல்லா விமர்சனங்களையும் முழுக்கக்
காலி பண்ண வேண்டும் என்று நான் நினைத்தேன்.
சு.ரா.வுக்குப் பிற்காலத்தில் சூழலில் ஏற்பட்ட மாற்றம்
மகிழ்ச்சியாக இருந்தது.
1980களில், 90களில் தமிழ்ச் சூழலின் மோசமான நிலை
பற்றிப் பலர் பேசிக்கிட்டே இருப்பார்கள். பல வருஷங்களாக
அதை நான் கேட்டிருக்கேன். ஆனால் இப்ப தமிழ்ச் சூழலின்
அவலம் பற்றிப் பொதுப்படையாகப் பேசினால் சிரிக்கும்
நிலை எற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைப் பலரால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அப்பாவுக்கு நெருக்கமான நண்பர்கள் ‘காலச்சுவ’டில்,
பதிப்பகத்தில் வெளியாகும் படைப்புகளைக் கட்டுப்படுத்த
முயன்றனர். அது நடக்கவில்லை. ஒரு படைப்பு வந்தால்,
அதை வெளியிடுவது பற்றி ஆசிரியர் குழுதான்
முடிவெடுக்கும். ‘ஆளுமை’களின் படைப்பையும்
மதிப்பிடாமல் வெளியிடவில்லை என்பதும், ‘காலச்சுவ’டிற்கு
எதிர்ப்பாகப் பின்னர் மாறியது.
1994, 95ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தனின்
வெளிவராத, தொகுக்கப்படாத படைப்புகளைக்
‘காலச்சுவ’டில் வெளியிடுவதில் ஆவேசமாகச்
செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தொ.மு.சி.யிடம் இருந்த
புதுமைப்பித்தன் கடிதங்களை மிகச் சிரமப்பட்டு வாங்கி
வெளியிட்டோம். தொ.மு.சி.யின் அடிக்குறிப்புகளுடன்
அவை வெளியானபோது சு.ரா.வுக்கு மிக
நெருக்கமானவர்களால் நடத்தப்பட்ட ‘வேர்கள்’ இதழில்,
அக்கடிதங்கள் வெட்டித் திருத்தப்பட்டவை என்ற
பொருளில் ஒரு குறிப்பு மு.ரா. என்ற பெயரில் வெளியானது.
தொ.மு.சி.க்குப் பு.பி. எழுதிய கடிதங்களின் புகைப்பட நகல்
எங்களிடம் இருந்ததால் இது அபத்தம் என்று தெரியும். மு.
ராமலிங்கத்தைப் பின்னர் நேரில் இதுபற்றிக் கேட்டேன்.
அப்போது பத்திரிகையைப் பொறுப்பேற்று
நடத்திக்கொண்டிருந்த சச்சிதானந்தன் அவர்களின்
நிர்ப்பந்தத்திலேயே அக்குறிப்பை வெளியிட்டதாகச்
சொன்னார். சச்சிதானந்தன் 30 ஆண்டுகளாக எங்கள் குடும்ப
நண்பர். இதுபோன்ற விளங்கிக்கொள்ளவே முடியாத
அனுபவங்களும் உண்டு. எல்லா ஆத்மார்த்தமான
முயற்சிகளையும் சிறுமைப்படுத்தும் நம் மனோபாவம்தான்
நம்முடைய உண்மையான அவலம்.
1980கள் வரை ‘கணையாழி’ என்றால் தீவிரமான
இலக்கியப் பத்திரிகை என்ற பெயர் இருந்தது.
இன்று ‘காலச்சுவடு’ என்ற பெயர், ஒருவகையான
sமீக்ஷீவீஷீus விணீரீணீக்ஷ்வீஸீமீs எல்லாவற்றுக்கும் பொதுப்பெயர்
போல மாறியுள்ளதே.
‘காலச்சுவடு’ தொடங்கிய காலத்திலிருந்து
தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது.
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
5
எந்தவொரு செயல்பாடும் தொடர்ந்து நடக்கும்போது,
தாக்கம் ஏற்படுத்தும். அலட்சியமாக நாங்கள் பத்திரிகை
நடத்தவில்லை. எந்தவொரு படைப்பையும் படித்துப்பார்த்து,
ஏதாவது திருத்தம் செளிணிய வேண்டியிருந்தால்,
சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, திருத்தப்பட்ட பிரதியை
வெளியிடுகிறோம். புதிது புதிதான விஷயங்கள் வெளிவர
வேண்டுமெனக் கடுமையாக முயற்சி பண்μகிறோம்.
குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மட்டும் எழுதக்கூடிய
பத்திரிகையாக வரக்கூடாது என்பதில் கவனமாக
இருக்கிறோம். ‘காலச்சுவ’டின் பக்கங்களை
எழுத்தாளர்களுக்கு மாத வாடகைக்கு விடும் பழக்கம்
இல்லை. பத்திரிகையை ‘மேன்ஷன்’ மாதிரி நடத்தக் கூடாது.
மின்னஞ்சல் மூலம் வரக்கூடிய கட்டுரைகளைத் தொகுத்து
மூன்று நாட்களில் ஒரு இதழைத் தயார் பண்ணிவிடலாம்.
விற்பனை ராசி கொண்ட சில பெயர்களைப் பிடித்து
வைத்துக்கொண்டு இதழ் நடத்தும் பாணியை இன்று வணிக
இதழ்கள் கைவிட்டுவிட்டன. ‘மாற்று’ இதழ்கள் இன்று
இந்த பார்முலாவில் ஓட்டிக்கொண்டிருப்பது காலத்தின்
கோலம். ஆனால் ‘காலச்சுவடு’, ஆசிரியர் குழுவின்
கடுமையான உழைப்பின் வழியேதான் ஒவ்வொரு இதழும்
உருவாகிறது.
‘காலச்சுவடு’ குழுவினர் என்று ஒரு குழுவைத் தக்க
வைப்பதன் பின்புலம் என்ன?
‘காலச்சுவ’டில் உள்ள குழு நிரந்தரமானது அல்ல. அது
மாறிக்கொண்டே இருக்கும். எனக்குப் பிடிக்காத பேட்டி/
கட்டுரைகூடக் ‘காலச்சுவ’டில் குழுவினரின் முடிவுக்கேற்ப
சு.ரா. கூட்டிய
பாம்பன்விளைக் கூட்டத்தில்
‘காலச்சுவ’டை மீண்டும்
ஆரம்பிக்கப் போறோம் என்று
அறிவித்தபோது, ஜெயமோகன்
கடுமையாகவும் பதற்றமாகவும்
எதிர்வினையாற்றினார்; பத்திரிகை
தொடர்ந்து வராது என்றார்.
இப்படிப் பல சாபங்களை
மீறித்தான் ‘காலச்சுவடு’
இன்றுவரை வெளிவந்து
கொண்டிருக்கிறது
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
6
வெளிவருகிறது.
உயிர்ராசிகளின் பரிணாம வளர்ச்சியில் எவை அழிந்தன,
எவை தங்கின எனப் பார்க்கும்போது, பிழைத்த உயிர்ராசிகள்
அதிக பலம் வாளிணிந்தவையோ, அதிக புத்திசாலித்
தனமானவையோ அல்ல. எவை கால மாற்றங்களுக்கு ஏற்பத்
தங்களை மாற்றிக்கொண்டனவோ அவையே பிழைத்து
நிற்கின்றன.
மாறிவரும் காலத்தோடு கொள்ளும் உறவுதான்
‘காலச்சுவ’டின் பலம்.
‘காலச்சுவ’டில் இலக்கிய அம்சங்களுக்கு
முக்கியத்துவம் குறைவாக உள்ளதே?
இலக்கியப் பத்திரிகை என்ற அடையாளம்
‘காலச்சுவடு’க்குக் கொடுக்கப்படவில்லை. ஒரு
படைப்பாளிக்கும் வாசகனுக்கும் எல்லாமே தேவை.
இலக்கியத்துடன் எல்லாமே முடிந்துவிட்டது என்று
நினைக்கிறவர்களால் ‘காலச்சுவடி’ற்குள் நுழைய முடியாது.
அப்படி நினைக்கும் இலக்கிய அடிப்படைவாதிகளின்
எண்ணிக்கை மீஸீபீணீஸீரீமீக்ஷீமீபீ sஜீமீநீவீமீs போல இன்று தமிழில்
அருகிவிட்டது.
‘தமிழ் இனி – 2000’ தமிழ் இலக்கிய வரலாற்றில்
குறிப்பிடத்தக்க நிகழ்வு. அதற்கான திட்டம் எப்படி
உருவானது? அந்நிகழ்வைப் பற்றிச் சொல்லுங்கள்.
90களின் இறுதியில் அர்த்தமற்ற வெறுப்பு, கசப்பு பல
பக்கங்களில் இருந்து ‘காலச்சுவ’டின் மீது வந்து குவிந்தது.
