7ஜி ரெயின்போ காலனி
அதிகாலையில் எழுந்து பால் வாங்கப் போவது மிடில் க்ளாஸ் குடும்பங்களின் பொறுமையை சோதிக்கும் போக்கு. முதல் காட்சியில் சோபாவில் நன்கு நிமிரவைக்கும் படம், தூங்க விடாமல் தொடர்கிறது. செய்ய மறந்த, சொல்ல மறுக்கின்ற, ‘தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்‘ நிகழ்வுத் தொகுப்புகளின் மூலம் புன்முறுவலிடையே நகர்கிறது.
‘ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ… அவளின் தங்கை இருக்கிறதே‘ போன்ற பாய்ஸ்தனங்களை ஷங்கரின் நுனிநாக்கு பீட்டர் விடாமல் மண்ணின் மணத்தோடு சொல்லும் படம். ‘எரியும் கடிதம் உனக்குத் தந்தேன்‘ நாயகிக்கு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
7ஜி ரெயின்போ காலனி என்னும் ‘மின்னலின் ஒளியைப் பிடிக்க மின்மினிப்பூச்சி (என)க்குத் தெரியவில்லை‘. ‘நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி‘ என்பதாக இந்தப்படம் ‘மௌன ராகம்’ போல், ‘மின்சாரக் கனவுகள்’ போல், ‘சி.நே.சி.ம.’ போல் அழியாத கோலம் இட்டிருக்கிறது!
நன்றி: Dhanush-Aishwarya Marriage Reception Gallery (மார்க்கம்)
Recent Comments