Archive

Posts Tagged ‘Maithreyan’

Roots of Capitalism – Maithreyan

October 7, 2008 Leave a comment

இந்தச் செய்தி மருந்து தீர்ந்து போன அமெரிக்க ராணுவத்தைச் சுட்டுகிறதா, அல்லது உலகப் போலிஸ்காரனாக இருக்க அமெரிக்காவுக்கு இனி அரிப்பு இல்லை என்பதைச் சுட்டுகிறதா, அல்லது இதில் தனக்கென்ன ஆதாயம் என்று அலட்சியம் காட்டும் அமெரிக்க வழக்கத்தைக் காட்டுகிறதா?

இத்தனை நூற்றாண்டுகள் கழித்து மறுபடியும் கடற்கொள்ளைக்காரர்கள் இந்திய மாக்கடலில் ஆட்சி செய்கிறார்கள் என்பது முதலியம் மறுபடி கொள்ளையர்களால்தான் வழிநடத்தப்படும் என்று சுட்டுகிறதா? சீனாவில் ஏற்கனவே அப்படித்தான்.

தமிழ்நாட்டில் கூட அப்படித்தான்.

அல்பேனியா, ரஷ்யா, சூடான், நைஜீரியா என்று பல நாடுகளில் கொள்ளையர் ஆட்சி செய்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உலகமே அப்படித்தான் ஆகப் போகிறதா என்பதுதான் கேள்வி.

இத்தினியூண்டு கடற்கொள்ளைக்காரர்களை ஏதும் செய்ய முடியாத அமெரிக்கக் கடற்படையை யார் இனி சட்டை செய்வார்கள்? – Could Mercenaries Return as Pirate Foes? | Danger Room from Wired.com

மைத்ரேயன்: வரலாற்று உண்மைகளைக் கதைக்காகத் திரித்தால் அதைப் பொறுக்கலாமா?

October 6, 2008 Leave a comment

நல்ல கேள்வி.

இந்தியாவில் வரலாற்றையே கதை போலத்தான் திரிக்கிறார்கள்.

நாங்களெல்லாம் கதைகளையே அதுவும் எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையே மாற்றி வேறு கதையாகச் சொல்கிறதை எல்லாம் உணமை வரலாறு என்றே அல்லவா சொல்லித் திரிகிறோம். இவரென்னவோ நிஜ வரலாற்றைச் சற்று மாற்றி அதிகப்படுத்தி ரொமாண்டிக் ஆக்கிக் கதை சொல்லி விட்டார்கள் என்று புலம்புகிறார்.

ஆனால் கதைக் கரு யூதர்கள் அடைபட்ட கொடுமைப் பாசறை பற்றியது என்பதால் இந்தப் புலம்பலுக்கு சற்று கனம் கூடவோ என்னவோ?

‘Life is beautiful’ என்று ராபர்டோ பெனைனி என்னும் இதாலியக் கோமாளி நடிகர் எடுத்த படத்தை ஒரு இரண்டு வரியில் தாக்கி இருக்கிறார் பாருங்கள் அதை நான் அந்தப் படம் பார்க்காத போதும் ஆமோதிக்கிறேன். ஏனெனில் அந்த நடிகர் இயக்கி நடித்து எடுத்த ஒரு மஹா டப்பாப் படமான ‘பினொக்கியோ’ என்ற படத்தில் நான் அமர்ந்து பட்ட துன்பம் இருக்கிறதே அதை மறக்க முடியாது. சீனத் தண்ணீர் வதை என்று சொல்வார்கள், அது போல இருந்தது.

அதைப் போய் என் மக்கள் அப்படி விழுந்து விழுந்து பார்த்தார்களே என்று வருத்தப்பட்டேன், வெளியே வந்ததும் சொன்னார்கள், ‘அப்பா இது ஒரு படு தண்டப் படம்’ என்று. காதில் இன்னிசையாய் இருந்தது.

Literary Review – David Cesarani on The Boy in the Striped Pyjamas


வரலாற்றுத் திரிபைப் பற்றி விசித்திரமான ஒரு அறிவியல் நவீனம் இதோ. அதாவது அதன் கதைச் சுருக்கம், விமர்சனம்.

இதன் கதைப் போக்கைப் பார்த்தால் 14 இலிருந்து 24 வரை உள்ள இளைஞர்களுக்குக் குறிவைத்து எழுதப்பட்ட நாவல் போலத் தெரிகிறது.