எதிர்நிலைகள் தீவிரமடையும்போதும் என் செயல்பாடும்
வேகம் கொள்ளும். இக்காலகட்டத்தில் கவிஞர் சேரன்
மூலமாக உலகத் தமிழர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
2000ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளைப் பலர்
அறிவித்துக்கொண்டிருந்தனர். அதுபோல நாமும் ஏதாவது
நடத்தலாமென்ற யோசனையில் ‘தமிழ் இனி – 2000’ திட்டம்
ஒரு கனவாக உருவானது. அப்படியரு முரட்டுத்தனமான
திட்டத்தை நான் இப்பொழுது செளிணியமாட்டேன். ஆனால்
மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற மூன்று
நாட்களிலும் சந்தோஷமாகக் கலந்துகொண்டவர்கள்,
நான்காம் நாளே கடுமையாகப் பேசினர். கடுமையான
எதிர்வினைகள் ஏற்பட்டன. இன்று அதன் பின்விளைவாக
நடைபெறும் நடவடிக்கைகளில் அம்மாநாடு பற்றிக்
குறிப்பிடாத கூட்டுமௌனம் ஏற்பட்டுள்ளது.
‘ரஸ்புடீன்’ விருதை உங்களுக்கு நீங்களே கேலியாகக்
கொடுத்திருக்கிறீர்கள். சதியாலோசனை,
மந்திராலோசனை செளிணிளிணிளிணிளிணிளிணிவதில் நீங்கள் நிபுணர்
என்று சிறுபத்திரிகை வட்டாரத்தில் ‘பேச்சு’
உள்ளதே?
அப்படியரு பேச்சு இருப்பது எனக்குத் தெரியும்.
அந்தப் பேச்சுக்கேற்ற ஒரு பட்டத்தைப் பரிந்துரை செளிணிய
வேண்டும் என்று கனிமொழியைக் கேட்டேன். அவருடைய
பரிந்துரைதான் ‘ரஸ்புடீன்.’
திடீர்ன்னு ஒருத்தரைச் சந்திக்க நேரிடும். அவர்
என்னுடன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது,
‘உங்களைப் பற்றி வேறுமாதிரி கேள்விப்பட்டேன், நீங்கள்
அப்படி இல்லையே’ என்பார். இந்த மாதிரி நூறு
பேரையாவது பார்த்திருக்கேன்.
இந்த மனோபாவம் பற்றி ‘உயிர் எழுத்’தின் ஆசிரியர்
சுதீர் செந்திலிடமே கேட்கலாம். என்னைச் சந்திக்காமல்,
என்னைப் பற்றி எதுவும் அறியாமல் மேற்படி ‘பேச்சு’ பரவக்
கரசேவை செளிணிதவர்களில் அவரும் ஒருவர். ‘உயிர் எழுத்’தின்
உருவாக்கத்தின் பின்னணியில் நான் இருப்பதாக
மனப்பிராந்தியில் திளைக்கும் மனங்கள் பேசியபோது
உண்மை அவரை இடிபோல வந்து தாக்கியிருக்க வேண்டும்.
புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி முனைவர்
பட்ட ஆளிணிளிணிளிணிளிணிளிணிவு மேற்கொண்டிருந்த வேதசகாய
குமாரைப் புறக்கணித்துவிட்டு, புதுமைப்பித்தன்
படைப்புகள் பதிப்பில் வேங்கடாசலபதிக்கு
முன்னுரிமை தந்தது ஏன்?
வேதசகாயகுமாரை என்னுடைய சிறுவயதிலிருந்தே
எனக்குத் தெரியும். எனக்கு வேதசகாயகுமார் மீது நல்ல
அபிப்ராயம் இருந்தது. புதுமைப்பித்தன் கதைகள் தொகுக்கும்
வேலையை நேரடியாகவும் அப்பா மூலமாகவும் அவரிடம்
பலமுறை செளிணியச் சொன்னேன். அவர் பல காலமாக எதுவும்
செளிணியவில்லை. அவரால் செளிணியவும் முடியாது. சலபதி
உருவாக்கிய ‘புதுமைப்பித்தன் கதைகள்’ செம்பதிப்புக்கு
நிகரான ஒரு பதிப்பைக் குமாரால் உருவாக்க முடியும் என்று
நான் நினைக்கவில்லை. மனக்கோணலை நேர்
செளிணிதுவிட்டால் அவரால் இலக்கிய விமர்சனம் எழுத
முடியும். பதிப்பு அவர் துறை அல்ல.
வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தன் ஆளிணிவு
1970களோடு முடிந்துபோன ஒன்று. 1980கள் முழுக்க அவர்
ஆளிணிவைக் கைவிட்டிருந்தார். 1990களில் டாக்டர் பட்டம்
பெற்ற பேராசிரியர்களுக்கு, மும்மாரி பெளிணிவதுபோல மூன்று
படிநிலைச் சம்பள உயர்வு கிடைத்தது. திடீரென்று குமார்
இலக்கிய உலகில் மறுபிரவேசம் செளிணிதார்.
இப்பிரவேசத்தின் ரகசியம் என்ன என்று சு.ரா.,
வேதசகாயகுமாரின் ஆசிரியர் பேரா. ஜேசுதாசனிடம்
கேட்டபோது நானும் உடன் இருந்தேன். பேராசிரியர் மிகுந்த
இளக்காரத்தோடு மேற்படி சம்பள உயர்வு விஷயத்தைக் கூறி,
‘காசுதான், வேறு ரகசியம் ஒன்றுமில்லை’ என்றது
நினைவிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் இக்கூற்று எனக்கு
ஏற்படுத்திய அதிர்ச்சியை எளிதில் விளக்கிவிட முடியாது.
1994இல் சென்னைக்குப் போனபொழுது, ‘காலச்சுவடு’
விஷயமாகப் பல எழுத்தாளர்களை நேரில் போளிணிப்
பார்த்தேன். குவளைக் கண்ணனும் கூட வந்திருந்தான். அந்தச்
சமயம் சலபதியைப் பார்த்தபோது, புத்தகமாக அச்சில் வராத
பு.பி. படைப்புகளைப் பத்திரிகைகளிலிருந்து கையால் எழுதி
எடுத்தவை இருக்கு என்றார். அதைக் ‘காலச்சுவ’டில்
வெளியிடுவதற்காக நான் வாங்கிக்கொண்டு நாகர்கோவில்
வந்தவுடன், இந்த விஷயத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள
வேண்டுமெனத் துடித்தேன். குமாரை மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்த வேண்டுமென நினைத்து வீட்டிற்குக் கூப்பிட்டேன்.
அவர் வீட்டிற்கு வந்தார். நான் பு.பி.யின் பிரதிகளை அவரிடம்
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
7
கொடுத்தவுடன், ‘இதெல்லாம் புதுசு ஒன்றுமில்லை. . .
நான்சென்ஸ்’ என்ற tஷீஸீமீஇல் பத்து நிமிஷம் பொரிந்து
தள்ளினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓரிரு மாதங்கள்
கழித்துப் பாம்பன்விளைக் கூட்டத்துக்கு வந்திருந்த
சலபதியை எந்தக் காரணமுமின்றி அவமதிக்கும் வகையில்
குமார் நடந்துகொண்டார். பு.பி.க்கு ஒரே வாரிசு தானேதான்
என்ற நினைப்பு குமாருக்கு இருந்தது. வல்லிக்கண்ணன்
இளம் வயதில் பு.பி. மீது மரியாதை கொண்டு தன்னுடைய
ஒரு நூலைப் பு.பி.க்கு இவ்வாறு சமர்ப்பணம் செளிணிதாராம்:
“என்னுடைய ஆசான்
புதுமைப்பித்தனுக்கு
இந்த ஏகலைவனின்
சமர்ப்பணம்.”
இதைப் பு.பி.யிடம் காட்டியபோது, “நேரில்
பார்க்கட்டும், கட்டை விரலை வாங்கிடறேன்,” என்றாராம்.
பு.பி., தன் பிற்கால ‘சிஷ்யர்’ குமாரின் கட்டை விரலையும்
வாங்கிவிட்டாரோ என்று எனக்குத் தோன்றியதுண்டு.
தொ.மு.சி. பற்றிய கடுமையான விமர்சனம் அடங்கிய
குமாரின் கட்டுரையை- அவரது ஆளிணிவேட்டின் ஒரு பகுதி
அது – ‘காலச்சுவ’டில் வெளியிட்டேன். அந்த இதழைத்
தொ.மு.சி.க்கு அனுப்பினேன். அதற்கு அவர் பதில் எழுத,
மீண்டும் குமார் பதில் எழுத விவாதம் முற்றியது.
தொ.மு.சி.யின் எழுத்தில் தகவல் பிழை, பொளிணி கிடையாது
என்பதை அறிந்துகொண்டேன். ஏற்கனவே ‘காலச்சுவடு’
பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியிடுவதற்காக வாங்கி
வைத்திருந்த குமாரின் பு.பி. பற்றிய ஆளிணிவேட்டைப்
பிரசுரிக்கும் முயற்சியைக் கைவிட்டேன். காரணம், அதில் பல
இட்டுக் கட்டிய தகவல்கள் இருப்பது இவ்விவாதத்தின் வழி
தெரியவந்தது.
பு.பி., ஆளிணிவுக்கூட்டம் எங்கள் வீட்டில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சு.ரா., குமார், சலபதி, பொதிய வெற்பன்,
அதியமான், சச்சிதானந்தன், ராஜமார்த்தாண்டன் இன்னும்
சிலர் கலந்துகொண்டனர். அக்கூட்டம் முழுக்க டேப்பில்
பதிவாகியுள்ளது. அக்கூட்டத்தில் பு.பி.யின் வெளியிடப்படாத
படைப்புகளைத் தேடியெடுத்து வைத்திருப்பதாகக் குமார்
சொன்னார். சு.ரா. அவற்றைத் தருமாறு கேட்டார். ‘மழையில்
தூக்கிப்போட்டு அவற்றை அழிந்துவிட்டேன்’ என்றார்
குமார். இப்படி ஆளிணிவுக் கூட்டத்தில் பேசிய நபருடன்
இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பே
அபத்தமானது.
