Archive
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே.
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே
ஆசிரியர்–ஆர்.பொன்னம்மாள்.
62 தலைப்புகளில் அற்புதமான விஷயங்கள். அமரசிம்மன் தான் எழுதிய எல்லா புஸ்தகங்ககளையும் நெருப்பிலே எரிக்கின்றான் என்று கேள்விப்பட்டு ஆதிசங்கரர் ஒடிவந்து அவன் கையிலுள்ளதைப்பிடுங்கினார். அது நிகண்டு.
“ஏன் இப்படி செய்தே?” என்று கேட்டார்.
“உங்க கிட்டே நான் வாதப் போரிலே தோத்துப் போய்ட்டேன். இனிமேல் என் நூலை யார் மதிப்பார் அவமதிக்கிறதை விட அழியறது மேலல்லவா?” என்று அவனுக்கு சமாதானம் சொன்னார்.
இரண்டு பேருக்கு மான தர்க்க விபரத்தை 49ம் அத்தியாயம் சொல்கிறது.
அலட்சியம்ப் படுத்தப்பட்ட கங்கேசர் காசிக்குப் போய் படித்து கங்கேச மித்ர ராகத் திரும்பிவந்தவர் “நாஹம் கங்கா” என்று சமிஸ்கிருத ஸ்லோகம் இயற்றி மாமனார் வீட்டவரை ஸ்தம்பிக்க வைத்த வரலாறும் அழகு பட சொல்லப் பட்டிருக்கிறது.
உபநிஷத் கதையான ஜானுஸ்ருதி கர்வப்பட கூடாது என்பதை உணர்த்துகிறது. ஏறு அழிஞ்சில் என் கிற மரத்தின் காய் முற்றினவுடன் கீழே விழுந்து உடைந்து, அதன் விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியில் நகர்ந்து நகர்ந்து தாய் மரத்தில் ஒட்டிக் கொண்டு கொஞ்ச நாளில் மூல மரத்தில் மறைந்து விடுவது போன்ற அபூர்வமான உபமானங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
சாதக வர்மன் என்கிற அரசர் பாகவதம் சொன்ன குருவிடம் “ஏழு நாட்காளில் பரிட்சித்துவுக்கு மோட்சம் கிடைச்சது; எனக்கு ஏன் கிடைக்கலே? நீங்க சுகப்பிரம்மம் மாதிரி சிரத்தையா சொல்லலையா?” என்று குடைந்திருக்கிறார்.
இந்த கேள்விக்கு மறு நாள் குருவின் பேத்தி இரண்டு விதமான பதில்களைச் சொல்லியிருக்கிறாள். அதை 57-வது அத்தியாயத்திலே படிக்கலாம்.
62-வது அத்தியாயத்திலே அசுவினி தேவர்கள் பண்ணின ஏகப்பட்ட சமாசாரம் இருக்கு. அசுவினி தேவர்களை வேண்டிக் கொண்டால் ஒநாய் வாயிலே போன குருவி கூட பிழைத்துக் கொள்ளு மென்று கோஷா காஷுவதி என்கிற பெண் பாடி வைச்சிருக்கா. அசுவினி தேவர்கள் தேவலோக மருத்து வர்கள். கோஷாவுடைய பெருவியாதியை அவர்கள் குணப்படுத்தியிருக்கிறார்கள்.
அங்கோல தைலத்தை மாங் கொட்டையிலே நன்னாத்தடவி நிலத்திலே நட்டா உடனே முளைவிடும், மளமள வென்று வளரும் என்கிறது 51ம் அத்தியாயம்.
எது எப்படியோ! இந்த நுலைப் படிச்சு முடிச்சதும் மனம் பண் படுகிறது. நல்ல எண்ணங்கள் என்ற விதை விழுந்து உடனே முளை விடுகிறது, இந்தப் புத்தகம் தான் அங்கோலத்தைலம். நம் இதயம் தான் சத்தான மாங்கொட்டை. அதில் நன் செயல்கள் என்ற மாங்கனிகள் கொத்துக் கொத்தாய் காய்க்கும்.
Recent Comments