ஆனால் அறிவியல் நவீனம் என்பதை ஒரு oxymoron என நீங்கள் கருதுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், அதனால் தயங்குகிறேன்.

new haven review : New Haven Review: “Shriek: An Afterword :: By Jeff VanderMeer (Tor Books, 2006)”


அது ஒரு நாவல்.

சைமன் சாமா என்னும் வரலாற்றாளர் பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார், டெலிவிஷனுக்கு ஆவணநாடகங்களும் தயாரிக்கிறார். என்னவெல்லாமோ விதங்களில் ஊடகங்களில் உலவுகிறாராம்.

அவருடைய சமீபத்துப் பேட்டி ஒன்று இதோ.

இதுவும் ஒரு விதத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது, திரித்துப் பார்ப்பதல்ல.

The history master – Simon Schama interview – Scotsman.com Living: “Dazzling, multi-disciplinary American history that frequently floods into contemporary politics.”

யு ட்யூப் இலவசப் படங்களின் தாக்கத்தால் கலவிப் படத் தயாரிப்பாளர்களில் பாதிக்கு மேல் திவால்

October 6, 2008 Leave a comment

யு ட்யூப் அரசியல்வாதிகளுக்கு நல்ல வேட்டு வைக்கிறது என்று நாம் அறிவோம். பல இனவெறிய ரிபப்ளிகன் பிரமுகர்களின் அரசியல் வாழ்வு கடந்த பல வருடங்களில் காலியானது யு ட்யூப் அதிரடி வைத்தியத்தால்.

இன்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்திப்படி கலவிப் படம் (ஒ.கே. பலான படம்) தயாரிப்பாளர்களில் ஏராளமான பேர் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் (சாரி, சட்டை, பாண்டைக் காணோம்) என்று துறையை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்களாம்.

யு ட்யுப்காரர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்னும் வேறு யாரை எல்லாம் வேண்டாத இடங்களில் இருந்து அகற்றப் போகிறது இந்த சாதனம்? ஜனநாயகம் சில நேரம் சில இடங்களில் சரியான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும் போலிருக்கிறது.

FT.com / Arts & weekend / Magazine – Rude awakening: “They are among the thousands of pornographic actors and film-makers living and working in the Los Angeles area: the sex professionals who turn private passions into everyday paid employment.”

அமெரிக்க வாக்காளர் மீது பரிதாபப்படுங்கள் – Maithreyan

October 3, 2008 Leave a comment

அமெரிக்காவைப் பார்த்து விட்டுத்தான் பொத்ரியோ (baudrillard) ஊடகம்தான் நிஜம், வேறு நிஜம் ஏதும் கிடையாது என்று ஒரு அறிக்கை விட்டு அறிவு ஜீவிகளுக்குப் பெரிய எரிச்சலையும் குதூகலத்தையும் ஒரே நேரம் உருவாக்கினார் எனபது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் கீழே இந்தத் தேர்தலில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியை ஒருவர் வருணித்திருக்கிறார். எத்தனை தூரம் வெறும் பிம்பங்களின் அடுக்குகளுக்குப் பின்னே இந்த வேட்பாளர்கள் ஒளிந்து கொண்டு மக்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் என்று பாருங்கள்.

இதனால் நான் ஜனநாயக முறையைத் தூர எறிந்து விட்டு சோவியத் சமுகத்தை நாடப் போகிறேன் அல்லது சொல்கிறேன் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். இதிலேயே உணமையைக் காண்பது இத்தனை துன்பமாக இருக்கிற்தென்றால் சோவியத் சமூகங்களில் உண்மையின் வாசனையை எங்காவது பிடித்தால் கூட குலாக்/ சைபீரியச் சிறை அல்லது துப்பாக்கிச் சனியனைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்தக் கண்ணறாவியே (ஜனநாயக்ச் சாக்கடையே) பரவாயில்லை என்கிறேன். என்றாலும் என்ன விதமான சாக்கடை என்று தெரிந்து கொள்வது நம் சாவு எதனால் என்றாவது தெரிந்து கொள்ள உதவும்.

ரசாயனக் குட்டையா, அணுக்கதிரிய வீச்சா, வெறும் மூளைஜுரக் கொசுக்களின் தாக்குதலா என்று தெரிந்து கொள்வது ஆயிரத்தில் ஒருவராவது தப்பிப் பிழைக்க உதவலாம் இல்லையா?

A Billion Little Pieces | The New York Observer: “Get Out the Ritalin! It’s the Attention Deficit Democracy: It’s Wall Street to McCain to Letterman to Palin to Couric to Biden to Obama; ‘You’re Sitting There Watching McCain Get Makeup Put on His Face,’ Says Dave Writer”