‘சுந்தர விலாஸ்’ வீட்டுடன் நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்த சி.மோகன், லஷ்மி மணிவண்ணன்,
சங்கர ராமசுப்பிரமணியன், தளவாளிணிளிணிளிணிளிணிளிணி சுந்தரம்
போன்றோர் அங்கிருந்து வெளியேறியமைக்கான
காரணங்கள் என்னவாக இருக்கும்?
சி. மோகனுக்கு சு.ரா.வுடன் இருந்த உறவு
கோணலானது. அது சிஷ்யனாக இருக்க ஏங்கி,
நிராகரிக்கப்பட்ட ஊமைக் காயம் என்பது என் அனுமானம்.
‘காலச்சுவடு’ இதழ் 2இல் முத்துசாமியின் ‘நற்றுணையப்பன்’
வெளியானபோது சி. மோகன் தமிழ் இலக்கிய வரலாற்றில்
முதலும் கடைசியுமாக அது பற்றிக் ‘கருத்துக் கணிப்பு’
நடத்தினார். அவருடைய ‘வயல்’ இதழைக் ‘காலச்சுவ’டில்
அறிவித்தார். சந்தா சேர்ந்தது. இதழ் வெளிவரவில்லை.
சந்தாவையும் திருப்பிக் கொடுக்கவில்லை. சந்தா சேர்ந்தவர்கள்
சு.ரா.தான் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்குப் பொறுப்பு
என்று எழுதிய கடிதங்களைப் பார்த்திருக்கிறேன்.
சி. மோகனின் ‘புனைகளம்’ இதழுக்கும் பொது நிதி
திரட்டப்பட்டது. இன்றுவரை கணக்குவிவரம்
வெளியிடப்படவில்லை. ஓர் இதழ் வெளிவந்ததும்
இரண்டாவது இதழிலேயே ‘எழுத்து’க்குப் பிறகு
‘புனைகளம்’ என்ற ரீதியில் தன் தோளில் தட்டு
வாங்கிக்கொண்டதைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
‘புதிய பார்வை’ முதல் இதழில் சு.ரா. எழுதுவதாக
அறிவிப்பு வந்ததும் சி. மோகன் அதைக் கண்டித்து
சு.ரா.வுக்குக் கடிதம் எழுதினார். ‘புதிய பார்வை’ இதழ்
வெளிவந்ததும் சு.ரா.வுக்கு நிறைவு தரவில்லை. எனவே அவர்
அறிவித்தபடி எழுத மறுத்துவிட்டார். விரைவில் ‘புதிய
பார்வை’யில் சி. மோகனின் தொடர் அறிவிக்கப்பட்டு
வெளிவந்தது. சிற்றிதழ் மனோபாவத்தின் பிரதிநிதியாகத்
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சி. மோகன் கடந்த
25 ஆண்டுகளில் சிறுபத்திரிகைகளில் எழுதியிருப்பது அரிது.
இந்தப் பின்னணி எல்லாம் அறிந்துதான் அவரை
‘ஜி. நாகராஜன் படைப்புகள்’ தொகுக்க அழைத்தேன். அவர்
மீண்டும் விலகியபோது எனக்கு வியப்பு எதுவும்
ஏற்படவில்லை. ஒரு நிறுவனத்தில்
என்னுடைய முயற்சியில் அவருக்கு
வேலை வாங்கிக் கொடுத்
தேன். அங்கே போளிணி ஷிமீttறீமீ
ஆனதும் ‘காலச்சுவ’
டுக்கு எதிரான
அ ர சி ய ¬ ல த்
துவக்கினார்.
துரோகத்தை
ருசிக்காமல்
அ வ ர £ ல்
வாழமுடியாது.
லஷ்மி
மணிவண்
ண னி ன்
மிதமிஞ்சிய
குடிப்பழக்
கத்தையும்
அ த ற் கு த்
« த £ த £ க
அ வ ர்
உருவாக்கிக்
ª க £ ண் ட
கோட்பாடுகளையும்
ந £ ங் க ள்
ஏற்கவில்லை. வேறு
என்னைச் சந்திக்காமல்,
என்னைப் பற்றி எதுவும்
அறியாமல் மேற்படி ‘பேச்சு’
பரவக் கரசேவை
செளிணிதவர்களில் சுதீர் செந்திலும்
ஒருவர். ‘உயிர் எழுத்’தின்
உருவாக்கத்தின் பின்னணியில்
நான் இருப்பதாக
மனப்பிராந்தியில் திளைக்கும்
மனங்கள் பேசியபோது
உண்மை அவரை இடிபோல
வந்து தாக்கியிருக்க வேண்டும்.
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
8
காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இன்றுவரை தன்
எதிர்நிலையை நேரடியாக என்னிடம் முன்வைக்கும் திராணி
இவரிடம் இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து
என் மனைவியையும் மக்களையும் வன்மத்திற்கு
உட்படுத்தினார். தமிழ்ச் சூழலில் ஒரு கண்டனக் குரல்கூட
எழும்பவில்லை.
தளவாளிணி சுந்தரத்திற்கு ‘குமுத’த்தில் வேலை கிடைத்
ததும், வெகுஜன ஊடகத்தில் பணியாற்ற ஏற்ற தந்திரோபாய
மாகக் ‘காலச் சுவடு’ எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டார்.
இவரைப் பலவிதங்களிலும் ஊக்குவித்த சு.ரா.வை
இழிவுபடுத்தி, சி. மோகனின் மேற்பார்வையில்,
‘குமுத’த்திலும், ‘தீராநதி’யிலும் இவர் பிரசுரித்தவற்றைத்
தொகுத்து வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டு. இன்று பல
இலக்கிய வாதிகளை வெகுஜன ஊடகங்களுக் காட்டிக்
கொடுத்தும் கொச்சைப் படுத்தியும் இயங்கிவருகிறார்.
வெகுஜன ஊடகங்களில் போகும் இடமெல்லாம்
சி.மோகனையும் இன்னும் ஓரிருவரையும் உப்புமூட்டை
தூக்கிக்கொண்டு போவதுதான் இன்று இவரது ஒரே
‘இலக்கிய’ச் செயல்பாடாக உள்ளது.
இவர்களுடைய செயல்பாட்டில் எந்த மதிப்பீடுகளையும்
நான் காணவில்லை. வெறுப்பு, கோணல், சந்தர்ப்பவாதம்
இவற்றிற்குக் கருத்தியல் அடிப்படைகள் எதுவும் இல்லை.
பிறப்பின் அடிப்படையில் தீண்டாமையைக்
கற்பித்த வைதீக சமயத்தின் அடையாளமாக
விளங்கும் சங்கர மடத்தைத் தகர்க்க வேண்டும்
என்பது சரியான பார்வை தானே? பிரபஞ்சன்
போன்றோர் அதைச் சொன்னால், பார்ப்பனியத்தின்
மீது நம்பிக்கையற்ற உங்களுக்கு ஏன் முரண்பாடு
ஏற்படுகின்றது?
இந்தக் கேள்விக்குப் பொதுப்படையாகவே பதில்
சொல்ல விரும்புகிறேன். எனது எதிர்வினை தமிழக
‘முற்போக்கு’ மனோபாவம் நோக்கியது.
‘காலச்சுவடு’ தலையங்கம் இக்கருத்துகளை
முன்வைத்தது:
“சங்கராச்சாரியாரின் கைது தமிழக அரசியல்
வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. ஜெயேந்திரர் மீது
அனுதாபம் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. அவர்
கீழான அரசியல் தளத்தில் செயல்பட்டார். ரவுடிக் கும்பலின்
அதிகார போதையின் புழுதியில் புரண்டு திளைத்தது சங்கர
மடம். ‘நக்கீர’னின் புலனாளிணிவுத் துணிச்சலும் பாராட்டுதற்கு
உரியது. மடத்தை உண்மையான ஆன்மீக அமைப்பாக மாற்ற
வேண்டும். மடத்தின் நடவடிக்கைகள்
வெளிப்படையானவையாக மாறி, மக்களின் கண்காணிப்புக்கு
உட்படுத்தப்பட வேண்டும். சங்கர மடம் தன்னுடைய
சாதியப் பார்வையையும் மறுபரிசீலனை செளிணிது குறிப்பிட்ட
சாதி சம்பிரதாய வட்டத்தை மீறி வெளிவர வேண்டும்.
பெண்கள் பற்றிய பார்வையைச் சங்கர மடம்
மாற்றிக்கொள்ள வேண்டும்.”
இத்தலையங்கத்தை நான் எழுதவில்லை. ஆனால் என்
ஒப்புதலுடனே பிரசுரமானது. மேற்படித் தலையங்கத்தில்
உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தொனிக்கும் நான் முழுப்
பொறுப்பெடுத்து அதை முழுமையாக ஆதரிக்கிறேன்.
இதுபற்றிய சில எதிர்வினைகள் கோணலும் வன்மமும்
நிறைந்தவை. எந்தவித ஆதாரமும் இல்லாமல்
இத்தலையங்கத்தை என் பிறப்பின் அடிப்படையில்
மதிப்பிட்டவை.
இப்பார்வை ‘காலச்சுவ’டோடு இணைந்து செயல்படும்
ஆளுமைகளின் பன்முக வலுக்களை முற்றாகப்
புறக்கணிக்கிறது. கருத்து வேறுபாடு இவற்றில்
வெளிப்படவில்லை. சாதிய வன்மமே வெளிப்பட்டது.
இன்றுவரை பிராமணர்கள் நீங்கலாக வேறு யாரையேனும்
சாதிய அடிப்படையில் இவர்கள் விமர்சித்தது உண்டா?
வேறு யாரிடமும் சாதியும் வன்மமும் வெளிப்படவில்லையா?
திராவிட இயக்கம் கற்றுக்கொடுத்த முரண்பாடுகளை மேலே
அப்பிக்கொண்டேயிருப்பதுதான் அறிவுஜீவிகளின்
செயல்பாடா? சமூகத்தின் மௌனத்தைத் தகர்க்க
வேண்டியவன் அல்லவா ‘அறிவுஜீவி?’
முத்துராமலிங்கத் தேவர் பற்றிய முற்போக்காளர்களின்
கருத்து என்ன? இன்று அவர் புனருத்தாரணம்
செளிணியப்பட்டுக் கொண்டாடப்படுவது பற்றி அவர்கள் கருத்து
என்ன? எல்லா ‘முற்போக்கு’ அரசியல் தலைவர்களும்
அவரை ஆண்டுதோறும் வழிபாடு செளிணிவது பற்றி என்ன
கருத்து? கிறிஸ்தவத்தில் அரங்கேறிவரும் சாதிய மோதல்
பற்றிய இவர்கள் கருத்து என்ன? வெங்டேசப் பண்ணையார்
கொல்லப்பட்டவுடன் ஏற்பட்ட சாதிய அரசியலையும்
இன்று அவர் மனைவியார் மத்திய அரசின் உள்துறை இணை
அமைச்சராக இருப்பதையும் பற்றிய கருத்து என்ன?
சாதிக் கட்சிகள் உருவாக்கும் சாதியப் படைப்பாளிகள்
அமைப்புப் பற்றி இவர்கள் கருத்து என்ன? அதில்
பங்குகொள்ளும் படைப்பாளிகள் பற்றி இவர்கள் கருத்து
என்ன? தமிழக ஊடகங்களில் பிராமணர் அல்லாதவர்களால்
நடத்தப்படும் ஊடகங்களின் சாதி அரசியல் பற்றி இவர்கள்
கருத்து என்ன? சு.ரா. மரணமடைந்த செளிணிதியை
வெளியிடாத, நாகர்கோவிலிலேயே பதிப்பு வைத்திருக்கும் ஒரு
குழும நாளிதழ்கள், குமரி அனந்தன் துக்கம் விசாரித்ததை
வெளியிட்டன. அதுபற்றி ஏதேனும் கருத்து உண்டா? தம்
சாதியினருக்கு இலக்கியப் பரிசு வழங்கும் நிறுவனங்கள் பற்றி
என்ன கருத்து? அதை வாங்கிக்கொள்ளும் ‘முற்போக்கு’
எழுத்தாளர்கள் பற்றிக் கருத்து என்ன?
இளையபாரதி என்ற ‘வளர்ந்து’வரும் நபரைப் பல
ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். இவர் மேற்பார்வையில்
நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறவர்கள்,
பதிப்பாளராக இவர் முன்னுரிமை கொடுத்து வெளியிடும்
எழுத்தாளர்கள், இவரது அதிகாரத்தால் ஊக்கமும் பரிசும்
பெறும் ஆளுமைகள், பதிப்பகத்திற்காக தேர்வு செளிணியும்
பெயர்கள் ஆகியவற்றில் இவரது சுயசாதிச் சார்பை என்னால்
பார்க்க முடிகிறது. இன்று இயல் இசை நாடக மன்றமும்,
சென்னைச் சங்கமமும் இவரது சுயசாதி அரசியல் துள்ளி
விளையாடும் களங்களாக இருப்பதையும் அவதானிக்க
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
9
முடிகிறது.
கவிஞர் விக்ரமாதித்யன் போலப் பொது அரங்குகளில்
ஒடுக்கப்பட்ட சாதியினரையும், பெண்களையும்,
தலித்துகளையும் சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் தமிழ்
இலக்கியவாதி இல்லை.
இவர்களைப் பற்றித் தமிழ் முற்போக்காளர்களின்
எதிர்வினை என்ன? இவர்களைப் பற்றிய மௌனத்திற்கு
அவர்கள் பிராமணர் அல்லாதவர் என்பது தவிர வேறு
காரணங்கள் உண்டா? இந்த மௌனத்தில் வெளிப்படுவது
இவர்கள் கூட்டுச் சாதியச் சார்பன்றி வேறு என்ன?
யாரும் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டுப் பிறந்துவிட்ட
புனிதப் பிறவிகளல்ல. எந்தச் சாதியும் தூய சாதி அல்ல.
ஆதாரமின்றி சந்தேகத்தையும், வன்மத்தையும் கலந்து
அடித்தால் யாரையும் சாதிய அடிப்படைகளில் எதிர்த்
தாக்குதல் தொடுத்துப் புண்படுத்த முடியும். அது அறமல்ல.
உரிய ஆதாரத்தோடு பேசும்போது அது சமூக விமர்சனம்.
ஆதாரமின்றியும் அல்லது எதிர்நிலை ஆதாரத்தை மீறியும்
பேசும்போது அது சாதிய அவதூறு.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற
கொலை முயற்சி பற்றிய ‘தெகல்கா’
ஆவணங்களைக் ‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ளது
பாராட்டிற்குரியது. ஆனால் சங்கராச்சாரியார்
கைது, மலேசியாவில் ‘ஹிண்ட்ராப்’ போன்றவற்றில்
வைதிக சமயத்திற்கு ஆதரவான நிலைப்பாடு
எடுத்தது ஏன்?
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை, தலித்
போராட்ட ஆதரவு, சிறுபான்மை மத, இன,
மொழியினருக்கு ஆதரவு, அடிப்படைவாத எதிர்ப்பு,
பெண்ணியப் பார்வைக்கும் படைப்புக்கும் ஆதரவு, சாதி
ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய தளங்களில் கடந்த 15
ஆண்டுகளில் ‘காலச்சுவடு’க்கு நிகராகப் பங்களித்திருக்கும்
பண்பாட்டு இதழ் – இயக்கம் வேறு இல்லை. இதுபற்றிய
றிணீtக்ஷீஷீஸீவீக்ஷ்வீஸீரீ ஆன முற்போக்குச் சான்றிதழ் எதுவும்
எங்களுக்குத் தேவையும் இல்லை.
மலேசியாவில் தமிழர்கள் இன அடிப்படையில், மத
அடிப்படையில், மொழி அடிப்படையில்
ஒடுக்கப்படுகின்றனர். இது சை.பீர்முகம்மது அவர்களுடன்
நான் மேற்கொண்ட மூன்று மலேசியச் சுற்றுப்பயணங்களில்
அனுபவபூர்வமாக அறிந்த செளிணிதி. தமிழ் மக்களின்
கொந்தளிப்பின் வெளிப்பாடாக ‘ஹிண்ட்ராப்’ தோன்றியது.
அவர்கள் முன்னிருத்தும் அடையாள அரசியலை அவர்கள்
முடிவு செளிணிய வேண்டும். தமிழக முற்போக்காளர்களின்
பாவனைகளுக்கு ஏற்ப அவர்களின் அடையாள அரசியல்
இருக்காது. அவர்கள் அமைப்பின் பெயரில் ‘இந்து’ என்ற
சொல் இடம் பெற்றுள்ளதை, தமிழ் அடையாளத்திற்கு
இன்றைய உலகச் சூழலில் இருக்கும் பிரச்சனைகளின்
பின்னணியிலும், மலேசியப் பின்னணியில் ‘இந்து’ என்பதன்
பொருள் என்ன என்பதையும் உள்வாங்கிக்கொள்ளாமல்,
இங்கு மத அடையாளம் கொண்ட சிறுபான்மை
ஆதாரமின்றி
சந்தேகத்தையும்,
வன்மத்தையும் கலந்து
அடித்தால் யாரையும் சாதிய
அடிப்படைகளில் எதிர்த்
தாக்குதல் தொடுத்துப்
புண்படுத்த முடியும். அது
அறமல்ல. உரிய
ஆதாரத்தோடு பேசும்போது
அது சமூக விமர்சனம்.
ஆதாரமின்றியும் அல்லது
எதிர்நிலை ஆதாரத்தை
மீறியும் பேசும்போது அது
சாதிய அவதூறு.
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
1 0
அமைப்புகளைத் தாம் ஆதரிப்பதைப் பற்றிய யோசனையும்
இல்லாமல், ‘ஹிண்ட்ராப்’ஐக் கண்டிப்பதும்
அறிவுறுத்துவதும் அபத்தமானது. மலேசியாவில் தமிழன்,
இந்து என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரே
அடையாளத்தின் இரு முகங்கள்.
சங்கராச்சாரியார் பற்றிய தலையங்கம் முக்கியமானது
என்பதால், ஆசிரியர் குழுவினர், குறிப்பாக சலபதியும்
ரவிக்குமாரும் ஓகே செளிணித பிறகுதான் வெளியிடப்பட்டது.
சங்கரமடம் மீது பக்தி உள்ளவர்களை நோக்கித்தான் அந்தத்
தலையங்கம் எழுதப்பட்டது. அத்தகையோரும் அதனை
ஏற்றுக்கொண்டனர். சங்கராச்சாரியார் மீது வெறுப்புக்
கொண்டவர்களுடன், அவரை வெறுத்துப் பேசுவதால் என்ன
பயன்? பொதுவாக நமக்குள்ளேயே பேசும் அரசியலை நான்
மறுக்கிறேன். எதிர்எதிர்த் தரப்பினர் விவாதிக்க வேண்டும்;
உரையாடலைக் தொடங்க வேண்டும். சங்கராச்சாரியாரை
எதிர்த்து எழுதியதால், ஆண்டுக்குப் பத்து லட்சம் ரூபாளிணி
‘காலச்சுவடு’ நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. மிகவும்
கஷ்டப்பட்டோம். இப்படி எங்களின் சுதந்திரமான
நிலைப்பாடுகளுக்காகப் பலவற்றை இழந்திருக்கிறோம்.
‘காலச்சுவடு’ மீது விமர்சனம் வைக்கிறவர்கள் தம்
நிலைப்பாட்டுக்காக எந்த இழப்பை எதிர்கொண்டனர்?
உங்களுக்குப் பிரபஞ்சனுடன் என்ன முரண்பாடு?
எனக்குத் தனிப்பட்ட முறையில் பிரபஞ்சனுடன்
பிரச்சினை எப்போதும் இருந்ததில்லை. அவர்மீது எனக்கு
மரியாதை உண்டு. விமர்சனங்களும் உண்டு. அவருடைய
எழுத்து எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு கதைசொல்லி.
நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். பிறர் சொல்கிற
நகைச்சுவையையும் நுட்பமாக ரசிக்கக்கூடியவர். பொதுவாகக்
கர்வம், தன்முனைப்பு இல்லாதவர். இளையவர்களை
மதிப்பவர். அவர் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர். புதிய
நூல்களையும் புதிய இளம் எழுத்தாளர்களையும்
தெரிந்துகொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம்
அபூர்வமானது. ஆனால், அவரிடம் உறுதியான
நிலைப்பாடுகள் கிடையாது. பல்வேறு காலக்கட்டங்களில்
தங்களுடைய நிலைப்பாடுகளைச் சூழலுக்கு ஏற்ப
மாற்றிக்கொள்கிறவர்கள் பலர் உண்டு. அவர்கள் அதனால்
பல்வேறு வசதி வாளிணிப்புகளை அடைந்திருப்பார்கள். ஆனால்
பிரபஞ்சன் எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்காதவர்.
இன்றும் அன்றாடம் காளிணிச்சிப்போல அவர் வாழவேண்டிய
சூழலிருப்பது ஒரு தமிழ்ப் பண்பாட்டாளராக எனக்குத்
தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
சங்கராச்சாரியார் பற்றிய ‘காலச்சுவடு’
கருத்தாடலுடன் பிரபஞ்சன் ஒத்துப் போயிருந்தால்,
அவர் நிலைப்பாடு மாறாதவர் என்று
கருதமுடியுமா? ஒரு பிரச்சினை உருவாகும்போது,
ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டில் மாற்றம்
ஏற்படுவது இயல்புதானே? அதை எப்படிக்
குறையாகக் கருத முடியும்?
பிரபஞ்சனின் நிலைப்பாடுகளின் மாற்றங்கள் பற்றிய என்
மதிப்பீடு ‘காலச்சுவடு’டன் அவர் கொள்ளும் உறவு சார்ந்தது
அல்ல. உதாரணத்திற்கு, கடந்த 15 ஆண்டுகளில் கலைஞர்
பற்றிய அவருடைய மதிப்பீடுகள் அடிக்கடி மாறி வருவதைப்
பார்க்கிறேன். அதே போல டாக்டர் ராமதாசு பற்றியும்.
மண்டோ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், பு.பி., அவருடன்
ஒப்பிடவே முடியாத அளவுக்குப் படைப்புத் தரத்தில் குன்றி
இருப்பதாகப் பொருத்தமற்று ஒப்பிட்டுப் பேசியதும்
உறுத்தலாக இருந்தது. எப்போதும் றிறீணீஹ்வீஸீரீ tஷீ நிணீறீறீமீக்ஷீஹ்
என்றழைக்கப்படும் சபையின் பொதுக் கருத்துடன் இசையும்
தன்மையை ஓர் இழையாகவும் ஒரு கலைஞனாக மாற்றுக்
கருத்தை முன்வைக்கும் பொறுப்புணர்வை இன்னொரு
இழையாகவும் அவர் ஆளுமையில் முரண்பட்டுப்
பிணைந்துள்ளன.
நீங்கள் முதன்முதலாக எந்தப் பத்திரிகையில் என்ன
எழுதினீர்கள்?
நான் தமிழில் எழுதிய முதல் எழுத்து அ. மார்க்ஸைக்
கிண்டலடித்து ‘சுபமங்களா’வில் எழுதிய கடிதம்தான்.
1993இல் அவர் ஐரோப்பாவிற்கு, பாத்திரம் கழுவித்
தெருக்கூட்டிக்கொண்டிருந்த தமிழர்களிடம் ஸ்பான்சர்
வாங்கி, பயணம் போயிருந்தார். ‘உண்மை + தூளிணிமை + மரபு
மீறாமை = பாசிசம்’ என்று அந்த அனுபவத்தைக்
கட்டுரையாக எழுதியிருந்தார். ஐரோப்பியச் சமூகமே
பாசிஸ்ட் சமூகம் என்றும் ஒவ்வொரு குடிமகனும் பாசிஸ்ட்
என்றும் எழுதியிருந்தார். மேலோட்டமான தகவல்களின்
அடிப்படையில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரைதான்
பாசிஸ்ட் தன்மையுடையதாக இருந்தது. நான்
அக்கட்டுரையைக் கிண்டல் பண்ணிக் கடிதம் எழுதினேன்.
எதிர்வினையாற்றினால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது;
பிறர் கேலி செளிணிவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
சகிப்பின்மையின் இலக்கணம் அ. மார்க்ஸ்.
அ. மார்க்ஸ் பல்வேறு நிலைகளில் விழிப்புடன்
செயலாற்றிக்கொண்டிருப்பவர். அவரைக் கேலி
செளிணிளிணிளிணிளிணிளிணியும் முயற்சியில் ஈடுபட்டது எந்த வகையில்
நியாயம்?
அ. மார்க்ஸ் நிறைய மாற்றுக் கருத்துக்களை
முன்வைக்கிறார். அந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப அவர்
நடக்கிறது கிடையாது. கருத்துச் சுதந்திரம் பற்றி நிரம்ப
எழுதுகிறார். ஆனால் கருத்துச் சுதந்திரத்தில் அவருக்கு
எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது. மாற்றுக்
கருத்துள்ளோரை அழிக்க நினைக்கும் பாசிச மனோபாவம்
அவருடையது. ஆந்திராவில் பத்திரிகை தாக்கப்பட்டால்
சிலிர்த்து எழுவார். மதுரையில் ‘தினகரன்’ தாக்கப்பட்டால்
மௌனம் பூண்டுவிடுவார். மட்டுமல்ல, அழகிரி
ஆதரவாளர்களால் ஞாநிக்கு எதிராக நடத்தப்பட்ட
கூட்டத்தில் கலந்துகொண்டு ‘தினகரன்’ தாக்குதல் பற்றி ஒரு
வார்த்தையும் பேசாமல் ‘கர்ஜித்துவிட்டு’ வந்தார். அதைத்
தொடர்ந்து, ‘கலைஞரைத் தாக்குவது திராவிட
இயக்கத்தையே தாக்குவது போன்றது’ என்று அவர் உதிர்த்த
வாக்கியம் பொன் எழுத்துக்களில் பொறித்துப்
பாதுகாக்கப்பட வேண்டியது. அவர் நடத்திய இதழ்களில்,
அரங்குகளில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம்
இருந்ததில்லை.
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
1 1
அ. மார்க்ஸின் நேர்மை சார்ந்தும் எனக்குச் சந்தேகம்
உண்டு. அவரிடம் ஆளிணிவாளருக்குரிய நேர்மை கிடையாது.
தன் கட்டுரைகளுக்கு ஆதாரமான பிரதிகளை அவர் பல
சமயங்களில் அங்கீகரிப்பது இல்லை. எல்லாம் சுய
கருத்துபோலப் பதிவுபெறும். ஓர் எடுத்துக்காட்டில்
மேற்கோளைத் திரித்துக் காட்டுவார். எந்தச்
சூழ்நிலையிலிருந்து சொல்லப்பட்டிருந்ததோ, அதிலிருந்து
பிளிணித்து எடுத்துக்காட்டுவார். அவருடைய கருத்துகளுக்கு
ஏற்றவகையில் வார்த்தைகளைப் பிடுங்குவார். ‘காந்தியின்
கடைசி 200 நாட்கள்’ நூலுக்குப் ‘புதிய புத்தகம் பேசுது’
இதழில் எழுதிய மதிப்புரையில் மேற்கோளின் அறம் பற்றி
நீட்டி முழக்கியிருந்தார் அ. மார்க்ஸ். ஒரு நண்பரிடம் அதைப்
படித்துக் காட்டினேன். சாத்தான் வேதம் ஓதுவது போல
இருக்கிறது என்றார் அவர்.
புதுமைப்பித்தன் பற்றிய ஆளிணிவில் அவர் கொஞ்சம்கூட
ஆளிணிவு நேர்மை இல்லாமல் செயல்பட்டார். பு.பி. மீது
பல்வேறு பொளிணிகளைச் சுமத்தினார். இலக்கிய
அடிப்படையில் அ. மார்க்ஸ் விமர்சனம் எதுவும்
செளிணியவில்லை. வக்கீல் மாதிரி, அங்கே இருந்தும் இங்கே
இருந்தும் சில வரிகளை எடுத்து வாதத்தில் முன்வைப்பார்.
அ. மார்க்ஸினால் கவனம் பெற்றப் படைப்பாளி யார்? அழிவு
வேலையை மட்டும்தான் அவரால் செளிணிய முடியும்.
இன்று தன் பதிப்பாளர் தன்னைக் காப்புரிமையில்
ஏமாற்றிவிட்டார் என்று புலம்பி எழுத்தாளர்களை ஒன்றுசேர
அறைகூவல் விடுத்துள்ளார். இது உண்மையென்றால்
அ. மார்க்ஸ§க்குக் கவித்துவ நீதி வழங்கப்பட்டுள்ளது என்றே
கூறுவேன். புதுமைப்பித்தன் மனைவியாருடனும் மகளுடனும்
முறைப்படி ஒப்பந்தம் செளிணிது, முழுப் பொறுப்புணர்வுடன்
பதிப்பித்து, காப்புரிமையையும் ஒழுங்காக வழங்கிய
காலச்சுவடுக்கு எதிராக, இளையபாரதியுடன் மேடை ஏறி
முழங்கியதை மறக்க முடியுமா? பு.பி., காப்புரிமைப்
பிரச்சனையில் பொதுச்சொத்து வாழ்க என்றார். இப்போது
தன் தனிச்சொத்துக்காக உரிமைக் குரல் கொடுக்கிறார்.
ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும், இந்திய
அரசியல் அமைப்பிலும் நம்பிக்கையற்ற இஸ்லாமிய
அடிப்படைவாத அமைப்புகளுக்கு அவர் அளித்து வரும்
விமர்சனமற்ற ஆதரவு இந்துத்துவத்திற்குச் சாதகமானதாகவே
அமையும்.
உண்மை, பொளிணி எல்லாம் கிடையாது என்று
அ. மார்க்ஸ் தத்துவம் பேசியது நினைவிருக்கும். இன்று
வாரம் ஒருமுறை பல்வேறு சிக்கலான பிரச்சினைகளின் முழு
உண்மையை அதிரடி விசிட்டுகள் மூலம் அறிந்து எந்தத்
தயக்கமும் குழப்பமும் இன்றி 100% அக்மார்க் உண்மையாக
அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.
அ. மார்க்ஸின் 30 ஆண்டு கால எழுத்துக்களையும்
பேச்சுகளையும் தொகுத்து வெளியிட்டால், அவை ஒன்றை
ஒன்று அடித்துக்கொண்டு சாகும். அந்த அளவுக்கு
முரண்பாடுகள் கொண்டவை அவர் கருத்துக்கள்.
ஊடகங்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள்
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இன்று ஊடகத்திற்கு
எதிராக என்ன செளிணிளிணிளிணிளிணிளிணிய முடியும்?
ஊடகத்தை மாற்றுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை.
இன்று ஊடகத்தை எப்படி அμகுவது என்பது
முக்கியமானது. ஊடகத்தை வெள்ளந்தியாக அμகுவது
ஆரம்பகட்ட மனநிலை. நாம் ஊடகத்தின் இன்னொரு
முகத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. ஊடக விமர்சனம் என்ற
போக்கை ஏற்படுத்துவதன் மூலம் புதிய பார்வையை ஏற்படுத்த
முடியும். ஆங்கில நாளிதழ்களில் இலக்கணப் பிழையாக
எழுத முடியாது. தமிழில் பிழைகள் மலிந்திட்ட நாளிதழ்
நடத்த முடியும். தமிழ் வாசகர்கள் அதைப்
பொருட்படுத்துவதில்லை. ஏற்கனவே இங்கு உருவாகியுள்ள
வாசகர்களுக்கேற்பப் பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.
அகில இந்திய அளவில் டாக்டர் தல்வார் மீதான
கொலைக் குற்றச்சாட்டு, பரபரப்பான செளிணிதியாக
இருந்தபோது அவரோட மகள் தீப்தி கொலை செளிணியப்பட்ட
கேசில் ஊடகங்கள் செயல்பட்ட விதம் குறித்தும்
கடுமையான சுய விசாரணை ஆங்கில ஊடகங்களில்
நடைபெற்றன. ஊடகங்கள் பரப்பிய கட்டுக்கதைகள்
ஊடகங்களிலேயே அம்பலப்படுத்தப்பட்டன. இங்கே தமிழில்
இதுபோல ஆயிரம் நிகழ்வுகள் இருக்கு. ஊடகங்களில் ஒரு
விவாதம்கூட நடந்ததில்லை. தமிழில் புலனாளிணிவு இதழ்கள்,
இதழியல் சீரழிவை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
பிரமிள் ஒரு காலகட்டத்தில் – நீங்கள் சிறுவனாக
இருக்கும்போது – உங்கள் வீட்டில்
தங்கியிருந்தார். அவருடனான
உங்கள் உறவு
எப்படியிருந்தது?
அ வ ரு ¬ ட ய
இ ய ல் பு
எப்படிப்பட்டது?
எ ங் க ள்
வீ ட் டு
ம £ டி யி ல்
பி ர மி ள்
மூ ன் று
மாதங்களுக்
கும் மேலா
கத் தங்கியி
ரு ந் த £ ர் .
அப்பாவுக்கு
அவர் மீது
மி கு ந் த
மரியாதை
இ ரு ந் த து .
அவர் ஒரு
விநோதமான
ஆள் என்பது
எனக்கு அந்த
வ ய சி « ல « ய
கருத்துச் சுதந்திரம் பற்றி
நிரம்ப எழுதுகிறார். ஆனால்
கருத்துச் சுதந்திரத்தில்
அவருக்கு எவ்விதமான
நம்பிக்கையும் கிடையாது.
மாற்றுக் கருத்துள்ளோரை
அழிக்க நினைக்கும் பாசிச
மனோபாவம் அவருடையது.
ஆந்திராவில் பத்திரிகை
தாக்கப்பட்டால் சிலிர்த்து
எழுவார். மதுரையில் ‘தினகரன்’
தாக்கப்பட்டால் மௌனம்
பூண்டுவிடுவார்.
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
1 2
தெரிந்தது. அவர் தரையில் ஊர்கின்ற எறும்பைப் பத்து
நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு அவர்மீது
ஈடுபாடு ஏற்படவில்லை; என் சகோதரிகள் அவருடன்
நன்றாகப் பழகினர். பின்னாட்களில் அவர் தங்கிய வீடுகளில்
குழந்தைகளை அவர் துன்புறுத்தியதில் பிரச்சினை
ஏற்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேன். எங்கள்
வீட்டில் அப்படி எதுவும் ஏற்படவில்லை. பிரமிள் வீட்டை
விட்டுப் போளிணிவிட்டார். அப்பாவுடன் அவருக்கு இருந்த
உறவு முறிந்துபோளிணிவிட்டது. அதுபற்றி அப்பா எங்களிடம்
எதுவும் சொல்லவில்லை.
என் மூத்த சகோதரிக்கு சுமார் 20 வயதில் திருமணமான
புதிதில், சென்னையில் அவருடைய கணவருடன் சினிமா
பார்க்கப் போயிருந்திருக்கார். பெண்கள் வரிசையில் கூட்டம்
குறைவாக இருந்தது என்று அவரை நிற்க வைத்து விட்டு,
கணவர் பக்கத்தில் ஏதோ வாங்கப் போயிருக்கார்.
அப்பொழுது பிரமிள் சற்றுத் தள்ளிப் போவதைப்
பார்த்தவுடன், வீட்டில் அவர் தங்கியிருந்த போது பழகிய
அதே உணர்வுடன், அவரை ‘மாமா’ என்று அக்கா
கூப்பிட்டிருக்கிறார். அக்கா கூப்பிடுவது, பிரமிள் கிட்ட
வருவது, பேசுவது, விலகிப்போவது . . . எல்லாம் அவருடைய
கணவர் பார்த்திருக்கிறார். சில நொடிகளில் கணவர் அருகில்
வந்தபோது, அக்கா குலுங்கிக்குலுங்கி
அழுதுகொண்டிருந்தார். அந்த ஒரு நிமிடத் தில் பிரமிள்
என்ன சொன்னார்? ஏன் அவர் அழுதார்? என்பதற்கான
காரணத்தைக் கடைசிவரை யாரிடமும் சொல்லவே இல்லை.
இதுபற்றிச் சில ஆண்டு களுக்கு முன்னர், என் சகோ தரியின்
மறைவுக்குப் பிறகு அப்பா என்னிடம் சொன்னார். அவர்
முகபாவம், குரல், தொனி எல்லாம் மனதில் பதிந்திருக்கிறது.
பிரமிளுக்கு நிறையத் திறமை இருந்திருக்கிறது. ஆனால்
அவருடைய இன்னொரு பகுதியை மறைக்க முயற்சி
நடக்குது. அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அதுபற்றி
எழுதினால் அதைக் கண்டனம் செளிணியச் சிலர்
முயலுகின்றனர். பிரமிளை இந்த அம்சங்களுடன்
சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். அவருடன் கூடுதலாக
ணீபீழீust பண்ணிய அவருடைய சமகாலத்து எழுத்தாளர்கள்
மாதிரி, இன்றைக்கிருக்கிறவர்களால் முடியுமா? அவரை
வீட்டில் வைத்துப் பார்க்க இவர்களால் முடியுமா?
பிரமிளையோ, ஜி. நாகராஜனையோ மிநீஷீஸீ ஆக மாற்றி
மிகைப்படுத்திப் பேசுகிற பலர், அவங்க கூடப் பழகியிருக்க
மாட்டார்கள்; பலர் நேரில் பார்த்திருக்கமாட்டார்கள். இப்ப
விக்ரமாதித்யனுக்கு வயசு அறுபது ஆச்சு. இவருக்கு 30 வயது
தாண்டிய பின்னரும் ஜி.என். வாழ்ந்துகொண்டிருந்தார். அவர்
ஜி. நாகராஜன் வாழ்ந்த காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறாரா
என்பது சந்தேகம். மதுரையில் ஒரு கூட்டத்தில் –
ஜி. நாகராஜன் மறைந்த பின்னர் – சுந்தர ராமசாமி
பேசும்பொழுது, கூட்டத்திலிருந்த விக்ரமாதித்யன்,
‘மதுரையில் ஜி. நாகராஜன் என்று ஒரு மகான் வாழ்ந்தார்,
நீங்க பார்த்திருக்கீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். இந்த
மாதிரி எழுத்தாளர்களைத் தூக்கிப் பிடிக்கிறவர்களுக்கு,
அவர்களுடைய படைப்பு சார்ந்த உறவு என்பது ஒரு
பகுதிதான். பெரும் பகுதி மோஸ்தர் சார்ந்தது.
உங்கள் வீட்டிற்கு வந்துபோன வேறு
எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்.
நான் சின்னப் பையனாக இருந்தபோது கிருஷ்ணன்
நம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். ரொம்ப
நகைச்சுவையாகப் பேசுவார். பூதப்பாண்டியில் இருந்த
அவருடைய வீட்டுக்கு நாங்கள் எல்லோரும் போவோம்.
அவங்க வீட்டுக்குப் பின்னால் ஆறு ஓடியது. அருமையான
ஊர். அவர் தன்னுடைய பிள்ளைகள் பற்றிய கதைகளைச்
சொல்லுவார்; வேடிக்கையாக இருக்கும். பின்னாளில்
அவருக்குப் புற்றுநோளிணி வந்து ஒரு காலை எடுத்துவிட்டனர்.
அவர் எங்க வீட்டுக்கு வந்து பொளிணிக் காலைக் கழட்டி
வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து எனக்குப்
பெரிய அதிர்ச்சி. அவர் ‘. . . ம் . . . பக்கத்தில் வா. . .
இதுக்கெல்லாம் அதிர்ச்சியடையாதே. எங்கள் ஊரில்
பாண்டி விளையாட்டில் என்னை ஜெயிக்கறதுக்கு ஆளே
இல்லை’ என்றார். அவருடைய நகைச்சுவை ததும்பும்
இயல்பும் கடைசிவரை மாறவில்லை.
நாகராஜன் பற்றிய நினைவைச் சொல்லுங்கள்.
ஒருமுறை ஜி. நாகராஜன் எங்கள் வீட்டிற்கு வந்து
தங்கியிருந்தபோது, நான் ஏழாம் வகுப்புப்
படித்துக்கொண்டிருந்தேன். இப்பக் ‘காலச்சுவடு’ அலுவலகம்
இருக்கிற முன் அறையில்தான் நான் இருந்தேன்.
ஜி. நாகராஜன் வீட்டுக்கு முன்னால் உள்ள வராண்டாவில்
படுப்பதற்காகப் படுக்கை, குடிக்கத் தண்ணீர்ச் சொம்பு
வைக்கப்பட்டிருக்கும். முன்கதவைப் பூட்டுவது கிடையாது.
அவர் பின்னிரவில் வந்து படுத்துக்கொள்வார்.
ஒருநாள் லண்டனுக்குப் போளிணிவிட்டு வந்தது பற்றி
அப்பாவிடம் ஒரு மணிநேரம் விலாவாரியாகச்
சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில் ஏறியது,
கண்டக்டர் பேசியது என்று லண்டன் வாழ்க்கை பற்றி
நுட்பமாகச் சொல்லியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அழுக்குச் சட்டை, தாடி, நீளமான நகங்களுடன் இந்த ஆள்
எப்படி வெளிநாட்டுக்குப் போளிணிவிட்டு வந்தார் என்று
யோசித்தேன். எழுபதுகளில் லண்டனுக்குப் போவது பெரிய
விஷயம். அப்படிப் போனவர்களை ‘ஃபாரின் ரிட்டர்ன்’
எனப் பெருமையாகச் சொல்லுவார்கள். அவர் எழுந்து
போனபிறகு அப்பாவிடம் கேட்டேன். ‘நாகராஜன் லண்டன்
போனதில்லை’ என்று சாதாரணமாகச் சொன்னார். ரொம்ப
அதிர்ச்சியாக இருந்தது.
ஜி. நாகராஜன் என்னிடம் ரொம்பப் பிரியமாக
இருப்பார். என்னிடம் மட்டுமல்ல, குடும்பத்தினர்
அனைவரிடமும். ஒரு முறை என் அத்தை மகளைத் தெருவில்
பார்த்ததும் விசாரித்துவிட்டு ஓடிச்சென்று பூ வாங்கிக்
கொடுத்திருக்கிறார். அவர்தான் எனக்குச் ‘செஸ்’
விளையாட்டைச் சொல்லித்தந்தது. என்னுடைய காயை
வெட்டப்போகிறேன் என்று முதலிலே சொல்லிவிடுவார். நான்
காயை மாற்றி வைத்துக்கொள்வேன். நான் தோற்கிற மாதிரி
……………………………………………………………………………………………………………………………………………………..
உயிர் எழுத்து ஜனவரி 2009
1 3
இருந்தால், ‘ம். . . போதும்’ என்று சொல்லி, மீண்டும் புதிதாக
விளையாட்டைத் தொடங்குவார்.
ஜி. நாகராஜன் காலையில் நான்கு மணிக்கு எழுந்து
இரும ஆரம்பித்தால் விடாமல் தொடர்ந்து இருமுவார். அப்ப
எங்கள் வீட்டில் சமையல் வேலையில் ஹரிகர ஐயர்
இருந்தார். அவர் காலையில் முதல் வேலையாகப் பாலைக்
காளிணிச்சிக் காப்பிப் போட்டுக்கொண்டுபோளிணி நாகராஜனுக்குக்
கொடுப்பார். அப்புறம்தான் இருமல் அடங்கும். அப்புறம்
ஆறுமணிக்குமேல் எழுந்து வந்து பார்த்தால் சிகரெட்
பாக்கெட்டையும் கஞ்சாவையும் வைத்துக்கொண்டு
உட்கார்ந்திருப்பார். அந்த வயசில் அது கஞ்சா என்று
எனக்குத் தெரியாது. அவரிடம் அது என்ன என்று கேட்டால்,
‘இருமலுக்கு மருந்து’ என்பார். சிகரெட்டை எடுத்து மெல்ல
உருட்டுவார். புகையிலை வெளியே வந்துவிடும். அதை ஒரு
காகிதத்தில் வைத்துக் கஞ்சாவைக் கசக்கிக் கொஞ்சம்
புகையிலைத் தூளுடன் சேர்த்து, சிகரெட் காகிதத்துக்குள்
திணிப்பார். அது தானாக உள்ளே ஓடுற மாதிரி இருக்கும்.
ஒரு பாக்கெட் முழுக்கச் சிகரெட்களை நிரப்பிக்கொண்டு
வெளியே கிளம்புவார். அப்புறம் ராத்திரிக்குத்தான் வீட்டுக்கு
வருவார்.
தமிழில் நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன.
‘காலச்சுவ’டில் ஏன் புத்தக மதிப்புரைக்கு
முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
புத்தக மதிப்புரைக்காக ஓர் இதழுக்கு ஐந்தாறு பக்கங்கள்
ஒதுக்க வேண்டும். ‘காலச்சுவடு’ காலாண்டு இதழாக
இருந்தபோது, அது முடிந்தது. மதிப்புரையாளர்களின்
ஆர்வமின்மையும் ஒரு பிரச்சனை. அப்ப மதிப்புரை
எழுதியவர்கள் இப்ப எழுதுவதில்லை. அப்புறம் இப்ப யார்
மதிப்புரை எழுத முன்வருகின்றனர் என்பதை அடையாளம்
காணமுடியவில்லை. பதிப்பகத்தினர் எங்களுக்குப்
புத்தகங்களை அனுப்பி எங்களால் மதிப்புரை போட
முடியாததனால் வருத்தப்படுகின்றனர். ஆனால் இப்ப என்ன
செளிணியுறது என்று தெரியவில்லை. பத்திரிகையைப்
பொறுத்தவரை புத்தக மதிப்புரை என்பது முக்கியமான
விஷயம். ஒரு மாற்று இதழ் கண்டிப்பாக அதைச் செளிணிய
வேண்டும்.
‘காலச்சுவடு’ இதழ் பற்றியும் உங்களைப் பற்றியும்
தொடர்ந்து முன்வைக்கப்படும் கண்டனங்கள்/
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
அவை ஒருவகையில் ‘காலச்சுவடு’
பிரபலமடைவதற்கு ஆதாரமாக உள்ளன என்று
கூறலாமா?
‘காலச்சுவ’டைத் தொடர்ந்து பிரசுரிப்பது என்பது
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே இருக்கிறது. தாக்குதல்,
புறக்கணிப்பு என்பது இலக்கியக்குழு முரண்களிலிருந்து
பின்னர் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பரவி இன்று
தமிழக அரசுவரை வளர்ந்திருக்கிறது. மேட்டுக் குடிகள்
தமக்குள்ளே பேசிக்கொள்வதாகக் கூறி, மாற்று இதழியல்
இயக்கத்தைப் புறக்கணித்தவர்களால் இன்று அது
பிரமிளையோ,
ஜி.நாகராஜனையோ மிநீஷீஸீ ஆக
மாற்றி மிகைப்படுத்திப்
பேசுகிற பலர், அவங்க கூடப்
பழகியிருக்க மாட்டார்கள்;
பலர் நேரில் பார்த்திருக்க
மாட்டார்கள்.
விக்ரமாதித்யனுக்கு 30 வயது
தாண்டிய பின்னரும் ஜி.என்.
வாழ்ந்துகொண்டிருந்தார்.
அவர் ஜி. நாகராஜன் வாழ்ந்த
காலத்தில் அவரைப்
பார்த்திருக்கிறாரா என்பது
சந்தேகம்.
உயிர் எழுத்து ஜனவரி 2009
……………………………………………………………………………………………………………………………………………………..
1 4
முடியவில்லை.
முன்னர் இந்த வெறுப்பு தூக்கமற்ற இரவுகளைத் தந்தது.
இப்போது அதிகம் பாதிப்பு இல்லை. நாகர்கோவில் சற்றே
ஒதுங்கியிருப்பது சில்லறைச் சர்ச்சைகளைத் தவிர்க்க
உதவுகிறது. அதிகாரத்தின் சாளிணிவுகள் நண்பர்களிடையே
ஏற்படுத்தும் நிலைகுலைவுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சி
இப்போது மனதைக் கசக்கிக் கொண்டிருக்கிறது.
கண்டனங்கள் வழி ‘காலச்சுவ’டின் பெயரை அறிய
வருகிறவர்கள் அதைப் படித்துப் பார்த்தால் எவ்வளவோ
நன்றாக இருக்கும்.
காலச்சுவடு பதிப்பகத்தை வெறுமனே வியாபாரம்
என்று கருதுகிறீர்களா?
காலச்சுவடு என்றுமே வெற்றிகரமான வியாபாரமாக
இல்லை. நஷ்டமாகவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும்
வளர்ந்துவருகிறது. துவங்கிய காலம் முதலே என் மீது
வியாபாரி என்ற குற்றம் சாட்டப்பட்டபோது நான் மறுத்தது
இல்லை. வியாபாரத்தைத் தொழில் திறனுடன், தொழில்
அறத்துடன் செளிணிதால் அது சமூகத்திற்குப் பயனுடையது.
வியாபார நோக்கம் இன்றி மேற்கில் பதிப்பகங்கள் இல்லை.
சிறந்த புத்தகங்கள் வெளியாகவில்லையா? அங்கு பண்பாடு
கொழிக்கவில்லையா?
தமிழ் புத்தகத் தொழிலின் வளர்ச்சியைப் பொருளாதார
அடிப்படையில் மட்டும் விளக்கி விட முடியாது. தமிழக
மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாட்டை ‘அதிகாரப் போட்டி’
என்ற அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடியும்.
இத்தகைய போட்டி தனிநபர்களை ஒட்டியும். பல்வேறு
சமூகக் குழுக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. காலச்சுவடு
வியாபாரமாகக் கொழிக்கிறது என்று நம்பிப் பதிப்பகம்
துவங்கியவர்கள் அவ்வாறு இல்லை என்பதை
அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டார்கள். பலருக்கு இன்று
தேள் கொட்டிவிட்டதை வெளிக்காட்ட முடியாத நிலை.
‘காலச்சுவடு’ பத்திரிகையுடன் பதிப்பகம்
தொடங்கியது முன்கூட்டியத் திட்டமா?
பத்திரிகை ஆரம்பிக்கிறது முன்கூட்டித் திட்டமிட்டு
நடந்த விஷயம். பதிப்பகம் அப்படிக் கிடையாது. சு.ரா.வோட
புத்தகங்களை க்ரியா பதிப்பகம்தான் வெளியிட்டது. அதில்
அவர் பங்காளராகவும் இருந்தார். அவரோட புத்தகங்களில்
ஏதாவது ஒன்றுதான் மார்க்கெட்டில் கிடைத்தது. அரசாங்க
நூலகங்களுக்கு க்ரியா பதிப்பகம் நூல்களைத் தராது. நூலகம்
போகிற வாசகர்களுக்குத் தனது புத்தகம் கிடைக்கவில்லையே
என்று அப்பா ஆதங்கப்பட்டார். அவருடைய புத்தகங்கள்
எல்லாவற்றையும் வெளியிட வேண்டுமென க்ரியா
ராமகிருஷ்ணனுடன் என்னைப் பேசச் சொன்னார். ‘அது
சாத்தியமில்லை’ என்று ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார்.
‘க்ரியா’ பதிப்பகத்தின் மீது சு.ரா.வுக்குப் பல
விமர்சனங்களுமிருந்தன. க்ரியாவை விட்டு வெளியே வந்து
தனது புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டார். மதுரை
சிவராமனின் உறவினர் விஜயகுமார் வர்ஷா பதிப்பகம்
துவங்கி சு.ரா.வின் புத்தகங்களை வெளியிட முயன்றார். சில
புத்தகங்களை வெளியிட்டதுடன் அப்பதிப்பகம்
செயல்படவில்லை.
இந்தச் சமயத்தில் நாமே புத்தகங்களைப் போட்டால்
என்ன என்று தோன்றியது. பத்திரிக்கை உறுதியாக லாபம்
தராது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான்
கணக்குப்போட்டுப் பார்த்து எவ்வளவு நஷ்டம் வரும், அதை
எப்படித் தாங்குவது என்று திட்டமிட்டு
நடத்திக்கொண்டிருந்தேன். பதிப்பகத்தை லாபகரமாக நடத்தி,
பத்திரிக்கை நஷ்டத்தை ஈடுகட்டலாம் என்று நினைச்சேன்.
முதலில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘107 கவிதைகள்’
புத்தகங்கள் வெளியிட்டோம். அப்புறம் ஜி. நாகராஜன்
படைப்புகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம்.
சி. மோகன் பதிப்பித்து உதவினார். அதுக்கு நல்ல வரவேற்பு
இருந்தது. முதலில் வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு
புத்தகங்கள் போட்டோம். 2000ஆம் ஆண்டில் எட்டுப்
புத்தகங்கள் வெளியாயின. இதுவரை போட்ட ஒரு
புத்தகம்கூட லாபம் வரும் என்று போட்டது இல்லை;
நஷ்டம் வரும் என்று போடாமல் இருந்ததும் இல்லை.
சூழலுக்கேற்ற மாதிரி புத்தகங்களை விற்பனை செளிணிகிறோம்.
ஆனால் கடுமையான உழைப்பின் மூலம் புத்தகங்களை
நேர்த்தியாக வெளியிடுகிறோம். அது வாசகர்களுக்குப்
பிடிச்சிருக்கு.
செம்மொழித் திட்டத்தை விமர்சித்துக்
‘காலச்சுவ’டில் எழுதப்பட்ட தலையங்கத்தின்
பின்விளைவுகள் பற்றி உங்களுக்கு முன்னரே
தெரியுமா?
நிச்சயம் தெரிந்துதான் எழுதினோம். எல்லோரும்
தனிப்பட்ட முறையில் பேசும்போது, பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் பொதுக்கருத்துகள்தான் அவை. ஆனால்
அதையே எழுத்தில் பதிவு செளிணியும்போது, துணிச்சலான
முயற்சியாகின்றது. இது நம்ம சூழலின் சகிப்பின்மையைக்
காட்டுகிறது. இத்தலையங்கத்தை முகாந்திரமாகக்கொண்டு
நூலகங்களில் ‘காலச்சுவடு’ தடை செளிணியப்பட்டது.
எங்களுக்கு ஆதரவாக மாற்று இதழ்கள் எதுவும் ஒரு வரிகூட
இன்னும் எழுதவில்லை. பண்பாட்டுத் தளத்திலிருந்து
அரசியலுக்குச் சென்றிருப்பவர்களுடன் நல்லுறவைப் பேμம்
சபலம் பலரையும் வாட்டிக்கொண்டிருக்கிறது.
‘காலச்சுவடு’ தமிழில் ஏற்படுத்திய முக்கியமான
பாதிப்புகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
இன்று தமிழில் தீவிர வாசகர் வட்டம்
விரிவடைந்துள்ளது. மாற்றுப் பதிப்பகம், முக்கியமான
புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சிறுபத்திரிகைச் சூழல் வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய
சூழல் உருவாக்கத்திற்குக் ‘காலச்சுவடு’ ஒரு காரணம்.
பல்வேறு மாற்றுக் கருத்துகளைப் பதிவுசெளிணிது கருத்துரிமை
சார்ந்த புதிய போக்கினை அறிமுகப்படுத்தியுள்ளதும்
முக்கியமானது என்று கருதுகிறேன்.
•
Recent Comments